Saturday, August 23, 2008

அதிரடி!

ஜானகி, திடீரென்று அலறினாள்.
``எனக்கு இஷ்டமில்ல. இந்த மாப்பிள்ளை வேணாம்... வேணாம்...'' எல்லாரும் அதிர்ந்தனர்.
பெண் பார்க்க வந்த மாப்பிள்ளை வீட்டார், முகம் சிவந்து அதிர்ச்சி அடைந்தனர்.
மாப்பிள்ளை விஜய், நிமிர்ந்தார். அமளியாகியும், அமைதியாயிருந்தார்.
``மிஸ் ஜானகி உங்ககிட்ட ஒரு நிமிஷம்.. தனியா பேசலாமா?''
எல்லாரும் ஜானகியை வற்புறுத்தி தனியறைக்குள் அனுப்பினர்.
``முன்னாடியே, என் போட்டோ, பயோடேட்டா கொடுத்திருந்தோம். அப்பவே, பிடிக்கலைன்னு சொல்லியிருக்கலாமே! திடீர்னு ஏன் இப்படிச் செய்யறீங்க...?''
ஜானகி சிரித்தாள்.
``உங்க முன்னாள் காதலி கலா, என் ஃப்ரெண்டுதான். ரெண்டு வருஷமா காதலிச்சும், அநியாயமா, அவளைக் கைவிட்டீங்கல்ல!
அந்த வலி, உங்களுக்கும் தெரியத்தான், இப்படிச் செஞ்சேன். நிராகரிக்கிற உரிமை, பெண்களுக்கும் உண்டுங்க.''
விஜய் தலைகுனிந்தான்..

0 comments: