Saturday, August 23, 2008

வேர்க்கடலை பால்ஸ்

தேவையான பொருட்கள்:
உலர்ந்த தோல்நீக்கிய வேர்க்கடலை,
புழுங்கல் அரிசி,
பயத்தம் பருப்பு,
கடலைப் பருப்பு - தலா 200 கிராம்,
வெல்லம்_3/4 கிலோ,
ஏலக்காய்த்தூள்-2 டீஸ்பூன்,
பல்லு பல்லாக கீறிய தேங்காய்_ஒரு மூடி

செய்முறை: வெறும் வாணலியில் அரிசி பருப்பு வகைகளை சிவக்க வறுத்து நைசாக அரைக்கவும். வெல்லத்தில் வு டம்ளர் நீர்விட்டு பாகுகாய்ச்சவும். பாகில் வேர்க்கடலை, தேங்காய், ஏலக்காய்த்தூள் சேர்த்து பாகு உருண்டை பதம் வரும் வரை நன்கு கிளறவும். அகலமான தட்டில்அரைத்த மாவைக் கொட்டி, பாகை கொஞ்சங் கொஞ்சமாக விட்டு கலந்து சிறு சிறு உருண்டைகளாக பிடிக்கவும்.

0 comments: