ஐபாட் ஸ்பீக்கரை காதில் செருகியபடியே சமையலைக் கவனித்துக்கொண்டிருந்த மனைவி பத்மாவைப் பார்க்கப் பார்க்க பாஸ்கருக்கு எரிச்சலாக வந்தது.
அவளைக் காதலித்து மணந்தவன் அவன். பெரிய சங்கீத வித்வானான தந்தையைப் பகைத்துக்கொண்டு பதிவுத் திருமணம் செய்துகொண்டவனுக்கு அவளிடம் பிடிக்காத ஒரே விஷயம் இது ஒன்றுதான்.
லேசாய் சொன்னால் கேட்பதாயில்லை. அன்றைக்கு சண்டை பெரிதாகிவிட்டது. ``அப்படி என்ன எப்பவும் பாட்டு வேண்டிக் கெடக்கு?''
அவள் சொன்னாள் : ``உங்கப்பாவோட சண்டை போட்டுட்டு அவர் மேல உள்ள கோபத்தில் அவர் சம்பந்தப்பட்ட எந்தப் பொருளைக் கண்டாலும் வெறுக்கறீங்க. ஆனா நானோ ஆர்வத்தோட அவர்கிட்ட சங்கீதம் படிக்க வந்து அங்கே உங்களைச் சந்திச்சு காதலிச்சுக் கல்யாணம் செஞ்சிக்கிட்டேன். அவரோட உயர்ந்த இசையைக் கேட்காம என்னால இருக்க முடியலே. அதான் உங்களுக்குக் கேட்காத விதத்தில் மாமாவோட பாட்டைக் கேட்டு ரசிக்கிறேன். தப்பாங்க?''
பாஸ்கருக்குக் கோபம் வரவில்லை..
Saturday, August 23, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment