Saturday, August 23, 2008

பரிசு!

அன்று ஒரு நாள்...
``அண்ணி அண்ணி... இந்தாங்க, நான் கேரளா டூர் போனப்ப உங்களுக்காகவே தேடி வாங்கி வந்தேன்'' என்று தான் வாங்கி வந்த தோடு, கம்மல்களை நீட்டினாள் சுந்தரின் தங்கை சசி...
``இந்த தோடு, கம்மல்தான் இங்கேயே கிடைக்குதே, இதை கேரளாவிலிருந்து வாங்கிட்டு வரணுமா'' என்று அலட்டிக் கொண்டாள் சுந்தரின் மனைவி பானு.
இதைக் கேட்டும் கேட்காததுபோல் இருந்தான் சுந்தர். பல நாட்களுக்குப்பிறகு...
``இந்தாங்க மாமா உங்களுக்கு மிகவும் பிடிச்ச மெலோடி ஹிட்ஸ்'' என்று சிங்கப்பூரிலிருந்து திரும்பிய பானுவின் தம்பி கார்த்தி சில சி.டி.களை நீட்டினான்.
``இந்த சி.டி.தான் இங்கேயே கிடைக்குதே'' என்று அலட்டிக்கொண்டாள் பானு.
இதுதான் சமயம், இவளுக்கு சரியான பாடம் புகட்ட என்று எண்ணிய சுந்தர்,
``அவங்க சந்தோஷமா இருக்கவேண்டிய இடத்துல நம்மளயும் சந்தோஷப்படுத்தணும்னு நினைச்சு வாங்கிட்டு வரதை குறைகூறக்கூடாது. பொருளைப் பார்க்காதே. வாங்கிட்டு வந்த மனசப் பாரு'' என்றான்.
பானுவின் மனதில் ஒரு ஓரத்தில் சுருக்கென்றது..

0 comments: