Saturday, August 23, 2008

எப்போதும் கொஞ்சிக்குலாவி !

கேசவன் எதற்கெடுத் தாலும் மனைவியை கொஞ்சிக்கொண்டே இருந்தான். இரண்டு மாதம்தான் ஆகிறது. புதுப்பெண்டாட்டிதான். நேரம் காலமே இல்லாமல் இப்படி என்று சந்தோஷச் சங்கடமாக இருந்தாலும் பூரணிக்குப் பெருமையாக இருந்தது.
``என்னங்க நீங்க. வீட்டுல அத்தையும் மாமாவும் இருக்கறப்ப இப்படியா என்னைத் துரத்திட்டே இருப்பீங்க.''
``அதனால என்ன. நீ என் சர்க்கரைக்கட்டி.''
``ச்சீய்''
வெளியே வந்தான். செல்பேசி அழைத்தது. எடுத்தான்.
``என்னடா ரொம்ப வழியற போலிருக்கு'' என்றான் நண்பன் திவாகர்.
``பின்னே. இப்படி வழிஞ்சி வச்சாதான் வெளியில நாம போடற ஆட்டம் தெரியாது. வர்ற சன்டே ஆபீஸ்ல ஸ்பெஷல் டூட்டின்னு சொல்லிட்டு வந்திடறேன். அண்ணாநகர் ரேஷ்மா கம்பெனி கொடுக்க வர்றா. இ.சி.ஆர். ரோட்டுல காட்டேஜ் புக் பண்ணிரு. விளையாண்டுட்டு வருவம்'' என்றான் பழைய கரண்தனமாக.
வீட்டில் செல்பேசி எடுத்த பூரணி, ``ஏய் ப்ரீத்தி அவர் தேவைக்கு அதிகமா கொஞ்சும்போதே சன்டே பார்ட்டிக்குப் போகப்போறார்னு பட்சி மனசுல சொல்லிச்சி. அதனால நீ நம்ம தோழிகளோட இங்க வந்திரு. நாம பார்ட்டி கொண்டாடி தூள் கிளப்புவம்'' என்றாள்..

0 comments: