தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு - 50 கிராம்,
பிஞ்சு கத்தரிக்காய் - 4,
தக்காளி - 2,
காய்ந்த மிளகாய் - 8,
தனியா - ஒருடேபிள்ஸ்பூன்,
உளுத்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன்,
மிளகு - 10,
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்,
கசகசா - ஒரு டீஸ்பூன்,
தேங்காய் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்,
பச்சை வேர்க்கடலை புளி கரைசல் - தலா 3 டேபிள் ஸ்பூன்,
உப்பு, கடுகு, பெருங்காயம், எண்ணெய் - தேவையானஅளவு
செய்முறை: வேர்க்கடலை, துவரம்பருப்பை தனித்தனியாக வேகவைக்கவும். எண்ணெயில் காய்ந்த மிளகாய், தனியா, உளுத்தம் பருப்பு, மிளகு, வெந்தயம், கசகசா ஆகியவற்றை வறுக்கவும். வேகவைத்த வேர்க்கடலை + வறுத்த மசாலா சாமான் + ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய்துருவல் மூன்றையும் மிக்ஸியில் மைய அரைக்கவும். நீரில் கத்தரி மற்றும் தக்காளியை உப்பு சேர்த்து வேகவிடவும். வெந்தபின் புளிக்கரைசலைவிடவும். பிறகு அரைத்து வைத்திருக்கும் வேர்க்கடலை விழுதை சேர்த்து கொதிக்க விடவும். 10 நிமிடம் கழித்து வெந்த துவரம் பருப்பை நன்கு மசித்து அதில் சேர்த்து மீண்டும் கொதிக்க விடவும். பிறகு வாணலியில் கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை, தேங்காய் துருவல் தாளித்துக் கொட்ட வேர்க்கடலை பிட்லை ரெடி!
Showing posts with label வேர்க்கடலை ஸ்பெஷல். Show all posts
Showing posts with label வேர்க்கடலை ஸ்பெஷல். Show all posts
Saturday, August 23, 2008
வேர்க்கடலை போளி
தேவையான பொருட்கள்
பச்சை வேர்க்கடலை - 200 கிராம்,
உருளைக் கிழங்கு, கேரட் - தலா 2,
பெருங்காயம் - ஒரு சிட்டிகை,
கொத்துமல்லி-சிறிதளவு,
கடுகு - ஒரு டீஸ்பூன்,
மைதா மாவு -2 ஆழாக்கு,
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
தனி மிளகாய்த்தூள்,
எலுமிச்சை ஜூஸ் -தலா 2 டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் - தேவையானஅளவு
செய்முறை: வேர்க்கடலை, உருளைக்கிழங்கு, கேரட் மூன்றையும் குழைய வேகவிட்டு மசிக்கவும். இத்துடன் பெருங்காயம், உப்பு, தனிமிளகாய்தூள், கொத்துமல்லி, எலுமிச்சை ஜூஸ் சேர்த்து கடுகையும் தாளித்துக் கொட்டி சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும். மைதா மாவில் தண்ணீர், உப்பு, மஞ்சள் தூள், ஒரு குழி கரண்டி நல்லெண்ணெய் விட்டு தளர பிசைந்து, சிறு உருண்டைகளாக உருட்டி அதனுள்ளே ஒரு வேர்க்கடலை உருண்டையை வைத்து மூடிவிடவும்.
பிறகு மைதா உருண்டையை பிளாஸ்டிக் கவரின் மீது போளியாக தட்டி தவாவில் பொரிக்க ஹாட் மசாலா வேர்க்கடலை போளி ரெடி!

Labels:
சமையல் குறிப்பு,
சைவம்,
டிஃபன்,
வேர்க்கடலை ஸ்பெஷல்
வேர்க்கடலை பால்ஸ்
தேவையான பொருட்கள்:
உலர்ந்த தோல்நீக்கிய வேர்க்கடலை,
புழுங்கல் அரிசி,
பயத்தம் பருப்பு,
கடலைப் பருப்பு - தலா 200 கிராம்,
வெல்லம்_3/4 கிலோ,
ஏலக்காய்த்தூள்-2 டீஸ்பூன்,
பல்லு பல்லாக கீறிய தேங்காய்_ஒரு மூடி
செய்முறை: வெறும் வாணலியில் அரிசி பருப்பு வகைகளை சிவக்க வறுத்து நைசாக அரைக்கவும். வெல்லத்தில் வு டம்ளர் நீர்விட்டு பாகுகாய்ச்சவும். பாகில் வேர்க்கடலை, தேங்காய், ஏலக்காய்த்தூள் சேர்த்து பாகு உருண்டை பதம் வரும் வரை நன்கு கிளறவும். அகலமான தட்டில்அரைத்த மாவைக் கொட்டி, பாகை கொஞ்சங் கொஞ்சமாக விட்டு கலந்து சிறு சிறு உருண்டைகளாக பிடிக்கவும்.

வேர்க்கடலை ஸ்பெஷல்,
ஸ்வீட்
வேர்க்கடலை தேன்குழல்
தேவையான பொருட்கள்:
பச்சை வேர்க்கடலை - 1/2 ஆழாக்கு,
பச்சரிசி மாவு-ஒரு ஆழாக்கு,
கடலை மாவு-2 டேபிள் ஸ்பூன்,
காய்ந்த மிளகாய்-3,
பெருங்காயம்-சிறிதளவு,
நெய்-ஒரு டேபிள் ஸ்பூன்,
உப்பு, எண்ணெய்-தேவையான அளவு
செய்முறை: பச்சரிசியை 20 நிமிடம் ஊறவைத்து, நீரை வடித்து லேசாக காயவிட்டு மிக்ஸியில் பொடித்து சலிக்கவும். வேர்க்கடலையை வேகவிட்டு மசிக்கவும். காய்ந்த மிளகாய், உப்பு, பெருங்காயம் மூன்றையும் அரைத்து வடிகட்டவும். பச்சரிசி மாவு, மசித்த வேர்க்கடலை, காய்ந்த மிளகாய் ஜூஸ், நெய், கடலை மாவு சேர்த்து கெட்டியாய்ப் பிசைந்து மாவை தேன்குழல் அச்சில் போட்டு சூடான எண்ணெயில் பிழிய வேர்க்கடலை தேன்குழல் ரெடி!

காரம்,
சமையல் குறிப்பு,
சைவம்,
வேர்க்கடலை ஸ்பெஷல்
Subscribe to:
Posts (Atom)