Showing posts with label டிப்ஸ். Show all posts
Showing posts with label டிப்ஸ். Show all posts

Thursday, September 4, 2008

கேன்சரை உருவாக்கும் சிக்கன் 65


ராகவனுக்கு முப்பது வயதுகூட ஆகவில்லை. அவருக்கு கேன்சர் என்று மருத்துவர்கள் சொன்னதும், ஒட்டுமொத்த குடும்பமே அதிர்ச்சியில் உறைந்து போனது. காரணம் ராகவனிடம் மது, புகை என்று எந்த கெட்ட பழக்கமும் இல்லை. பிறகு எப்படி கேன்சர்?
தலையைப் பிய்த்துக்கொண்ட மருத்துவர்கள் கடைசியாக அவரது உணவுப் பழக்கத்தை ஆராய்ந்தபோதுதான் உண்மை தெரியவந்தது. அசைவப்பிரியரான ராகவன் தினமும் சாப்பாட்டில் சிக்கன் 65 இல்லாமல் சாப்பிடவே மாட்டாராம். அதுவும் செக்கச் சிவந்த நிலையில் மொறு மொறுவென்று இருக்கும் சிக்கன் 65ஐத்தான் விரும்பிச் சாப்பிடுவாராம். அதுதான் அவரது கேன்சருக்குக் காரணமாம். எப்படி? பளிச்சென்று தூக்கலாகத் தெரிவதற்காக சிக்கனுடன் சேர்க்கப்படும் அந்த சிவப்பு நிற கெமிக்கல் பவுடர்தான் அந்த கேன்சருக்கு முழுக்காரணம்.
இந்த கெமிக்கல் கலந்த சிக்கன் 65 சாப்பிடுவதால் வயிற்றில் கேன்சர், சிறுநீரகக் கோளாறு. மரபணுக்களில் பாதிப்பு போன்ற நோய்கள் உண்டாவதைக் கண்டறிந்திருக்கிறார்கள்.
உணவுப் பொருட்களில் பயன்படுத்தக்கூடிய செயற்கை நிறங்கள் பற்றியும், பயன்படுத்தக்கூடாத நிறங்கள் பற்றியும் நெல்லை மாநகராட்சியின் உணவு ஆய்வாளர் சங்கரலிங்கம் பேசும்போது :
``உணவு வகைகளில் பயன்படுத்தக்கூடிய செயற்கை நிறங்கள், பயன்படுத்தக்கூடாத செயற்கை நிறங்கள் என உண்டு. இந்தியாவில் 8 வகையான செயற்கை நிறங்களை மட்டுமே உணவுப் பொருட்களில் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த நிறங்களும் குறிப்பிட்ட அளவு. அதாவது 10 கிலோ உணவுப் பொருளுக்கு 1 கிராம் மட்டுமே சேர்க்க அனுமதி. ஆனால் இதை யாரும் கடைப்பிடிப்பதில்லை. அனுமதிக்கப்பட்ட உணவு வகைகளில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேல் செயற்கை நிறங்களைச் சேர்த்தால் உடலுக்குக் கேடுதான். எடுத்துக்காட்டாக, உணவில் சிவப்பு நிறம் கொடுக்க பயன்படுத்தப்படும் எரித்ரோசின் அளவு கூடினால் கழுத்துக் கழலை நோய் (goItre) வரும். இந்த செயற்கை நிறங்களும் இனிப்பு வகைகளில் மட்டுமே சேர்க்க அனுமதி. கார வகையான உணவுகளில் சேர்க்க அனுமதி கிடையாது.
பொன்சியூ4.ஆர்., எரித்ரோசின் பயன்படுத்தினால் சிவப்பு நிறம் கிடைக்கும். பிரில்லியண்ட் புளூ, இண்டிகோ கார்மைன் பயன்படுத்தினால் ஊதா கலர் கிடைக்கும். இந்த மாதிரியாக கிடைக்கக் கூடிய எட்டு வகையான கலர்களை ஐஸ்கிரீம் ஃப்ளேவர்டு மில்க், பிஸ்கட், இனிப்பு வகைகள், டின்களில் அடைத்து வரக்கூடிய பட்டாணி வகைகள், பாட்டில் பழ ஜூஸ் வகைகள், குளிர்பானங்கள் என ஏழு வகையான உணவுகளில் மட்டுமே சேர்க்க அனுமதி.
கார வகையான உணவுப் பொருட்களில் செயற்கை வண்ணங்களை கண்டிப்பாகச் சேர்க்கக்கூடாது. ஆனால் நமது மக்களின் மனதில் உணவைவிட உணவின் கலர்தான் பளிச்சென்று பதிந்து இருக்கிறது. சிக்கன் 65 என்றால் சிவப்பாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே அது சிக்கன் 65 என்ற முடிவில் மக்கள் இருக்கிறார்கள். மக்களின் மனதிற்கேற்ப வியாபாரிகளும் சிக்கன் 65 நிறத்தைக் கூட்டி, ஆபத்தை அறியாமலேயே வியாபாரம் செய்கின்றனர்.
சிக்கன் 65-ல் செயற்கை வண்ணங்களைச் சேர்ப்பதே தவறு. அதிலும் அனுமதிக்கப்படாத செயற்கை வண்ணங்களை அளவுக்கு அதிகமாக சேர்க்கின்றனர். எடுத்துக்காட்டாக சூடான் டை, மெட்டானில் எல்லோ கெமிக்கல்களைச் சேர்த்து துணிகளுக்கு சாயம் ஏற்றுவார்கள். இன்று இதனை சிக்கன் 65யுடன் சேர்த்து விடுகின்றனர். இப்படி சேர்ப்பதால் சிக்கன் 65 ரெட் கலரில் பளிச்சென்று தூக்கலாகத் தெரியும். இதைச் சாப்பிடுவதால் குடல்கேன்சர், சிறுநீரகக் கோளாறு, மரபணுக்களில் கோளாறு என கொடிய நோய்களை உண்டாக்கி விடுகிறது.
கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் சூடான் டையை உணவில் பயன்படுத்தத் தடை விதித்துள்ளனர். செயற்கை நிறம் கொடுக்கக் கூடிய சூடான் டை கலந்த உணவை எலிகளுக்குக் கொடுத்து ஆராய்ச்சி செய்து பார்த்ததில் எலிகளின் சிறுநீரகங்களிலும் கல்லீரல்களிலும் கேன்சர் உருவாகியதாம்.
இப்படி உணவுப் பொருளில் கலப்படம் செய்து வியாபாரம் செய்யும் வியாபாரிகள் உணவு தடைச்சட்டத்தின் பிடியிலிருந்தும் ஈஸியாகத் தப்பி விடுகின்றனர்.
உணவுக் கலப்பட வழக்குகளில் ஆஜராகும் வழக்கறிஞர் காந்திமதிநாதன் கூறும்போது: ``ஃபுட்கலர்ஸ் விற்பவர்கள் மீது சட்டப்படி எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. அந்த ஃபுட்கலர்ஸ் உணவுப் பொருட்களில் கலந்து உணவுப் பொருட்களுக்கு நிறத்தைக் கொடுத்த பின்புதான் அது குற்றமாகிறது. கலப்பட உணவுப் பொருட்களின் மீது வழக்குத் தொடரவேண்டுமானால் முதலில் தயாரித்து வைத்த உணவுப் பொருட்களை மூன்று பாகங்களாக சாம்பிள் எடுக்க வேண்டும். முதல் பாகத்தை உடனடியாக கெமிக்கல் லேபுக்கு அனுப்பி கலப்படத்தை உறுதி செய்து, ரிப்போர்ட் வாங்கி அந்த அடிப்படையில் வியாபாரியின் மீது வழக்குத் தொடரவேண்டும். மீதமுள்ள இரண்டு பாகமும் சுகாதார அதிகாரியின் கட்டுப்பாட்டில் வைத்து நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும்போது சுகாதார அதிகாரி கட்டுப்பாட்டில் உள்ள உணவுப் பொருளின் இரண்டு பாகங்களை நீதிமன்றம் மூலம் மத்திய பகுப்பாய்வுக் கூடத்திடம் ரிசல்ட் கேட்கவேண்டும். அந்தச் சூழ்நிலையில் கண்டிப்பாக உணவுப் பொருள் கெட்டுப்போய்த்தான் இருக்கும். மத்திய பகுப்பாய்வுக் கூடத்தால் சரியான ரிசல்ட்டை கொடுக்க முடியாது. இதனால் வழக்கு நிற்காமல் அடிபட்டு விடும்.
எடுத்துக்காட்டாக சூடான்டையால் நிறம் ஊட்டப்பட்ட சிக்கன் 65ஐ சாம்பிள் எடுத்து கெட்டுப்போகாமல் இருக்க பார்மலின் என்ற கெமிக்கலை சிக்கன்-65 மீது ஊற்றி வைப்பார்கள். அந்த கெமிக்கல் சிக்கன் 65யின் முழுப்பகுதியையும் அடைய வாய்ப்புக் குறைவு. அப்படி கெமிக்கல் படாத இடம் முதலில் கெட்டுப்போய் மொத்த சிக்கன் 65ஐயும் கெட்டுப்போகச் செய்து விடுகிறது. அதனால் அதிலிருந்து சரியான ரிசல்ட் எடுக்க முடியாமல் போய் விடுகிறது.
உணவுக் கலப்பட சட்டத்தைப் பொறுத்தமட்டில் வியாபாரிகளுக்கும், சில பங்களிப்பு இருப்பதால் வியாபாரிகள் எளிதில் தப்பிவிடுகின்றனர்'' என்கிறார். அதனால் தேவையற்ற கெமிக்கல் கலர் பொடிகள் சேர்த்த சிக்கன்களைத் தவிர்ப்பது ஒன்றே இதற்குத் தீர்வு?

கேன்சர் ஆபத்து!
இது குறித்து சென்னையைச் சேர்ந்த பிரபல குடல்நோய் நிபுணர் டாக்டர் சதீஷிடம் கேட்டபோது: ``சிக்கன் 65ல் சேர்க்கப்படும் நிறத்தால் உடனடி பாதிப்பாக நெஞ்சு எரிச்சல், அமிலத்தன்மை அதிகரிப்பால் இரைப்பை அழற்சி ஏற்படும்.
நீண்ட நாட்கள் அதைச் சாப்பிட்டு வந்தால் பெருங்குடலில் கேன்சர், சிறுநீரகப் பாதிப்பு உண்டாகும். தொடர்ந்து சிறுநீரகத்திலிருந்து ரசாயன நச்சுப் பொருட்கள் ரத்தத்தோடு கலந்து சிறுநீர்ப் பைக்கும் செல்லும். அங்கே ஏற்படும் மாற்றங்களால் சிறுநீர்ப் பையில் புற்றுநோய் வரும் ஆபத்து உண்டு. கழுத்தில் கழலை, மரபணுக்களில் மாற்றங்கள் ஏற்படுவதையும் தவிர்க்க முடியாது'' என்று எச்சரிக்கிறார்

Saturday, August 23, 2008

பலாப்பழம்

பலாப்பழத்தின் சுபாவம் சூடு. தவிர இது ஜீரணமாவது சற்று கடினம் என்பதால் அளவாக தேனுடன் சேர்த்து சாப்பிடுவது நல்லது. பலாப்பழம் பசியை மந்தப்படுத்துவதுடன் வாயுவை உண்டாக்கிவிடும். அதனால் உடல்நலம் இல்லாதவர்கள் இதைச் சாப்பிடக் கூடாது!
முக்கனிகளில் ஒன்றான பலாவில் வைட்டமின் ஏ, பி1, பி2, புரோட்டீன், கொழுப்பு ஆகிய சத்துக்கள் உண்டு.
பலன்கள்: வைட்டமின் ஏ இருப்பதால் கண்பார்வைக்கு நல்லது. பலாச் சுளைகளை சர்க்கரையுடன் சேர்த்துச் சாப்பிட்டால் உடல் உறுதி பெறும்.உடல் மற்றும் தலையில் உள்ள நரம்புகளுக்கு சக்தியை கொடுக்கும் பழம் இது. பலாக்கொட்டைகளை சுட்டும், குழம்பில் வேக வைத்தும் சாப்பிடலாம். இதிலும் மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளது.
டயபடீஸ் நோயாளிகள் இந்தப்பழத்தை சாப்பிடவே கூடாது.
அழகு பலன்கள்: பலாப்பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் தோல் பளபளப்பாய் மாற ஆரம்பிக்கும்

Friday, August 1, 2008

பூனை முடி உதிர...

சில பெண்களுக்கு மேலுதட்டின் மேல் மீசை போன்று ரோமங்கள் வளர்ந்து, அருவெறுப்பாக காட்சியளிக்கும்.

இதை போக்க ஓர் எளிய டிப்ஸ்:

குப்பை மேனி இலை, வேப்பங்கொழுந்து, விரலி மஞ்சள் ஆகியவற்றை சேகரித்து கொள்ளவும். இவற்றை மாவு போல் நன்றாக அரைத்து, படுக்கைக்கு போகும் முன் மேலுதட்டில் பூசவும்.

தொடர்ந்து இரு வாரங்கள் பூசி வந்தால், பூனை முடி உதிர்ந்து உதடுகள் பளிச்சிடும்.

Wednesday, July 23, 2008

முகத்தின் குறைகளை எப்படி சரிசெய்வது?

துடைத்து வைத்த குத்துவிளக்கு போன்ற அழகு என்பார்களே... முகத்தில் மாசு, மரு, கரும்புள்ளி என்று எதுவும் இல்லாமல் இருந் தாலே (மேக்கப் இன்றி) முகம் பளபளக்கும். ஒரு வேளை முகப்பருவோ, கரு வளையமோ வந்து விட்டால் அவற்றை எப்படிச் சரி செய்வது? அல்லது டெம்ப்ரவரியாக மேக்கப் மூலம் எப்படி மறைப்பது என்று பார்ப்போமா...

முகத்தில் கரும்புள்ளிகள் இருந்தால்...

உங்களுடைய சருமம் ரொம்பவே ஆயிலியாக இருந்தால், இந்தக் கரும்புள்ளிகள் அழைக்காமலேயே உங்கள் முகத்தில் வந்துவிடும்.

எப்படிச் சரி செய்வது?

ேஐஸ் கட்டியை சுத்தமான கர்சீப்பில் சுற்றி, அதைக் கொண்டு முகத்தை ஒற்றியெடுங்கள். இப்படிச் செய்தால் முகத்தில் வழியும் எண்ணெய், கண்ட்ரோல் ஆகும்.

சோற்றுக்கற்றாழையின் ஜெல்லை தேனுடன் பிசைந்து கரும்புள்ளிகள் மீது தடவி வரவும்.

லேவண்டர் ஆயிலை தொடர்ந்து அப்ளை செய்து வந்தாலும் கரும்புள்ளிகள் மறைந்துவிடும்.

எப்படி மறைப்பது?

கன்சீலரை சற்று அதிகமாக எடுத்து பிரஷ்ஷின் மூலமாக முகத்தில் தடவி அதன் மீது ட்ரான்ஸுலின்ட் பவுடரை அப்ளை செய்தால், முகத்தில் கரும்புள்ளிகள் இருப்பதே தெரியாது.

முகத்தில் முகப்பரு மற்றும்
தழும்பு இருந்தால்...


முகப்பருவே ஒரு தொல்லை என்றால், அதைவிட பெருந்தொல்லை அதைக் கிள்ளி விட்டால் வரும் தழும்பு.

எப்படிச் சரி செய்வது?

உங்களுடையது எண்ணெய்ப் பசை சருமம் என்றால் தக்காளி ஜூஸ், வெள்ளரி ஜூஸ், தர்பூசணி ஜூஸ் மூன்றிலும் தலா ஒரு டீஸ்பூன் எடுத்துக் கலந்து அதை முகத்தில் தடவி வந்தால், முகப்பருவும் சரியாகிவிடும். அதைக் கிள்ளினால் வரும் தழும்பும் சரியாகிவிடும்.உங்களுடையது நார்மல் சருமம் என்றால் ஒரு டீஸ்பூன் தர்பூசணி ஜூஸ், 4 டீஸ்பூன் ஓட்ஸ் பவுடர், ஒரு டீஸ்பூன் லெமன் ஜூஸ், ஒரு டீஸ்பூன் ஆரஞ்சு ஜூஸ் நான்கையும் நன்றாக மிக்ஸ் செய்து முகத்தில் தடவி வாருங்கள் போதும்.

எப்படி மறைப்பது?

இதற்கும் கன்சீலரை கொஞ்சம் அதிகமாக அப்ளை செய்து, அதன் மீது பூனை நாக்கு பிரஷ்ஷால் லேசாக டிரான்ஸுலின்ட் பவுடரை டச் செய்யுங்கள். தழும்பு சற்று ஆழமாக இருந்தால் தொடர்ந்து ஃபேஷியல், ஸ்கரப்பிங் என்று சரியான இடைவெளியில் செய்து வாருங்கள்.

முகத்தில் லேசான தீக்காயம் இருந்தால்...

முகத்தில் லேசான தீக்காயம் ஏற்பட்டால், அதற்கு உங்கள் வீட்டுத் தோட்டத்திலேயே பெஸ்ட் தீர்வு இருக்கிறது.

எப்படிச் சரி செய்வது?

சேோற்றுக் கற்றாழையைக் கீறி, அந்த ஜெல்லை அப்படியே தீக்காயத்தின் மீது தடவி வாருங்கள். லேவண்டர் ஆயிலைத் தொடர்ந்து தடவி வந்தால் தீக்காயம் எங்கே என்று தேடினாலும் கிடைக்காது. தீக்காயத்தினால் ஏற்பட்ட தழும்பு மறைய வேண்டுமென்றால் விட்டமின் `ஈ' ஆயிலை அதன் மீது தொடர்ந்து தடவுங்கள்.

எப்படி மறைப்பது?

இதற்கும் பிரஷ்ஷினால் கன்சீலரை அப்ளை செய்து, அதன் மீது பவுடரை ஸ்பான்ஜால் தொட்டுத் தடவுங்கள்!

உப்பிய கண்களோ, கருவளையமோ இருந்தால்...

எத்தனை அழகான கண்களும் வீங்கி இருந்தாலோ, அதைச் சுற்றி கருவளையம் இருந்தாலோ எடுபடாமல் போய்விடும்.

எப்படிச் சரி செய்வது?

நேரத்திற்குத் தூங்கினாலே கண்கள் வீங்காது. தவிர உருளைக் கிழங்கு மற்றும் வெள்ளரிக்காயை வட்டமாக சீவி அதை கண்களின் மீது 10 நிமிடம் வைத்தால் வீக்கம் மற்றும் கருவளையம் இரண்டுமே சரியாகிவிடும்.

எப்படி மறைப்பது?

உங்கள் ஒரிஜனல் ஸ்கின் கலரை விட லைட் கலரில் கன்சீலரை கண்களைச் சுற்றியுள்ள கருவளையத்தின் மீது தடவி அதன் மீது உங்களின் ஸ்கின் கலர் பவுடர் ஃபவுன்டேஷனை அப்ளை செய்யுங்கள்.

கண்களைச் சுற்றி சுருக்கம் விழுந்தால்...

சட்டென்று வயதைக் கூட்டிக் காட்டிவிடும். இந்தப் பிரச்னைக்கு என்ன செய்யலாம்?

எப்படிச் சரி செய்வது?

சுருக்கம் உள்ள பகுதிகளில் விட்டமின் `ஈ' ஆயிலையோ அல்லது பாதாம் ஆயிலையோ தடவி மென்மையாக மசாஜ் செய்துவிட்டு, பிறகு குளிர்ந்த நீரை கண்கள் மீது மெதுவாக வாரி அடியுங்கள்.

எப்படி மறைப்பது?

மை வைக்கும் இடத்தில் தரமான `ஐ ஜெல்'லைத் தடவி பத்து நிமிடம் கழித்து ஃபவுன்டேஷனை அப்ளை செய்யுங்கள். சுருக்கம் தெரியாது

Tuesday, July 22, 2008

அடிக்கடி தலைவலியா...?

பல்வேறு காரணங்களினால் அடிக்கடி தலைவலி ஏற்படலாம். இதிலிருந்து உடனடி நிவாரணம் பெற ஓர் எளிய வழி:

இரண்டு கைகளாலும் கண்களை இறுக மூடிக்கொள்ளவும். அப்போது, கை விரல்களால் நெற்றியை அழுத்தி பிடித்தபடி சிறிது நேரம் இருக்கவும்.

ஒரு சில நிமிடங்கள் இப்படி செய்தால், தலைவலி படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.

Sunday, July 20, 2008

அல்சரா, கவலை வேண்டாம்....

அதிக காரம், அடிக்கடி பட்டினி, முறையான உணவுப் பழக்கம் இல்லாமை போன்ற காரணங்களினால் சிலருக்கு அல்சர் நோய் ஏற்படலாம்.

இதை குணமாக்க ஓர் டிப்ஸ்:

ஓர் பச்சை முட்டைகோஸை எடுத்து, உரித்து சிறிது தண்ணீர் விட்டு நன்றாக இடிக்கவும். இதை பிழிந்து சாறு எடுக்கவும்.

இந்த சாறை தினமும் காலை, மாலை என இருவேளை சாப்பிட்டு வந்தால், அல்சர் விரைவில் குணமடையும்

குழந்தைக்கு வயிற்று வலியா?

குழந்தைகளுக்கு அடிக்கடி வயிற்று வலி, வயிற்றுப்போக்கு ஆகியவை ஏற்படும்.

இதை உடனடியாக குணப்படுத்தும் டிப்ஸ் இது:

ஒரு ஜாதிக்காயை எடுத்து, விழுதாக அரைக்கவும். இதை ஒரு ஸ்பூன் தேனில் கலந்து கொடுக்கவும்.

காலை, மாலை என இருவேளை கொடுத்தாலே போதும். வயிற்றுவலி உடனடியாக தீரும்.

ஆறாத புண்களை ஆற்ற...

தவிழ்ந்து விளையாடும் குழந்தைகளுக்கு அடிக்கடி புண்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இது அந்த குழந்தைகளுக்கு மிகவும் வேதனை அளிக்கும்.

முற்றிய நிலையில்தான் சில புண்கள் வெளியே தெரிய ஆரம்பிக்கும். இவை குணமாக சில நாட்கள் பிடிக்கும். இந்த புண்களை விரைவில் குணப்படுத்த ஓர் டிப்ஸ்:

சிறிதளவு குப்பை மேனி இலைகளை சேகரித்து கொள்ளுங்கள். இவற்றுடன் சிறிது மஞ்சள் சேர்த்து நன்றாக அரையுங்கள்.

இதை எடுத்து குழந்தைகளின் புண்களில் தடவி வந்தால், ஆறாத புண்களும் மூன்றே நாளில் ஆறும்.

Monday, July 14, 2008

உணவே மருந்து !

ஆரோக்கியமான வாழ்க்கை வாழத்தான் நாம் அன்றாடம் உணவு உண்கிறோம். உலகில் படைக்கப்பட்ட அனைத்து உயிரினங்களுக்கும் உணவு என்பது அடிப்படைத் தேவையாகும். வயிறு பசி ஆற மட்டும் உண்டால் போதும் என்ற கணக்கெல்லாம் செய்து கொள்ளாமல், நல்ல சாப்பாடு சாப்பிடத்தான் வாழ்கிறோம் என்று எண்ணினால், நோய் நொடியற்ற வாழ்க்கை வாழலாம். நல்ல உணவு முறையைப் பின்பற்றினால், தோல் நோய், கறுத்த சருமம், சொறி, அரிப்பு, உலர் சருமம் ஆகியவற்றிலிருந்து நம்மைக் காத்துக் கொள்வதோடு மட்டுமில்லாமல், நாள் முழுவதும் சுறுசுறுப்பாய் இயங்கலாம்.
இப்போது எதற்கெல்லாமோ `ரெடிமேட்' வந்துவிட்டது. குழந்தைகளின் `பிரேக்ஃபாஸ்ட்' என்ற பெயரில் ரெடிமேட் வகையறாக்கள், குழம்பு பேஸ்ட், புளியோதரை மிக்ஸ், ரெடிமேட் இட்லி, தோசை, உப்புமா மற்றும் இனிப்பு வகையறாக்கள், அவ்வளவு ஏன் புளியோதரை, எலுமிச்சை, வத்தக்குழம்புகூட ரெடிமேட் பேக்கில் விற்கப்படுகிறது. இவற்றைப் பதப்படுத்த ரசாயனம் கலக்கப்படுகிறதா, இல்லையா என்பது வேறு விஷயம். ஆனால், வெறும் ரெடிமேட் உணவு வகைகளையே சாப்பிட்டு உடலை வளர்த்தால் உடல் கோளாறு ஏற்படாமல் தவிர்க்க என்ன முயற்சி செய்தாலும் முடியாது. அளவுக்கதிகமான தானியங்கள், பால்பொருட்கள் ஆகியவற்றை உண்டால் உடல் என்னாவது? பழங்களையும் காய்கறிகளையும் முக்கியமாக கீரை வகைகளையும் அன்றாட உணவு வகைகளாக சேர்க்காமல் ஒதுக்கினால், அதைவிட தீங்கு வேறு ஏதும் இல்லை என்பதோடு உடலுக்கு அத்தியாவசிய தேவையான நோய் எதிர்ப்பு சக்தியும் கிடைக்காமல் போய்விடும்.
பழங்கள், காய்கறிகள், கீரை வகைகள் மற்றும் அளவான தானிய வகைகள் தினமும் உணவில் சேர்த்துக்கொண்டால், ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படும் உடல் உபாதைகள், பெண்களுக்கு ஏற்படும் பல்வேறு உடல் சம்பந்தப்பட்ட பிரச்னைகள், மகப்பேறு பாதுகாப்பு, உடலை கட்டுக்கோப்புடன் வைத்துக்கொள்வது போன்ற பல ஆரோக்கியமான வழிவகைகளைப் பெறமுடியும்.
நீங்கள் பின்வருவனவற்றைப் பின்பற்றினால் போதும்.
தினமும் நிறைய தண்ணீர் குடியுங்கள். உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற தண்ணீர் மிக மிக அவசியம். வைட்டமின் ஏ நிறைந்த பழங்களான பப்பாளி, ஆரஞ்சு, முட்டையின் வெள்ளைக்கரு ஆகியவையும் பூசணிக்காய், பரங்கிக்காய், பாகற்காய் ஆகியவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
எலுமிச்சை, புளி, மோர் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை சிறிதளவேனும் சேர்த்துக் கொள்ள வேண்டும். சாம்பார், ரசம் போன்றவற்றில் இவற்றைச் சேர்ப்பதாலும் அல்லது கூட்டு, பொரியல் செய்தோ சாப்பிடுவது சிறந்து பலனை அளிக்கும்.
அதேபோல், தினசரி உணவில் ஏதாவது ஒரு கீரையை சேர்த்துக்கொள்ளுங்கள். முளைக்கீரை, அரைக்கீரை பசலைக்கீரை, தண்டுக்கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, கரிசலாங்கண்ணி கீரை ஆகியவற்றில் கூட்டோ, பொரியலோ செய்து சாப்பிடலாம் அதுபோன்றே தினமும் அருகம்புல் ஜூஸ், தேன் மற்றும் சோயா பீன்ஸ் ஆகியவற்றையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவை கிடைக்காத பட்சத்தில் கறிவேப்பிலை கொத்தமல்லி, புதினா துவையல் செய்து சாப்பிடலாம். மதிய நேரங்களில் உலர் பழங்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது. காய்ந்த திராட்சை, பாதாம் பருப்பு, வேக வைத்த பயிறு வகைகள், சோயா பால் மிகவும் உகந்ததாகும்.
இரவு நேரங்களில் படுக்கப்போவதற்கு அரை மணி முன்பாக ஒரு டம்ளர் பாலில் பனங்கற்கண்டு, தேன் சேர்த்து சாப்பிடுவது இரவு நல்ல நித்திரையளிப்பதோடு, உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது ஆகும். அதுபோன்றே காலை, மாலை என இருவேளை நடைப்பயிற்சி மேற்கொள்ளுவதன் மூலம் சுத்தமான காற்றை சுவாசித்து இரத்த ஓட்டத்தை சீராக்கிக் கொள்வதோடு இப்பயிற்சிகளை தினமும் அனுசரிப்பது நமது இதயத்திற்கு மிகவும் பலத்தை அளிக்கும். அன்றாடம் குளிப்பதற்குக்கூட அதிகமாக சோப்பை பயன்படுத்தாமல் கடலை மாவு, பயத்தம் மாவு தேய்த்துக் குளித்தல் மற்றும் வாரம் ஒரு தடவை எண்ணெய்க் குளியலும் உடல் ஆரோக்கியத்திற்குச் சிறந்ததாகும்.

வெயில் காலங்களில் பருத்தி ஆடைகளை அணிவதும் உடல் உஷ்ணத்திற்கு ஏற்றமானதாகும். இவ்வாறாக, உடலைப் பாதுகாத்துக் கொள்ள இயற்கை உணவை நாம் தினமும் பழக்கப்படுத்திக் கொள்வதோடு கூடுமான வரை மனதில் கவலைகளுக்கு இடம் கொடுக்காமல் பிரார்த்தனை, தியானம், மனதை ஒருமுகப்படுத் தும் பயிற்சிகள், யோகா போன்றவற்றை அனுச ரிப்பதாலும் மனதில் எப்போதும் குதூகலமும் அமைதியும் ஏற்படும். மகிழ்ச்சியையும் மன நிறைவையும் அளிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் வாழ்வது ஒரு முறைதான் - வாழ்க்கை வாழ் வதற்கே. அதற்கு உணவே மருந்தாக இறைவன் அளித்துள்ளான். சிறந்த உணவு வகைகளை உண்டு ஆரோக்கியமாக வாழ முற்படுங்கள்.
நோய்களும் சிகிச்சைகளும்
முதலில் நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம், ஆரோக்கியத்தைக் கெடுக்கும் சமையல் உணவுகளினால்தான் மனிதன் பல்வேறு நோய்களுக்கு உட்பட நேரிடுகிறது. நோயாளியான மனிதன் ஒரு மீன் மாதிரி. மீன் தண்ணீரீல் மட்டும்தான் வாழ முடியும். நான் தரையில்தான் இருப்பேன். என்னைக் காப்பாற்றுங்கள் என்றால், யாரால் காப்பாற்ற முடியும்?
ஆஸ்துமா, இரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நோயாளிகள் (சாகும்வரை மருந்தை உணவாக சாப்பிடத் தயாராக இருப்பவர்கள்) முழு இயற்கை உணவில்தான் உண்மையான ஆரோக்கியம் பெற முடியும். அவர்கள் சமைத்த உணவையே சாப்பிட்டுக் கொண்டிருந்தால் அவர்களுடைய ஆரோக்கி யத்தை நாம் காப்பாற்றுவது கடினம். அந்த நோயாளிகள் மருந்து மாத்திரை, ஊசிகள் மூலம் நோய்கள் நீங்கப் பெற்றாலும் அதற்குப் பிறகும் கூட ஒரு ஆரோக்கியமான மனிதனைப் போல சாப்பிடவோ, நடக்கவோ, ஓடவோ, வேலைகள் செய்யவோ முடியாமல் நோயாளியைப் போலவே வாழ்ந்திடும் நிலை ஏற்படுகிறது. எனவே, மீன் நிலையிலுள்ள நோயாளி மனிதன் முற்றிலும் சமையல் உணவை நிறுத்தி, பழம், பச்சைக் காய்கறிகள் போன்றவற்றைச் சாப்பிட ஆரம்பித்தால் இழந்த ஆரோக்கியத்தை மீளப் பெற முடியும்.

எனவே தன்னுடைய தவறான உணவுப் பழக்க வழக்கங்களால் மீன் நிலைக்குத் தள்ளப்படாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். இயற்கை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகள் அளவாகச் சாப்பிட்டு ஒரு நாளைக்கு இரண்டு வேளைக்கு மேல் சாப்பிடாமல் 24 மணி நேரமும் பசித்துக் கொண்டு இருக்கும்படி சிகிச்சை பெற வேண்டும். பசி இருந்துகொண்டே இருந்தால் ஓரளவு ஜீவகாந்த சக்தி மீதி இருக்கின்றது என்று அர்த்தம். அந்த சக்திதான் நோய் குணமடைய உதவி செய்யும் என்று அர்த்தம். மருந்துகளின் தந்தை எனப் போற்றப்படும் ஹிப்போகிரட்டஸ் கூறுகிறார், ``நோயாளிகளுக்குக் கொடுக்கும் அதிகமான உணவு அதிக தொல்லை தரும். மனிதனுடைய உணவு மருந்தாக வேண்டும். மருந்தே உணவாக இருக்க வேண்டும்'' என்று.
எந்தக் காரணங்களினால் ஆஸ்துமா வந்தாலும் அது எப்படிப்பட்ட ஆஸ்துமாவாக இருந்தாலும் இயற்கை உணவில் இனிமையாக குணம் பெறலாம். மூச்சுத் திணறல் ஏற்பட்டவுடன் நோயாளிகள் அஹிம்சை எனிமா எடுத்துக் கொள்ள வேண்டும். சாப்பிடுவதை நிறுத்திவிட வேண்டும். இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை தண்ணீரில் சிறிது தேன் கலந்து ஒரு டம்ளர் வரை சாப்பிடலாம். இவ்வாறு மூன்று நாட்கள் முடிந்தவரை பட்டினியாக இருந்தால் உடல் சுத்தம் அடைந்து நுரையீரலில் அடை பட்டிருந்த சளி, வெளியேறத் துவங்கிவிடும். முதலில் பல காய்கறிகளும், பழங்களும் சாப்பிட் டால், அலர்ஜி என்று சாப்பிடாமலிருந்தவர்கள் இந்த மூன்று நாள் பட்டினிக்குப் பிறகு சாப்பிட ஆரம்பித்தால் உடல் ஏற்றம் கொள்ளும். தினசரி காலையிலும், மாலையிலும் அரை மணி நேரம் தொட்டில் குளியல் அல்லது முதுகுத்தண்டு குளியல், அல்லது ஈரத்துணி குளியல் எடுத்துக் கொள்ளவேண்டும்.

ஆஸ்துமா வருவதற்கான முக்கியக் காரணமான சமைத்த உணவு வகைகள், பால் சம்பந்தப்பட்ட அனைத்து உணவுகளையும் தவிர்த்தல் வேண்டும். இயற்கை காபி அல்லது இயற்கை டீ போன்றவற்றை பனை வெல்லத் தோடு சேர்த்துப் பருகலாம். தூதுவளை, துளசி, வெற்றிலை இவற்றில் கைப்பிடியில் பாதியளவு எடுத்து மென்று சாப்பிட்டு சக்கையைத் துப்பி விடவும். மதிய உணவு கீழ்க்காணும் விதத்தில் அமைவது சாலச் சிறந்தது.

சாதம் ஒரு கரண்டி - கொத்தமல்லி அல்லது புதினா சட்னி - சமைத்த காய்கறிகள் இரண்டு கரண்டி - சமைக்காத காய்கறிகளின் பச்சடி 2 கரண்டி - தக்காளி, வெங்காயம் நறுக்கிய தேங்காய்த் துருவல் போட்டுக் கலந்த முளைவிட்ட பயிறு தானியங்கள் ஒரு கரண்டி - நறுக்கிய இயற்கைப்பழங்கள் (ஆப்பிள், சப்போட்டா, மா, பலா, வாழை, கொய்யா, பப்பாளி, ஆரஞ்சு, திராட்சை) போன்றவற்றை யும் மேலே கூறியபடி சாதம் ஒரு பங்கும் மீதி எல்லாம் சேர்த்து பத்துப் பங்காக அமைத்துக் கொள்ளவும்.
உணவே மருந்து
பச்சைக் காய்கறிகளைப் பற்றி தகவல்களைத் தந்து, அவற்றின் மூலம் ஒரு சில நோய்கள் வரும் முன் அவற்றிலிருந்து தற்காத்து தடுத்துக் கொள்ளவும், நோய்கள் வந்த பின் அவற்றிலிருந்து விடுபடுவதற்கான மருத்துவக் குறிப்புகளையும் தந்து ``நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்'' என்பதை தெளிவுபடுத்த முயன்றுள்ளேன்.
இயற்கையின் படைப்பில்தான் எவ்வளவு விந்தைகள்! இன்றைய விஞ்ஞான முன்னேற்றத்தில் உலகில் தினம் தினம் புதிய புதிய விஞ்ஞான கண்டுபிடிப்புகள், புதுப்புது மாற்றங்கள் என மாறிவரும் நாகரிகங்களின் வளர்ச்சிக்கேற்ப புதுப்புது நோய்களும் ஏற்பட்டு மனித குலத்திற்கு சவால் விட்ட வண்ணம் அச்சுறுத்தலை தந்து கொண்டிருப்பதை எவரும் மறுக்க முடியாது. அதுபோன்றே கடந்த ஆண்டு இயற்கை சீற்றமாய் வெளிப்பட்ட சுனாமியின் தாக்கம், தொடர்ந்து பூகம்பம், வெள்ளம், கேதரீனா மற்றும் ரீட்டா போன்ற புயல். அப்பப்பா! நினைத்துப் பார்த்தால், இயற்கையின் தாக்கம் என்பது, உலகை அச்சுறுத்துகின்ற நிலையில், அனைவரையும் பீதியடையச் செய்வது என்பது நியாயம்தானே!

இவற்றையெல்லாம் ஒரு சில நேரம் நினைத்துப் பார்த்து, சிந்தித்துச் செயல்பட முற்பட்டால் மனிதர்களின் வாழ்வில் முன்னேற்றங்களும், இயற்கைக்கு எதிராகச் செய்யும் காரியங்களின் விபரீதங்களும் புரிந்துவிடும்.
அதிலும் மனிதனின் ஆரோக்கியம் என்பது இயற்கையின் அமைப்பில் பஞ்ச பூதங்களான நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்பதோடு இயற்கையாகவே கிடைக்கும் பச்சைக் காய்கறிகள், கீரை, கனி வகைகள், மூலிகைப் பொருட்கள் மற்றும் பருப்பு வகைகள் ஆகியவற்றை முறையாக உபயோகப்படுத்தும் வழி வகைகளை எண்ணற்ற நூல்கள் மற்றும் மருத்துவ உரைகள் மூலம் அறியும் வாய்ப்புகள் இருக்கும்போது, அவற்றை முறையாக நாம் பின்பற்றுகிறோமா என்றால் அதுதான் இல்லை. எனவே அடிப்படையில் வள்ளுவர் குறளில் காட்டிய ``நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய் நாடி வாய்ப்பச் செயல்'' என்பதற்கேற்ப, நாம் அனைவரும், வாழ்கின்ற காலத்தில் நோயின்றி நலமும் வளமும் சூழ வாழ்ந்திட, இத்தகைய இயற்கை உணவினை உட்கொள்ளுவதுதான் சாலச் சிறந்தது.

கட்டுரையின் தொடக்கத்தில் கூறியபடி, காய்கறிகள் என்றால் நமக்கு உடனே நினைவில் வருவது, அன்றாடம் புத்தம் புதிதாய் நம் வீட்டு பின்புறத்தில் விளையும் காய்கறிகளான, கத்தரி, வெண்டை, பூசணி, பரங்கி, கொத்தவரங்காய், அவரை, இஞ்சி, நாட்டுத் தக்காளி, முருங்கை, அருநெல்லி, சுண்டைக்காய், புடலை, வாழைக்காய், பாகற்காய், தேங்காய், பச்சை மிளகாய் மற்றும் கீரை வகைகளான தண்டுக்கீரை, புதினா, மல்லி, முளைக்கீரை, பொன்னாங்கண்ணி, பசலைக்கீரை, பச்சை கொத்தமல்லி ஆகியவற்றோடு நார்த்தை, மாங்காய், மாதுளை, பலா, வாழை மற்றும் விதவிதமான மலர்ச்செடிகள் என எவ்வளவு வகைகள்.

அதுவும் விடியற் காலைப்பொழுதில், அவற்றைப் பார்த்து ரசித்து, அன்றைய சமையலுக்கு என மார்க்கெட் பக்கம் கூட செல்லத் தேவையின்றி, நாம் விளைத்த உணவுப் பயிர் வகைகள் என்ற மகிழ்வில் சமைத்து சாப்பிடுவோமே, அதன் சுவையும், அதன் மருத்துவக் குணங்களும், இன்று நாம், டின் ஃபுட் மற்றும் ஃபாஸ்ட்ஃபுட் என்ற செயற்கைப் பண்டங்களின் மூலம் பெறுகிறோமா அல்லது வாய்க்கு ருசியாகத்தான் சாப்பிட முடிகிறதா என்பதே என் கேள்வி? நம் நாட்டில் ஒரு சில காய்கறிகள், கீரை வகைகள் மற்றும் கனி வகைகள் ஒரு சில சீசன்களில் மட்டும்தான் விளையும் அல்லது கிடைக்கும். ஆனால் கத்தரி, வெண்டை, முட்டைக் கோஸ், பச்சைப் பட்டாணி, பீன்ஸ், கேரட், காலி ஃபிளவர், பீட்ரூட், புரக்கோலி, பூசணி, பரங்கி பாகற்காய், சுண்டைக்காய், தக்காளி, இஞ்சி, பச்சை மிளகாய் என அனைத்துமே எளிதாய் விற்கப்படுவதால், அவற்றை நமது அன்றாட உணவில், பக்குவமாக சுவைகூட்டிச் சமைத்து உண்போமானால், அப்புறம் நோய்க்கு இடமேது!

An Apple a day keeps the Doctor away என்ற பழமொழிக்கேற்ப ஆப்பிள் பழம் இருக்கிறதே, அதன் நிறமும், தரமும், அளவும், சுவையும் மிகவும் தனித்தன்மையுடையதாகும். அன்றாடம் ஒவ்வொருவரும் அவசியம் ஆப்பிளை சாப்பிட்டாலே போதும். இரத்தக் கொதிப்பு, சுகர் மற்றும் மூட்டு வலி என்ற உபத்திரவங்கள் ஏற்பட வாய்ப்பே இல்லை. ஏன் பிற நோய்களும் தோன்றாது என அறுதியிட்டுக் கூறலாம்.

சிலவகை நோய்களும்

இயற்கை மருத்துவ சிகிச்சையும்

இரத்தக் கொதிப்பு நோய்
மனிதர்களுக்கு ஏற்படும் நோய்களை இரு வகைகளாகப் பிரிக்கலாம். உடலியல் தொடர்பான பிணிகள் மற்றும் மனோ தத்துவ ரீதியிலான பிணிகள் என்று. ஒரு சில நோய்கள் மனமும் உடலும் சார்ந்த பிணி எனப்படுகிறது. இந்த நோய்க்கான மருத்துவத்தில் ஒரு நல்ல அம்சம் இதைப் பூரணமாக குணப்படுத்தி விடலாம் என்பதே. மன எழுச்சிகளும், பதற்றமும், கவலையும் உடலில் பிரதிபலித்து பிணியாக உருவாகி விடுகிறது.
`பிளட் பிரஷர்' எனும் இரத்த அழுத்தம் (இரத்தக் கொதிப்பு) நமது உடலில் 24 மணி நேரமும் இயங்கும் இதயம் மற்றும் அதன் இரத்த ஓட்டம் தொடர்பானதாகும். உடலுக்குள் எப்பொழுதும் ஓடிக்கொண்டே இருக்கும் இரத்தம் ஒரு குறிப்பிட்ட வேகத்தில், அழுத்தத்துடன் பாய்ந்து கொண்டிருக்கிறது என்பதை உறுதிப்படுத்துவதற்கு முன்னோடியாக இருந்தது, மருத்துவ ஆராய்ச்சி செய்த விஞ்ஞானி ஹார்வியின் கண்டுபிடிப்பு ஆகும்.
இயற்கையான இரத்த அழுத்தம் அதிகப்படும் போதுதான் அது நோயாகிறது. அதனால் பல தொந்தரவுகளும் ஏற்படுகின்றன. நம் உடலில் உள்ள நரம்பு மண்டலத்திற்கும், அதன் கட்டுப்பாட்டில் இயங்கும் இரத்தக் குழாய்களும் தான் இருதயத்தின் சீரான நிலைக்கு முக்கியமாகும். இருதயம் சுருங்கி இரத்தத்தைப் பம்ப் செய்யும்பொழுது இரத்த அழுத்தம் கூடுதலாகவும், இருதயம் விரிந்த நிலைக்குத் திரும்பும்போது இரத்த அழுத்தம் குறைவாகவும் கணக்கிடப்படுகிறது. இருதய துடிப்பிற்கேற்ப இரத்த அழுத்தம் ஒவ்வொரு கணமும் நம் உடலுக்குள் மாறி மாறி நிலவுகிறது.

இவ்வாறு இயல்பாகவே சீரான இரத்த அழுத்தம் நிலவுவதால் தான் உடல் முழுவதும் இரத்தம் ஓடி தன் பணியைச் செய்கிறது. எனவே இரத்த அழுத்தம் என்பது ஓர் இயற்கையான உடல் ரீதியான செயல். இப்படி சீராக இருக்க வேண்டிய இரத்த அழுத்தம் ஒரு அளவுக்கு மேல் அதிகரிக்கும்போது இரத்த அழுத்தம் எனப்படுகிறது. ஒருவர் உடம்பில் பெரும்பாலும் அதிகமான இரத்த அழுத்தமே இருந்து கொண்டு வருமானால் அது ஒரு வியாதியாக மாறி `ஹை பிளட் பிரஷர்' எனப்படுகிறது. நம் சுவாசத்தில், சாதாரண மூச்சு, மூச்சுத் திணறல், இரைக்க இரைக்க மூச்சு வாங்குதல் என்னும் மூன்று நிலைகளுக்கு ஏற்ப, சாதாரண இரத்தம், குறைவான இரத்த அழுத்தம், அதிகமான இரத்த அழுத்தம் என்று மூன்று நிலைகள் உள்ளன. இந்நோயின் தன்மை, இயற்கை மருத்துவ சிகிச்சை மற்றும் கடைப்பிடிக்க வேண்டிய வழிவகைகள் பற்றி அறிந்து கொள்வோம். இயற்கை மருத்துவத்தில் இரத்தத்தைச் சுத்தப்படுத்தவும், இரத்தக் கொதிப்பில் உள்ள உயர் மற்றும் குறைந்த அழுத்தத்திற்கு கீழ்க்காணும் வகையிலான சிகிச்சை அளிக்கப்படுகிறது.
SAFI BLOOD PURIFIER 200ML BOTTLE The Herbal Remedy
நோயாளியின் இரத்த அழுத்தத்தைப் பரிசோதனை செய்து அதற்கான இயற்கை மருந்துகளை வயது, இரத்தப் பரிசோதனைக்கு ஏற்ப உப்பு, சர்க்கரை, கொழுப்பு ஆகியவற்றைக் கண்டறிந்து மற்றும் பிற உடல் பாதிப்புகளையும் கேட்டு, உணவு முறைகளை மாற்றியும், உடலுக்குப் போதுமான ஓய்வு மற்றும் தேகப்பயிற்சியான தினமும் நடைப்பயிற்சி மற்றும் தியானம் போன்றவற்றைக் கடைப்பிடிக்கவும் ஆலோசனை வழங்கப்படுகிறது. தவிர எம்மிடமுள்ள இயற்கை, மூலிகை மருந்து வகைகள் நோயின் தன்மைக்கு ஏற்ப கொடுக்கப்படுகிறது.
நமது உடல் ஆரோக்கியத்திற்கான இயற்கை மருத்துவக் குறிப்புகளாக நமக்கு அவ்வப்போது ஏற்படும் பல்வேறு சாதாரண நோய்களையும் அதற்கான நிவாரணம் அளிக்கக்கூடிய எளிய வழிவகைகளையும் ஒரு பட்டியல் தொகுப்பாக கீழ்க்காணும் முறையில் தந்திருக்கிறேன். எனவே இதை உங்கள் குடும்பத்திலுள்ள அனைவரும் உடனடி கையேடாக உபயோகிக்கவும், அவசர சிகிச்சையை வீட்டிலிருந்தே பெறும் வகையில் அமைத்துக் கொள்ளவும் பயன்படும் என நம்புகிறேன். எந்தவித நோய்க்கும் அடிப்படைக் காரணமாக அமைவது நாம் அன்றாடம் உண்ணும் உணவு வகைகள், சுற்றுப்புற சுகாதாரம், தவறான பழக்க வழக்கங்களை தவிர்த்தல், போதுமான உடல் ஓய்வு, உடற்பயிற்சி, பொழுதுபோக்கு மற்றும் மனதில் இறுக்கம் ஏற்படாத வாழ்க்கை போன்றவைதான்.
இவையாவும் கவனத்தில் கொண்டு, நமது அன்றாட வாழ்க்கை அமைந்துவிட்டால், மன நிம்மதியையும், மன மகிழ்ச்சியையும், நல்ல ஆரோக்கியத்தையும் பெற்று நோயின்றி வாழ முடியும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. சரி, இனி நமக்கு ஏற்படும் பொதுவான நோய்கள் - அதற்கான இயற்கை மருத்துவ முறையில் உள்ள சிகிச்சையைப் பற்றிய தகவல்களைப் பார்ப்போம்.
திடீர் காய்ச்சல்: திடீரென்று காய்ச்சல் ஏற்பட்டால் இஞ்சியுடன் மிளகையும் சேர்த்து நசுக்கி நீரில் கொதிக்க காய்ச்சி வடிகட்டி சோயா பாலுடன் சேர்த்துச் சாப்பிட்டால் காய்ச்சல் தணியும். சிறிது சர்க்கரையையும் சேர்த்துக் கொள்ளலாம்.
தலைவலி: சாதாரணமாய் ஏற்படும் தலைவலிக்கு சுக்கு கைகண்ட மருந்தாகும். கொஞ்சம் சுக்கை எடுத்து நீரிட்டு மைபோல் அரைத்து நெற்றியில் பற்றுப்போட்டால் தலைவலி நீங்கும்.
வாந்தி பேதி நிற்க: வாந்திபேதி, மந்த பேதி ஏற்பட்டு தொல்லை தருமாயின் ஒரு சட்டியில் இரண்டு மிளகாயைச் சேர்த்து கருகும் வரை வறுத்து எடுக்க வேண்டும். அந்த வறுத்த சட்டியில் இரண்டு மூன்று டம்ளர் தண்ணீர் விட்டு பாதியாக சுண்டுமளவுக்குக் காய்ச்சி, அந்நீரை ஒரு வேளை உள்ளுக்குச் சாப்பிட்டால் போதும், வாந்தி நின்றுவிடும்.
பித்தத்துக்கு: பித்த நோய்க்கு சீரகம் ஒரு சிறந்த மருந்துப் பொருளாகும். 30 கிராம் சீரகத்தை ஒரு லிட்டர் நல்லெண்ணெயில் இட்டு சீரகம் கறுப்பு நிறம் ஆகும் வரை நன்றாகக் காய்ச்ச வேண்டும். பிறகு அந்த எண்ணெயைத் தலைக்குத் தேய்த்து வெந்நீரில் குளிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் பித்தம் தணியும். எண்ணெய் ஸ்நானம் செய்யும் அன்று மட்டும் தயிர், மோர் தவிர்க்க வேண்டும்.

அடுத்து கறிவேப்பிலையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதும், துவையல் செய்து, சாதத்துடன் பிசைந்து உண்பது ஆகியவையும் பித்தம் சம்பந்தமான வியாதிகள் வராமல் தடுக்கும். பித்த அதிகரிப்பால் தலைச் சுற்றல், கிறுகிறுப்பு, மயக்கம் போன்றவை ஏற்படும்போது, கொத்தமல்லி எனும் தனியாவை, ஒரு டம்ளர் நீரில் ஒரு ஸ்பூன் உடைத்துப் போட்டு, அடுப்பில் நன்றாகக் கொதிக்க வைத்து அந்நீரை இறுத்து வடிகட்டி சிறிது சர்க்கரையும் சேர்த்து காலை வேளையில் தொடர்ந்து சாப்பிட பூரண குணம் ஏற்படும். அதுபோன்றே தேங்காய்ப் பால் வாய்ப்புண், நெஞ்சுப்புண், வயிற்றுப்புண் ஆகியவற்றினை குணம் அடையச் செய்வதோடு பித்தத்தையும் தவிர்க்கும். வாய்ப்புண்ணிற்கு கொப்பரைத் தேங்காயை மென்று தின்றால் கூட நிவாரணம் கிடைக்கும்.

உடல் சூடு தணிய: திராட்சைப்பழம், சாத்துக்குடி, இளநீர், அருகம்புல் சாறு மற்றும் நெல்லிக்காய் போன்றவை உடல் சூட்டைத் தணிக்கும். அன்றாடம் மோர் அருந்துவது (முக்கியமாக கோடை காலங்களில்), மாதுளம், வெள்ளரிப்பழம், பேயம் பழம், தர்பூசணி போன்றவையும் உடற்சூட்டையும் தாகத்தையும் போக்கக்கூடியதாகும்.

மதுவின் மயக்கம் தீர: அளவுக்கு அதிகமான மதுபானம் அருந்தி மயக்கமடைந்திருப்பவருக்கு மாதுளம் பழத்தை நன்றாக இடித்து சாறு பிழிந்து கொடுத்தால் போதும் மயக்கம் தெளியும். சிலர் எலுமிச்சம் பழத்தைக்கூட இவ்வாறு பிழிந்து சாறு எடுத்து அருந்தச் செய்வார்கள். சில சமயம் அது வாந்தி ஏற்பட வைக்கும்.

பல்வலி நீங்க: பொதுவாக அனைவருக்கும் ஏற்படக்கூடிய பல்வேறு பல் நோய்கள் என்பன பற்களை முறையாகப் பாதுகாக்காததே. பல்நோய் உள்ளபோது காலையில் பல் துலக்கியவுடன் ஒரு நெல்லிக்காயை நன்றாக மென்று தின்று வரலாம். இதனால் பல் தொடர்பான பல நோய்கள் குணமாகும். ஈறுகளில் வீக்கமும் வலியும் ஏற்பட்டு தொல்லை தரும்போது சிக்கன வைத்தியமாக, பப்பாளியைக் கீறினால் வெண்மையான பால் வரும். அந்தப் பாலை வீக்கமுள்ள இடத்தில் தடவி லேசாகத் தேய்த்தால் இரத்தமும் சீழும் வரும். பின் வலியும் வீக்கமும் குறையும். அல்லது சுத்தமான தேனை விரலில் எடுத்து தினந்தோறும் ஈறுகளைத் தேய்த்து வர, வீக்கம் குறையும். தினந்தோறும் காலையில் பல் துலக்கும்போது மிதமான வெந்நீரில் கொஞ்சம் உப்பைக் கலந்து அந்நீரில் வாயை நன்றாகக் கொப்பளித்து வருவது தொண்டை தொடர்பான அனைத்து நோய்களுக்கும் நிவாரணம் அளிக்கும்.

மேலும் சில மருத்துவக் குறிப்புகள்
இரத்தக் கொதிப்பிற்கு வெள்ளைப் பூண்டு சிறந்த நிவாரணி.

இருமலுக்கு வசம்பு.
எந்த வகை உணவையும் அளவிற்கு அதிகமாக உட்கொண்டாலும் அதற்கு மேலே நாலு பேரீச்சம் பழம் சாப்பிட்டால் போதும். செரிமானம் ஆகிவிடும்.
வெந்நீர்க் குளியல் காலிலிருந்தும், குளிர்நீர்க் குளியல் தலையிலிருந்தும் ஆரம்பிக்க வேண்டும்.

கண்களுக்கு நலம் தருபவை பொன்னாங்கண்ணி கீரை.
பற்கள் பாதுகாப்பிற்கு கரிசலாங்கண்ணி கீரை.
வயிற்று உபாதைகளுக்கு வாழைப்பழம்.
இதயத்திற்கு மீன் எண்ணெய், பூண்டு.
தோல் மினுமினுப்பிற்கு தேன்.
இளநரைக்கு பாதாம்பருப்பு.
கொழுப்பைக் குறைக்க வெங்காயம்.
நரம்புத் தளர்ச்சிக்கு சோயா.
நடுங்கும் கைகளுக்கு மாம்பழச்சாறு.
குடல் நலத்திற்கு புதினா கீரை, கறிவேப்பிலை, கொத்துமல்லி.
உடல் சூட்டைத் தணிக்க இளநீர், அருகம்புல் சாறு, லெமன் ஜூஸ்.

ஒவ்வொரு உடலிலும் மூலாதாரமான ஒரு சக்தி இருக்கிறது. அந்த சக்தி நல்ல நிலைமையில் இருந்தால் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும். அச்சக்தி தன் பலத்தில் குன்றினால் அதன் தன்மைக்கேற்ப வியாதிகள் தோன்றுகின்றன. இந்த அடிப்படையில்தான் வியாதி வராமல் தடுக்கவும், வியாதி வந்தபின் தீர்க்கவும் இயற்கை நமக்கு அளித்துள்ள காய்கறிகள், கனிவகைகள், எண்ணற்ற மூலிகை வகைகள் மற்றும் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு, அன்றாடம் உண்ணும் உணவு வகைகளின் முக்கியத்துவம், நல்ல பழக்க வழக்கங்கள், நடைப்பயிற்சி, தியானம், பொழுதுபோக்கு போன்றவற்றைச் சார்ந்தே ஒவ்வொருவரின் ஆரோக்கியம் சீராக அமைய முடியும் என்பதே இயற்கை தந்துள்ள உண்மையான அடிப்படையாகும். இவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

டான்சில் குணமாக
டான்சில் என்னும் உள்நாக்கு வளர்ச்சி பொதுவாகவே சிறுவர்களுக்குத்தான் அதிகமாக ஏற்படுவதுண்டு. அதற்கு புளியையும் உப்பையும் சமபங்கு சேர்த்து அரைத்து உள்நாக்கில் தடவி வர சிறிது சிறிதாக கரைந்து போகும்.

குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களுக்கு
குழந்தைகளுக்கு ஏற்படும் பலவித நோய்களிலிருந்து நிவாரணம் பெற, சிறிது வேப்பங்கொழுந்துடன் கொஞ்சம் மிளகு, பூண்டின் ஒரு பல் சேர்த்து வெண்ணெய் போல் அரைத்து நீரில் கலக்கி உள்ளுக்குச் சாப்பிட வைக்க வேண்டும். இவ்வாறு அடிக்கடி கொடுத்து வர, எந்த வித நோயும் தொல்லை கொடுக்காது. அதுபோன்றே குழந்தைகள் பல்வேறு திண்பண்டங்களை உட்கொள்வதால் வயிற்றில் பூச்சித் தொல்லை, உப்புசம் போன்றவை ஏற்பட வாய்ப்புகள் உண்டு. எனவே, பூச்சித் தொல்லையையும் ஒழிக்க மருத்துவரை கலந்து உரிய சிகிச்சை பெறவும்.
ஹிஸ்டீரியா நோய் குணமாக
ஹிஸ்டீரியா எனும் மனபாதிப்பு அடைந்தவர்களுக்கு எலுமிச்சம் பழச்சாற்றில் சிறிது பெருங்காயத்தைச் சேர்த்து கலக்கி தினமும் மூன்று வேளை சாப்பிட நல்ல மாறுதல் காணலாம்.

கருக் குழந்தை வளர்ச்சிக்கு
கருவுற்றிருக்கும் தாய்மார்கள் அடிக்கடி முருங்கைக் கீரை, பேரிக்காய், ஆப்பிள், மாதுளம் போன்ற பழ வகைகளை அன்றாடம் உணவில் சேர்த்துக்கொள்வதோடு, மாதம் ஒருமுறை மருத்துவப் பரிசோதனை செய்துகொண்டு, இரத்த சோகை எனும் நோய் ஏற்படா வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும். முடிந்தால் அவ்வப்போது நடைப்பயிற்சி மேற்கொள்வதும் சிறந்ததாகும்.

பருவம் அடையாத பெண்களுக்கு மருந்து
குங்குமப்பூ மிக உயர்ந்த மருத்துவ குணம் வாய்ந்தது. அதிக வயதாகியும் பருவமடையாமல் இருக்கும் பெண்களுக்கு குங்குமப் பூவை உள்ளுக்குள் கொடுத்து வர, விரைவில் பருவமடைவார்கள். கருவுற்றிருக்கும் தாய்மார்களும் தினமும் இரவில் காய்ச்சிய சோயா பாலில் சிறிது குங்குமப்பூவை கலந்து சாப்பிட்டு வர, சுகப்பிரசவம் ஏற்படும். அதுபோன்றே இரவில் வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு சேர்த்துச் சாப்பிட செரிமானமும் எளிதாகும். சிறிது குங்குமப்பூவை தாய்ப்பாலில் இழைத்து நெற்றியில் பற்றுப்போட தலைவலி நீங்கும்.

இவ்வாறு இழைத்து வருவதில் இரண்டு சொட்டுகள் கண்களில் விட்டால் கண் நோய் குணமாகும்.
மாதவிடாய்க் கோளாறுகள் குணமாக
வெங்காயத்தைப் போல வெங்காயப்பூவும் மருத்துவ குணம் உடையது. வெங்காயப் பூக்களை சிறிது நேரம் ஊற வைத்து அதைக் குடிநீராக அருந்தினால் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய்க் கோளாறுகள் நீங்கும்.
இரத்தப்போக்கு நீங்க
பெண்களுக்கு மாதவிடாயின் போது, அதிக இரத்தப் போக்கு ஏற்படுவதுண்டு. இதைக் கட்டுப்படுத்த வாழைக்காயை அடுப்பில் சுட்டு தோலை எடுத்து எறிந்துவிட்டு, உள்காயை நன்றாக அரைத்து தயிரில் நன்கு கலந்து சாப்பிட விரைவில் குணமாகும்.
காதுகுத்தல் நீங்க
காது குத்தல் இருந்தால் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெயில் சிறிது பெருங்காயத்தைப் பொரித்து பின் அந்த எண்ணெயை மட்டும் லேசான சூட்டில் சில துளிகள் காதில் விட குணம் பெறலாம்.
காமாலை நோய்க்கு மருந்து
காமாலை நோயா? பூவரசு இலைக் கொழுந்துடன் ஐந்து மிளகைச் சேர்த்து அரைத்து ஒரு தேசிக்காய் பழ அளவு மோரில் கலந்து காலை, மதியம், இரவு என மூன்று வேளை வீதம் சாப்பிட்டு வந்தால் ஏழு அல்லது பத்து நாட்களில் குணமாகும். அந்த நாட்களில் உப்பு கலந்த உணவை அறவே நீக்க வேண்டும். மதுபானமும் அருந்தக்கூடாது.
கண்சதை வளர்ச்சி குணம் பெற
சிலருக்கு கண்சதை வளர்ச்சி ஏற்படுவதுண்டு இதற்கு சிக்கன வைத்தியமாக பேரீச்சம் பழத்தின் உட்புறம் இருக்கும் கொட்டையை எடுத்து அதை பன்னீரிலோ அல்லது தாய்ப்பாலிலோ இழைத்து கண்ணுக்கு மை இடுவதுபோல போட குணம் பெறலாம்.

முடி உதிர்வதைத் தடுக்க
சில பெண்களுக்கு அதிக அளவில் முடி உதிர்தல் இருக்கும். அவர்கள் நெல்லிக்கனிகளை அரைத்து அதில் கொஞ்சம் எலுமிச்சம் பழச் சாற்றையும் கலந்து தலையில் ஊறும்படி தேய்த்துக் குளித்து வந்தால் முடி உதிர்தல் நின்றுவிடும். தலையில் முடி உதிர்ந்து சொட்டையாதலுக்கு வெள்ளைப்பூண்டுப் பற்களைத் தேனில் ஊரவைத்து சொட்டை விழுந்த இடத்தில் பத்து நிமிடங்கள் தேய்த்து வரவேண்டும். அவ்வாறு தொடர்ந்து இருபது நாட்கள் செய்ய முடி வளரும். தலை முடி வளர, எலுமிச்சம் பழவிதைகளுடன் கொஞ்சம் மிளகையும் சேர்த்து நீர் விட்டு அரைத்து முடி உதிர்ந்த இடத்தில் தேய்த்து வந்தால் சிறிது நாளில் முடி வளரும். உடல் சூட்டினால் சிலருக்கு முடி கொட்டி விடுவதுண்டு. அதற்கு வெந்தயத்தை நீர் விட்டு அரைத்து தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்தப்பின் குளிக்கவேண்டும். உஷ்ணம் கட்டுப்படுவதோடு, முடி கொட்டுவதும் நிற்கும்.

இரத்த விருத்திக்கு
வாழைப்பூ பெண்களுக்கு ஏற்படும் பல நோய்களை குணமாக்கவல்லது. இரத்த விருத்திக்கும் வாழைப்பூ மிகவும் சிறந்த உணவுப்பொருளாகும். அதனால் வாழைப்பூவை அடிக்கடி சமைத்து உண்பது நல்லது.

நரம்புத் தளர்ச்சிக்கு
நரம்புத் தளர்ச்சிக்கு வெங்காயம் சிறந்த நிவாரணி ஆகும். வெங்காயத்தை நன்றாக வதக்கி காலை வேளையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். இவ்வாறு பதினைந்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி குணமடையும்.
இரத்தத்தைச் சுத்தப்படுத்த:
ஆரஞ்சு பழம் இனிப்பும் புளிப்பும் கலந்த சுவை கொண்டது. இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் ஆற்றல் இதற்குண்டு. பித்தத்தைத் தணித்து ஜீரண சக்திகளை அதிகரிக்கும். இருமல், நீரிழிவு மற்றும் ஈரல் சம்பந்தமான நோய்களைத் தீர்க்கும் மருத்துவ குணம் உள்ளது. ஆரஞ்சு பழம் மற்றும் ஜூஸ் ஆகியவற்றை முதியோர் முதல் இளம் சிறார்கள் வரை அனைவரும் பருகலாம். சர்க்கரைக்குப் பதிலாக குளுகோஸ்கூட சேர்த்துக் கொள்ளலாம்.

இதய பலவீனத்திற்கு
இதய பலவீனம், இதயக் கோளாறு உள்ளவர்கள் சிறிய இஞ்சியை அரைத்து ஒரு டம்ளர் வெந்நீரில் கலக்கி அரை மணி நேரம் தெளிய வைக்க வேண்டும். பின் தெளிந்த நீரை வடிகட்டி அத்துடன் ஒரு ஸ்பூன் தேன், அரை ஸ்பூன் தேசிக்காய்ச் சாறு கலந்து தினந்தோறும் காலையில் சாப்பிடவேண்டும். இவ்வாறு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இதயம் பலப்படும். இதயக் கோளாறு மீண்டும் வராது.

கண் ஒளியை அதிகரிக்க
பப்பாளி பல நோய்களைக் குணமாக்கவல்ல பழங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது. இது சிறந்த கிருமிநாசினியும் கூட. சீரண சக்தியை அதிகரிக்கும். கண் பார்வையை அதிகரிப்பதோடு கண்களுக்கு வலு தந்து பார்வை சம்பந்தமான கோளாறுகளுக்கு நிவாரணம் அளிக்கும்.
இடுப்புவலி நீங்க
இடுப்பு வலி, கை கால் குடைச்சல் போன்ற தொல்லைகளுக்கு சிக்கன வைத்தியமாக கொஞ்சம் கோதுமை மாவை பொன் வறுவலாக வறுத்தெடுத்து, அதில் சிறிது தேனைக் கலந்து பிசைந்து சாப்பிட்டு வர வலிகள் நீங்குவதோடு, சர்க்கரை நோயும் கட்டுப்படும்.

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த
நீரிழிவு நோயாளிகள் விதை நீக்கிய பேரீச்சம் பழத்தை அரைத்து பாகு செய்து சாப்பிட இந்நோயைக் கட்டுப்படுத்தலாம்.

சிறுநீர்ப் பிரச்னைகளைத் தவிர்க்க
அருகம்புல் ஒரு சிறந்த மருந்துப் பொருளாகும். நீண்ட நாள் உயிர் வாழ ஏற்றது. ஒரு பிடி அருகம்புல்லை எடுத்து சுத்தம் செய்து கொஞ்சம் நீரிலிட்டு காய்ச்சி இந்நீருடன் சோயா பால், சர்க்கரை சேர்த்துச் சாப்பிடுவது நல்லது.
இந்நீரை காபி அல்லது தேனீரில் கூட கலந்து சாப்பிடலாம். இதனால் சிறுநீர் சம்பந்தமான தொல்லைகள் நீங்கும். சிறுநீர்ப்பையும் உறுதிப்படும். சில நேரங்களில் சிறுநீர் வெளியேறும்போது தாங்க முடியாத எரிச்சலும் வலியும் இருக்கும். இதற்கு சிறிது விளாம்பழத்தினை நீரில் கரைத்து உள்ளுக்கு அருந்தினால் எரிச்சலும் வலியும் நீங்கும்.

இரத்த சோகை குணமடைய
கொய்யாப்பழம் எல்லா காலத்திலும் கிடைப்பதில்லை. கிடைக்கும் நேரங்களில் அதை அன்றாடம் சாப்பிட்டு வர இரத்த சோகை குணமடையு

சில சமயங்களில் நமது உடலை பாதிக்கும் வகையில் நம்மையும் அறியாமல், பலதரப்பட்ட ஐயிட்டங்களில் ருசியின் தாக்கத்தில் உந்தப்பட்டு நமக்கு அஜீரணம் அளிக்கும் உணவு வகைகளை சாப்பிட்டு அவஸ்தைப்பட நேரிடலாம். எனவே உணவு விஷயத்தில் மிகவும் கவனம் தேவை என்பதை முன்கூட்டியே எச்சரிக்கின்றேன்.

வயிற்று வலி
உஷ்ணத்தினால் வயிற்றில் எரிவது போலவும், முறுக்குவது போலவும் சில சமயங்களில் உபாதைகள் ஏற்படுவது என்பது ஒரு சிலருக்கு இயல்பானதே. இதற்கு மருந்தை தேடிக்கொண்டு எந்த மருத்துவரிடமும் செல்ல வேண்டாம். தனியா 100 கிராம், மிளகாய் 5 கிராம், மிளகு 3 கிராம், துவரம்பருப்பு 50 கிராம், பெருங்காயம் 5 கிராம், உப்பு வேண்டிய அளவு இவற்றை தனித்தனியே வறுத்து சேர்த்து பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள். சாதத்துடன் இப்பொடியை கலந்து சிறிது நெய் சேர்த்தோ அல்லது இட்லி, தோசை போன்ற பலகாரங்களுடன் சேர்த்தோ சாப்பிடலாம்.

இதனால் உஷ்ண சம்பந்தமான வயிற்றுக் கோளாறு நீங்கும். மூலச்சூட்டினால் அவதியுறுவோர் மாங்கொட்டையை உடைத்து அதனுள்ளிருக்கும் பருப்பை அரைத்து சாப்பிட்டு வந்தால் குணமாகும்.

வயிறு உப்புசம் நீங்க சாதம் வடித்த கஞ்சியில் சிறிது மஞ்சள் தூளைக் கலந்து தெளிய வைத்து பின் அந்நீரை அருந்தலாம்.

அதுபோலவே வயிற்றுக் கடுப்பு நீங்க வெந்தயத்தை நன்றாக அரைத்து தயிரில் கலந்து கொடுத்தால் போதும்.

சிலருக்கு வயிற்றில் பூச்சிகள் இருப்பதனால் சரிவர பசிக்காது. இதற்கு அன்னாசிப் பழம் நல்ல மருந்தாகும். அன்னாசி பழச்சாறு வயிற்றிலுள்ள பூச்சிகளைக் கொல்லும் ஆற்றல் உள்ளது. அதுபோன்றே மாங்கொட்டை பருப்பும் பூச்சிகளை ஒழிக்கும். மாங்கொட்டையை உலர்த்தித் தூள் செய்து சிறிது தேனில் குழைத்துச் சாப்பிட பூச்சித் தொல்லை ஒழியும். மேலும் பித்தத்தினால் ஏற்படும் தொல்லையை நீக்க இஞ்சி சாற்றில் கொஞ்சம் தேனைக் கலந்து காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து சாப்பிட நல்ல குணம் பெறலாம். தேவைப்பட்டால் கொஞ்சம் தேசிக்காய்ச் சாற்றையும் சேர்த்துக்கொள்ளலாம். வயிற்றுளைச்சலுக்கு சூடான பாலில் தேசிக்காய்ச் சாற்றைப் பிழிந்து பால் முறிந்த பின் தெளிந்து வரும் நீரைப் பருகினால் போதும்... உளைச்சல் கட்டுப்படும்.


மலச்சிக்கல்
`மலச்சிக்கல் பல சிக்கல்' என்பது ஆன்றோர் மொழி. பொதுவாகவே இரவில் நிம்மதியான தூக்கம், காலையில் மலம், சிறுநீர் கழித்தல் ஆகியவை சீராய் இருந்தாலே போதும் உடல் பாதிப்பு ஏற்படுவது என்பது அவ்வளவாக இருக்காது. நீடித்த மலச்சிக்கலில் அவதிப்படுவோர் வாழைத்தண்டை சிறு துண்டுகளாக நறுக்கி அத்துடன் ஒரு தேசிக்காய்ச் சாற்றைப் பிழிந்து மூன்று பச்சை மிளகாயை நறுக்கிப்போட்டு நன்றாகக் கலக்கி அரை மணி நேரத்திற்குப் பின்பு சாதத்துடன் கலந்து சாப்பிட்டு வர மலச்சிக்கல் நீங்கும். பேரீச்சம் பழம்கூட மலச்சிக்கல்களை போக்கும் குணமுள்ளது. இப்பழத்தைக் தொடர்ந்து சாப்பிடுவதினால் ஏற்படும் உஷ்ணத்தைத் தணித்துக்கொள்ள சோயா பால் அருந்தினால் போதும்.

தூக்கம் வர
தூக்கம் வரவில்லை என்றால் தூக்க மாத்திரையைச் சாப்பிடுவதை பலர் வழக்கமாய் கொண்டுள்ளனர். இது மிகவும் கெடுதலானது. இயற்கை வைத்தியமாக வெங்காயத்தை நசுக்கி ஒரு சொட்டு கண்ணில் பிழியலாம். அத்துடன் சீரகத்தை ஒரு மெல்லிய துணியில் முடிந்து அடிக்கடி அதன் வாசனையை நுகரலாம். இதனால் இயற்கையாகவே நல்ல தூக்கம் வரும்.


உடல்சூட்டைத் தணிக்க
திராட்சைப்பழம் உடலின் உஷ்ணத்தை தணித்து குளிர்ச்சியை உண்டாக்குவதோடு, மலச்சிக்கலையும் போக்கும் என்பதால் `திராட்சைப் பழங்களை அடிக்கடி சாப்பிடுவது நன்மை பயக்கும்.


மூல வியாதிக்கு மருந்து
மூல வியாதியினால் அவதியுறுவோர் தேசிக்காய் சாற்றை சோயா பாலில் பிழிந்து கலந்து சாப்பிட்டு வர வலியும் குறையும், இரத்தப்போக்கு இருந்தாலும் குறைந்து குணமாகி விடும்.

நெகிழவைக்கும் நெல்லிக்காயின் பயன்? (Gooseberry)

ஒரு ஆரஞ்சுப் பழத்தில் இருக்கும் வைட்டமின் `சி'யின் அளவைப்போல் இருபது மடங்கு வைட்டமின் சத்தைக் கொண்டது நெல்லிக்காய். இதைவிட நெல்லிக்காய் சாப்பிடுங்க அப்படின்னு நான் உங்களுக்கு எடுத்துச் சொல்ல வேறெதாவது காரணம் தேவைப்படுமா? இன்னொரு அற்புதமான விஷயம் என்னவென்றால், மற்ற இயற்கை உணவுகளைப்போல் இல்லாமல் நெல்லிக்காயை சமைத்து உண்டாலும் அதனுடைய சத்து சமைப்பதனால் குறைவதே கிடையாது.

கொழுப்புச்சத்து உடலிற்குத் தேவையான ஒன்று. மனிதனுடைய ஈரல் இந்த கொழுப்புச் சத்திற்கு அடிப்படையாக அமைவது. உடலிற்குத் தேவைப்படாத அதிகப்படியான கொழுப்புச்சத்து இரத்தக் குழாய்களில் படிய ஆரம்பிக்கும். இதுதான் மாரடைப்பு ஏற்பட காரணமாகிவிடுகிறது. நெல்லிக்காயில் இருக்கும் வைட்டமின் `சி' இரத்தக் குழாய்களில் படிந்திருக்கும் கொழுப்புச் சத்துக்களை சுலபமாக கரைத்துவிடும். மாரடைப்பைத் தவிர்க்கலாம்.

நெல்லிப்பொடி + சர்க்கரைத் தூள் தினமும் வெறும் வயிற்றில் தண்ணீரில் கரைத்துப் பருகி வர, உடம்பில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்கலாம். சர்க்கரை நோயால் அவதிப்படுகிறவர்கள் நெல்லிப்பொடி + சர்க்கரை + பாகற்காய் பொடி 2 அல்லது 3 முறை ஒரு நாளைக்கு சாப்பிட்டு வர முன்னேற்றம் தெரியும்.

அசிடிடி உள்ளவர்களுக்கும் நெல்லி ஒரு சிறந்த நிவாரணி. ஏன் முடி வெள்ளையாக மாறி வருகிறது என்று கவலைப்படுபவர்கள், நெல்லிப்பொடியை ஒரு இரும்புக் கின்னத்தில் போட்டு தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்தால் ஷாம்பு + கண்டிஷனர் + ஹேர்டை தயார்!

Sunday, July 13, 2008

குழந்தை வைத்தியம் !


குழந்தைகளுக்கு ஆரம்பத்திலேயே ஊட்டச்சத்துகள் அனைத்தும் கிடைக்கும் வகையில் நல்ல சத்துள்ள உணவுகளைக் கொடுத்து வளர்க்க வேண்டும். உணவில் பொதுவாக புரதம், கொழுப்பு, மாவுப் பொருள் வைட்டமின்கள், தாது உப்புகள் என்னும் ஐந்து வகையான முக்கிய உணவுச் சத்துகள் அடங்கியுள்ளன.

குழந்தையின் உணவில் இந்த ஐந்து வகையான முக்கிய ஊட்டச்சத்துகளும் போதுமான அளவில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் குழந்தைகள் பல வகையான ஊட்டச்சத்து பற்றாக்குறை நோய்களினாலும், தொற்று நோய்களினாலும் பாதிக்கப்படுவர்.

உடலின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியமான புரதம் பால், முட்டை, இறைச்சி வகைகள், பருப்பு வகைகள், பட்டாணி போன்ற உணவுப் பொருட்களில் அதிகமாக உள்ளது. எனவே, குழந்தையின் உணவில் பால், பருப்பு, பட்டாணி போன்றவற்றை அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.

உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமான கொழுப்பு பால், வெண்ணெய், நெய், இறைச்சி, சமையல் எண்ணெய்கள் போன்றவற்றில் அதிகமாக உள்ளது. ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தையின் உணவில் நெய், வெண்ணெய், சமையல் எண்ணெய்கள் போன்றவற்றை அளவோடு சேர்த்துக் கொள்ளலாம்.
மாவுப் பொருட்கள் உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்குகின்றன. அரிசி, கிழங்குகள், தானியங்கள் ஆகியவற்றில் மாவுப் பொருட்கள் அதிகமாக உள்ளன. அரிசிச் சோறு, கோதுமை மற்றும் வேறு தானியங்களில் செய்த பண்டங்கள், உருளைக் கிழங்கு போன்றவற்றை குழந்தையின் உணவில் சிறிதளவு சேர்த்துக் கொள்ளலாம்.

பொதுவாக, சிறு குழந்தைகளின் உணவில் மாவுப் பொருள் கொழுப்பு ஆகியவற்றை விட புரதச் சத்து நிறைந்த உணவுப் பொருட்களை அதிகமாக சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. அதே சமயம், மாவுப் பொருட்கள், கொழுப்பு ஆகியனவும் குழந்தைகளுக்கு போதுமான அளவில் கிடைக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

அதைத் தவிர கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு போன்ற சில தாதுப் பொருட்களும் குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்குத் தேவைப்படுகின்றன. கால்சியமும், பாஸ்பரஸும் குழந்தையின் பல் மற்றும் எலும்புகளின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியம். இரும்பு, செம்பு போன்றவை இரத்த விருத்திக்கு தேவைப்படுகின்றன.

பால், அவரைக்காய் போன்றவற்றில் கால்சியம் அதிகமாக இருக்கிறது. உப்பு, பால், கோழி, இறைச்சி போன்றவற்றில் பாஸ்பரஸ் அதிகமாக உள்ளது. கீரை, அவரைக்காய், பட்டாணி போன்றவற்றில் இரும்புச்சத்து அதிக அளவில் இருக்கிறது.
சிறு குழந்தைகளின் தினசரி உணவில் மீன் எண்ணெய், பழரசம், பருப்பு, நெய், கீரை, காய்கறிகள், அரிசியுடன் கோதுமை, கேழ்வரகு போன்றவற்றையும் போதிய அளவில் சேர்த்துக் கொள்ளலாம். அதோடு ஆரஞ்சு, தக்காளி, திராட்சை, வாழைப்பழம் போன்ற பழங்களில் ஏதாவது ஒன்றையும் தினமும் கொடுக்கலாம்.
மேலே குறிப்பிட்டுள்ள உணவுச் சத்துக்கள் தவிர வைட்டமின்கள் எனப்படும் உயிர்ச் சத்துகளும் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கும், வளர்ச்சிக்கும் அவசியமாக தேவைப்படுகின்றன. வைட்டமின்கள் பொதுவாக ஏ, பி, சி, டி, இ, கே என்னும் ஆங்கில எழுத்துகளுடன் அழைக்கப்படுகின்றன.
தோல், தொண்டை, மூச்சுக்குழல், கண் போன்ற உறுப்புகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க வைட்டமின் ஏ உதவுகின்றது. இந்த வைட்டமின் பற்றாக்குறையினால் சளித் தொல்லைகள் ஏற்படும். மாலைக்கண் நோய் ஏற்படும். இந்த நிலை முற்றினால் முழுமையான பார்வை இழப்பும் ஏற்படலாம்.
கொழுப்பில் கரையக்கூடிய இந்த வைட்டமின் பால், தயிர், வெண்ணெய், மீன் எண்ணெய், கீரை, பழங்கள், காரட் போன்றவற்றில் அதிகமாக உள்ளது. எனவே, குழந்தையின் உணவில் இவற்றை அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும். அதோடு, 10 வயது வரையிலும் குழந்தைக்கு தினமும் ஒரு வேளை இரண்டு தேக்கரண்டி மீன் எண்ணெய் கொடுப்பது நல்லது.
வைட்டமின் பி என்பது 12 வைட்டமின்கள் சேர்ந்த ஒரு குழு. பி வைட்டமின்களில் ஒன்றான தையமின் பற்றாக் குறையினால் `பெரி பெரி' என்னும் நோய் ஏற்படும். கால்களில் குடைச்சல், சோர்வு, இதய பலவீனம் போன்றவை அந்த நோயின் அறிகுறிகளாகும். பழங்கள், ஈஸ்ட், முளைகட்டிய கொத்துக்கடலை, பயறு, உளுந்து, அரிசித் தவிடு, பச்சைக் காய்கறிகள், முட்டை, கல்லீரல் போன்றவற்றில் இந்த வைட்டமின் அதிகமாக உள்ளது.

மற்றொரு பி வைட்டமினான நிக்கோடினிக் அமிலம் பற்றாக்குறையினால் பெல்லாகிரா என்னும் நோய் ஏற்படும். பால், முட்டை, ஆட்டுக் கல்லீரல் ஆகியவற்றில், இந்த வைட்டமின் அதிகமாக இருக்கிறது. பல், ஈறு, இரத்தக் குழாய்கள் ஆகியவற்றின் ஆரோக்கியத்தை பாதுகாக்க வைட்டமின் `சி' தேவைப்படுகிறது. இந்த வைட்டமின் பற்றாக்குறையினால் `ஸ்கர்வி' என்னும் நோய் ஏற்படுகின்றது. ஆரஞ்சு, திராட்சை, தக்காளி, காலி பிளவர், பட்டாணி, நெல்லிக்காய் போன்றவற்றில் இந்த வைட்டமின் அதிகமாக உள்ளது.

எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு வைட்டமின் `டி' தேவைப்படுகிறது. இந்த வைட்டமின் பற்றாக்குறையினால் ரிக்கெட்ஸ் என்னும் நோய் ஏற்படுகின்றது. பால், வெண்ணெய், முட்டை, மீன் எண்ணெய் போன்றவற்றில் இந்த வைட்டமின் அதிகமாக உள்ளது.

தாயார் கர்ப்பமாக இருக்கும் போது கருச்சிதைவு ஏற்படுவதைத் தடுக்கவும், கருப்பையில் வளரும் குழந்தை ஆரோக்கியமாக பிறக்கவும் வைட்டமின் இ தேவைப்படுகிறது. பால், முளை கட்டிய பயறு வகைகள், காய்கறிகள் போன்றவற்றில் இந்த வைட்டமின் உள்ளது.

குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய இரத்தக் கசிவு நோய்களைத் தடுக்க வைட்டமின் `கே' தேவைப்படுகிறது. மீன் எண்ணெயில் இந்த வைட்டமின் அதிகமாக இருக்கிறது.

ஸ்கர்வி: வைட்டமின் சி பற்றாக்குறையினால் ஸ்கர்வி என்னும் நோய் ஏற்படுகின்றது. பிறந்த எட்டு மாதங்களிலிருந்து ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைகளையே இந்த நோய் அதிகமாக பாதிக்கின்றது.

அறிகுறிகள்: ஆரம்பத்தில் குழந்தைக்கு பசி இருக்காது. குழந்தையை எடுக்கும் போதும், கீழே விடும் போதும் குழந்தையின் கை, கால்களில் உள்ள எலும்புகளில் தாயின் கைபட்டு அதிர்ச்சி ஏற்படுவதால், குழந்தை வலி தாங்காமல் வீரிட்டு அழும். பல்முளைத்த குழந்தையானால் பற்களைச் சுற்றியுள்ள ஈறு வீங்கி நீலநிறத்துடன் காணப்படும்.

சிகிச்சை: இதை வருமுன் தடுப்பது தான் சிறந்தது. குழந்தைக்கு தினமும் ஒரு தக்காளிப் பழம் அல்லது ஆரஞ்சுப் பழம் கொடுத்தால் இந்த நோய் ஏற்படாது. நோய் வந்த பின்னர் தினமும் மூன்று வேளைகளும் வைட்டமின் சி மாத்திரைகள் வேளைக்கு 50 மி.கிராம் அளவு கொடுத்து வந்தால் விரைவில் நோய் குணமாகிவிடும். அத்துடன் தினமும் இரண்டு வேளை பழரசம் கொடுக்கலாம்.

குழந்தையை அடிக்கடி கையில் எடுக்கக் கூடாது. மிருதுவான பஞ்சு மெத்தையில் படுக்க வைக்க வேண்டும். இந்த நோய்க்கு சொந்தமாக சிகிச்சை அளிப்பதை விட மருத்துவரிடம் காட்டி சிகிச்சை அளிப்பது தான் சிறந்தது.

ரிக்கெட்ஸ்: வைட்டமின் `டி' பற்றாக்குறையினால் ரிக்கெட்ஸ் என்னும் நோய் ஏற்படுகின்றது. உணவில் இந்த வைட்டமின் பற்றாக்குறையானாலும், சூரிய வெளிச்சம் படாமல் வளர்த்தாலும் குழந்தைக்கு இந்த நோய் ஏற்படுகின்றது.

அறிகுறிகள்: பெரும்பாலும் ஆறுமாதங்களிலிருந்து ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்குத்தான் இந்த நோய் அதிகமாக ஏற்படுகின்றது. ஆரம்பத்தில் குழந்தை எப்போதும் சிணுங்கிக் கொண்டே இருப்பான். குழந்தையின் தலை அடிக்கடி வியர்வையினால் நன்கு நனைந்து விடும். தாயார் தன் மீது போர்வையை போர்த்தினால் அதை விலக்கித் தள்ளி அழும். மார்பு எலும்புகளின் ஓரம் உருத்திராட்ச மாலை போல பருத்து விகாரமாகிவிடும். பல் முளைக்கும் பருவம் தாண்டி பல மாதங்களான பின்னர் கூட பல் முளைக்கும் அறிகுறி கொஞ்சம்கூட இல்லாமல் வாய் பொக்கையாக இருக்கும்.

உடலில் உள்ள எலும்புகள் அனைத்தும் பலவீனமாகி விடும். இதனால் நடக்கும் பருவத்துக் குழந்தைகளின் கால் எலும்புகள் வளைந்து போகும். முட்டிகள் தட்டும். இடுப்பு எலும்புகள் இயல்பான அகன்ற தோற்றத்தை இழந்து குறுகி விடும்.

பெண் குழந்தைகளுக்கு ரிக்கெட்ஸ் நோய் ஏற்பட்டு இடுப்பு எலும்புகள் இதபோல குறுகிவிட்டால், பின்னர் அவர்கள் வளர்ந்து கர்ப்பமாகும்போது பிரசவம் மிகவும் கஷ்டமானதாகி விடும். ரிக்கெட்ஸ் நோயினால் மற்ற எலும்புகளும் உறுதி குன்றும். சாதாரணமாக, ஆரோக்கியமான குழந்தையின் தலையில் உள்ள உச்சிக்குழி என்னும் பள்ளம் குழந்தை பிறந்த 18வது மாதத்திற்குள் நன்றாக மூடிக் கொண்டு விடும். ஆனால், ரிக்கெட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இரண்டு வயதான பின்னரும் உச்சிக் குழி மறையாது.

ரிக்கெட்ஸ் நோய் குடலை அதிகமாக பலவீனப்படுத்தி விடுவதால் குழந்தைகளுக்கு அடிக்கடி ஜீரணக் குறைபாடுகள் ஏற்படும். கல்லீரல், மண்ணீரல் ஆகியவை பருத்து வயிறு பானை போல முன்னால் தள்ளிக் கொண்டிருக்கும். மூச்சு விட சிரமப்படும். சளி, இருமல் ஆகியவை அடிக்கடி ஏற்படும். நரம்பு மண்டலமும் பாதிக்கப்படுவதால் இந்தக் குழந்தைக்கு வலிப்பு நோய் வரவும் அதிக வாய்ப்பு உள்ளது.

சிகிச்சை: வருமுன் தடுப்பதுதான் இந்த நோய்க்கு சிறந்த சிகிச்சை. தாய்ப்பால் கொடுத்துதான் குழந்தையை வளர்க்க வேண்டும். புட்டிப் பால் கொடுத்தால் குழந்தைக்கு கூடுதலாக வைட்டமின் கிடைக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். தினமும் இரண்டு வேளைகள் குழந்தைக்கு மீன் எண்ணெய் கொடுக்க வேண்டும். நல்ல சூரிய வெளிச்சத்தில் குழந்தையை தினமும் விளையாட விட வேண்டும். நல்ல சத்துள்ள உணவுகளைக் கொடுக்க வேண்டும். ரிக்கெட்ஸ் நோய் ஏற்பட்டிருப்பதாக சந்தேகப்பட்டால், குழந்தையை உடனடியாக மருத்துவரிடம் காட்டி உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்.

சருமம் தளதளக்க

< வெள்ளரிச்சாறும், தர்ப்பூசணிப் பழச்சாறும் மிகவும் நல்ல ஆஸ்ட்ரிஞ்ஜென்ட்'கள். இவற்றை ஒரு பஞ்சால் முகத்தில் தடவி, ஊறினால் எண்ணெய் வடிதல் கட்டுப்படும். சருமமும் மிருதுவாகும்.

< சோப்பை அடிக்கடி பயன்படுத்தினால் முகச்சருமம் வறண்டு விடும். வறண்ட சருமம் சுலபத்தில் சுருக்கம் விழுந்து வயதான தோற்றத்தை ஏற்படுத்தும். அதனால் கடலை மாவு, அல்லது பயத்தமாவு தேய்த்து முகத்தை அலம்பவும்.

< வெயிலில் அலைந்து திரிந்த பிறகு வீடு வந்தால் முகம் கறுத்துப் போய் இருக்கும். இதை சரியாக்க ஒரு சுலபமான வழி. புளித்த தயிரை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் பூசி ஊறவிடவும். அரை மணி நேரத்துக்குப் பிறகு கழுவினால் கறுப்பு மாறி சருமம் இயற்கையான நிறத்திற்கு வந்துவிடும்.

< எலுமிச்சை மற்றும் ஆரஞ்சுப் பழத்தோலை நன்றாகக் காயவைத்து, பொடியாக்கி, கடலைமாவுடன் கலந்து முகத்தில் தேய்த்துக் கழுவி வந்தால் எண்ணெய் வடிதல் நிற்கும்.

< எண்ணெய்ப் பசை அதிகமாக உள்ள சருமத்தை உடையவர்கள் வாரம் ஒரு முறை முகத்தை ஆவியில் காட்டியபடி 10 நிமிடம் `ஸ்டீம்' செய்தபின் முகத்தை சுத்தமான பஞ்சால் அழுந்தத் துடைத்து, கரும்புள்ளிகளை லேசாக பக்கவாட்டிலிருந்து அழுத்தி எடுத்தபின் குளிர்ந்த நீரால் கழுவி வரவும். வறண்ட சருமம் மற்றும் சென்சிட்டிவ் சருமத்தினர் `ஸ்டீம்' செய்தால் சருமம் மேலும் வறண்டு விடும். ஸ்டீம் செய்ய அகலமான ஒரு பேசினில் தண்ணீரைக் கொதிக்க விட்டு `சிம்'மில் வைத்து அதற்கு 11/2 அடிக்கு மேல் முகத்தைக் காட்டவும். நெற்றிக்கு மேல் தலைமுடியை ஒரு டவலால் சுற்றிக் கொண்டு முகத்தில் மட்டும் ஆவி படும்படி காட்டவும். ஆவி பிடிக்கும் போது கண்களை மூடிக் கொள்ளவும். நன்கு ஆவி பிடித்த பின் முகத்தை சுத்தம் செய்து விட்டு `ஃபேஸ் மாஸ்க்' உபயோகப்படுத்தினால் சருமம் புத்துணர்வும், பொலிவும் மழமழப்பும் பெறும்.

< அரைத்த திராட்சைப் பழக்கூழைப் பூசி ஊறியபின் குளித்தால், சருமம் பளிச்சென்று இருக்கும்.

< புளித்த தயிரில் கடலை மாவு கலந்து தினமும் தேய்த்து 10 நிமிடங்கள் ஊறிக் குளியுங்கள். உங்கள் தோல் ஆரோக்கியமாக இருக்கும்.

< எலுமிச்சைத் தோலைக் காயவைத்து நைஸாகப் பொடித்து ஸ்நானப் பொடியுடன் கலந்து தேய்த்துக் குளித்து வந்தால் சருமம் அழகாகும்.

< தேன் இயற்கையாகவே `ப்ளீச்' செய்யக்கூடிய குணம் உள்ளது. முகத்தில் முளைத்துள்ள உரோமங்கள் மீது (புருவங்கள், இமைகள் தவிர) தேனைத் தடவி 30 நிமிடம் ஊறினால் இவைகள் வெளிறி தோலோடு ஒன்றிவிடும். பார்ப்பதற்கு அசிங்கமாக இருக்காது. வாரம் இரு முறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

< கடலைமாவு, பயத்தமாவு, சந்தனப்பொடி கலந்து முகத்தில் தேய்த்துக் கழுவினால் முகம் பட்டுப் போல மென்மையாக இருக்கும்.

< ஒரு முட்டையை உடைத்து நன்கு கலக்கி அதில் சிறிது யூடிகோலோனையும் சேர்த்து உங்கள் முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் பூசிக் காயவிடவும். கண்களைச் சுற்றி பூச வேண்டாம். இக்கலவை நன்கு காய்ந்தபின் இதை கழுவி முகத்தைத் துடைக்கவும். சருமம் பளபளக்கும். மிகவும் ஆரோக்கியமாக ஜொலிக்கும். இக்கலவை முகத்தில் காயும் போது பேச, சிரிக்க வேண்டாம். இதை மாதம் இரு முறை செய்து வந்தால் சருமம் தொய்ந்து, தளர்ச்சியடையாமல், சுருக்கம் விழாமல் இருக்கும்.

< ஓய்ந்து போய்க் காணப்படும் கண்களை பளீர் என்று பிரகாசிக்கச் செய்ய ஒரு பஞ்சு உருண்டையை பன்னீரில் நனைத்து மூடிய கண்களின் இமைகள் மீது 15 நிமிடங்கள் வைத்து எடுக்கவும்.

< கண்களை மசாஜ் செய்வதற்கு உங்கள் மோதிர விரலையே உபயோகியுங்கள். அதுதான் கண்களைச் சுற்றியுள்ள மெல்லிய சருமத்திற்கு அதிகப்படியான அழுத்தத்தைத் தராது.

< டி.வி. பார்க்கும் போது உங்கள் கண்களுக்கும் டி.வி. பெட்டிக்கும் குறைந்தபட்சம் 7 அடிதூரம் இடைவெளி இருப்பது உங்கள் கண்களுக்கு நல்லது. இல்லாவிடில் கண்பார்வை பாதிக்கப்படும்.

< படிக்கும் போது உங்கள் கண்களுக்கும், புத்தகத்துக்கும் இடையில் குறைந்தபட்சம் இரண்டடி இடைவெளி இருக்க வேண்டியது உங்கள் கண்களின் பாதுகாப்புக்கு அத்தியாவசியமானது.

< உஷ்ணத்தால் எரியும் கண்களைக் குளிரவைக்க ஐஸ்வாட்டரில் நனைத்த பஞ்சு அல்லது கைக்குட்டையை உங்கள் மூடிய கண்கள் மீது 10 நிமிடங்கள் வைத்து எடுக்கவும்.

< ஓய்ந்து போய்க் காணப்படும் கண்களை புத்துணர்வு பெறச்செய்ய, சிறிது உப்பு கரைத்த நீர் நிறைந்த கிண்ணத்தை கண்ணோடு ஒட்டி வைத்து இந்தக் கரைசலுக்குள் விழியை முக்கி கண்களைத் திறந்து, கண் விழியை இடமும், வலமும், மேலும் கீழுமாக உருட்டவும். இது கண்களில் உள்ள அழுக்கு, தூசு ஆகியவற்றை அகற்றி விடும்.

< கண்களுக்குக் கீழ் ஏற்படும் கருவளையத்தைப் போக்க தினமும் குறைந்தபட்சம் 7 மணி நேரம் தூங்கவும். உணவில் கீரை வகைகளைச் சேர்க்கவும். படுக்கும் முன் தினமும் வைட்டமின்ணி எண்ணெயை கண்ணைச் சுற்றி மசாஜ் செய்யவும். மலச்சிக்கலைத் தவிர்க்கவும்.

< கண்களுக்குக் கீழ் வரும் கருவளையத்தைக் குறைக்க, தினமும் உருளைக் கிழங்கைத் துருவி சாறு எடுத்துப் பூசிக் காயவிட்ட பின் கழுவவும்.

< பாதாம் பருப்பை ஊறவைத்து பால்விட்டு அரைத்து அந்த விழுதைக் கண்களைச் சுற்றிப் பூசி வந்தால் கருவளையம் குறையும்.

கொழுப்புக்கு குட்பை

நாம் உண்ணும் உணவில் தினமும் கிடைக்கக்கூடிய கலோரியில் ஏழு சதவிகிதத்திற்கும் அதிக அளவில் கொழுப்பு இருக்கக்கூடாது. வாய்க்கொழுப்பு அதிகமானால் செல்போனில் நாள் முழுவதும் அரட்டை கச்சேரி செய்யத் தோன்றும். உடல் கொழுப்பு அதிகமானால் யாரையாவது அடிக்கத் தோன்றும். ஆனால் இரத்தத்தில் கொழுப்பு அதிகமாகிவிட்டால் இதயநோய்கள் தாக்க ஆரம்பித்துவிடும். எனவே நாம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. ஒரு நாளைக்கு நமக்கு 1200 கலோரி உணவு போதும். இந்த அளவுடைய உணவை தினமும் உண்டால் நமது இரத்தத்தில் கொழுப்பு சேராது.

காலையில் காபியோ அல்லது தேனீரோ அருந்தலாம். ஆனால் அதில் ஆடை நீக்கிய பாலும், சர்க்கரையும் குறைவாக இருக்கவேண்டும்.

நினைத்தபோதெல்லாம் காபி அல்லது தேநீரை அருந்துவது, நண்பர்களுக்கு கம்பெனி தருவதாக நொண்டிச்சாக்குச் சொல்லிச் சொல்லி அடிக்கடி தேநீர் குடிப்பது போன்றவற்றை முற்றிலும் தவிர்க்கவேண்டும். `வேறு வழியில்லாமல் குடித்து விட்டேன் இப்போது நெஞ்செரிச்சல் ஆரம்பித்து விட்டது' என்று சிலர் சொல்வதைக் கேட்கலாம். கொழுப்பைக் குறைப்பது என்பது மற்றவர்களின் ஆரோக்கியத்திற்காக அல்ல என்பதை மனதில் பதியவைத்துக் கொள்ளுங்கள். அது உங்கள் ஆரோக்கியத்திற்கும் உங்கள் குடும்ப நன்மைக்காகவும்தான்.

சாப்பிடத்தெரிந்து கொள்ளுங்கள்
என்னங்க இது கூடவா தெரியாது? ரொம்பத்தான் ... என்று சிலர் முணுமுணுப்பது காதில் கேட்கிறது. காலை டிபனுக்கு எல்லாவற்றையும் வளைத்துக்கட்ட வேண்டாம். மூன்று இட்லி அல்லது இரண்டு தோசை போதும். போதுமா என்கிறீர்களா? போதும்தான். உழைப்புக்கு ஏற்ற ஊதியம்தான் கிடைக்கும் என்பதைப்போல உழைப்பிற்கு ஏற்ற உணவுதான் உண்ணவேண்டும் என்பதையும் மறந்துவிடாதீர்கள்.

தோசைக்கு எண்ணெய் விடாமல் இருப்பது நல்லது. சட்னிக்கு தேங்காய் வேண்டாம். காரம், புளி, உப்பு இவை குறைவாக வைத்துச் செய்த ஏதாவது ஒரு சட்னியைத் தொட்டுக் கொள்ளுங்கள். தோசைக்கு சொத சொதவென்று எண்ணெய் விட்டுக் கொண்டும் மிளகாய்ப்பொடியை ஏராளமாக எண்ணெய் விட்டு குழைத்துக் கொண்டும் இதுவரையில் சாப்பிட்டவர்களுக்கு நான் மேலே குறிப்பிட்டபடி சாப்பிடப் பிடிக்காது. உண்மைதான் ஆனாலும் என்ன செய்வது? நீங்கள் இதுவரையில் உங்கள் விருப்பப்படி சாப்பிட்டுவிட்டீர்கள். அது போதும். இனிமேல் உங்கள் ஆரோக்கியத்திற்காக நாக்கை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். காலை டிபனோடு ஒரு டம்பளர் தண்ணீரில் பாதி மூடி எலுமிச்சை பழத்தைப் பிழிந்து, சிறிது உப்பு சேர்த்து ஜூஸாக குடியுங்கள். எனக்கு டிபன் சாப்பிட்டால் சூடாக ஒரு கப் காபி சாப்பிட்டால் தான் திருப்தி என்ற கதையெல்லாம் வேண்டாம். காலை ஒன்பது மணிக்குள் டிபனை முடித்துக் கொண்டு சுறுசுறுப்பாக வேலையில் ஈடுபடுங்கள்.

பகல் உணவை வெந்த காய்கறிகள், கீரை, ஒரு சப்பாத்தி, இவற்றோடு குறைவான அளவு சாதத்துடன் முடித்துக் கொள்ளுங்கள். ஒரு கப் சாம்பார், ஒரு கப் ரசம், இரண்டு கப் காய்கறிகள், ஒரு கப் மோர் இவற்றோடு ஒரு கப் சாதம் என்று சாப்பிடுவது மிகவும் நல்லது. இவ்வாறு சாப்பிட்டால் எளிதாக செரிமானம் ஆகும். மூன்று மணிநேரத்திற்கு பசி இல்லாமலும் இருக்கும். நன்றாகக் கடைந்த மோர் ஒரு தம்ளர் குடியுங்கள். இதற்குப் பிறகு எதுவும் வேண்டாம். மாலை டிபன் வேண்டும் என்றால் காய்கறிகளை பச்சையாக நறுக்கி அவற்றுடன் ஒன்று அல்லது இரண்டு பிரட் துண்டுகளைச் சாப்பிடுங்கள். அவசியமானால் பால் குறைவான தேநீர் அல்லது காபி அருந்தலாம். சர்க்கரையை குறைவாக உபயோகிப்பது நீரிழிவு நோயாளிகளுக்கு மட்டும் அல்ல எல்லோருக்குமே அவசியம்தான்.

இரவு நேரத்தில் நெய் விடாத சப்பாத்தி, முளைகட்டிய கடலையில் மிளகும் உப்பும் தூவி செய்த டிஷ் செய்து சாப்பிடுங்கள். இது வேண்டாம் என்றால் கோதுமை ரவையுடன் பாசிப்பயறு கலந்து மிளகுத்தூள் சேர்த்து பொங்கலாக்கிச் சாப்பிடுங்கள். இது என்ன ஏக கெடுபிடியாக இருக்கிறதே என்று எண்ண வேண்டாம். இவ்வாறு திட்டமிட்டுச் சாப்பிட்டால் உடம்பில் அதிக எடை சேராது. கொழுப்பும் ஏறாது. இதயநோய்களுக்கு டாடா சொல்லிவிட்டு ஆனந்தமாக வாழலாம்.

கொழுப்பு என்ன செய்யும்?
இரத்தத்தில் கொழுப்பின் அளவு அதிகமாகிவிட்டால் இரத்தக்குழாய்களின் உட்புறச் சுவர்களில் கொழுப்பு படிந்து, இரத்த ஓட்டத்தைத் தடைசெய்கிறது. எனவே இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. இதயத்தசைகள் ஓவர்டைம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதனால் இதயம் பலம்குறைந்து நோய்களுக்கு ஆளாகிறது. இரத்தத்தில் கலந்த கொழுப்பு இரத்தக்குழாய்களில் அங்கங்கே சிறுசிறு கட்டிகளாகத் தேங்கிவிடும். இதனால் இதயம் மற்றும் மூளைக்குச் செல்லும் இரத்தத்தின் அளவு குறைந்து விடும் அல்லது முழுவதுமாக தடைபட்டுவிடும். அதுபோன்ற நேரங்களில் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஆகியவை ஏற்படுகின்றன. இந்த அடைப்புகள் பெரிய அளவில் இருக்கும்போது திடீர் இறப்பும் நேரிடுவதுண்டு.

கொலஸ்டிரால் மற்றும் உடல் எடையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதன் மூலமாக இதன் நோய்த் தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியும். புகை பிடிப்பவராக இருந்தால் அந்தப் பழக்கத்தை கொஞ்சம் கொஞ்சமாக விட்டுவிடுங்கள். இப்போது எல்லாவற்றையும் ஒருகை பார்ப்பது என்று இறங்கி கண்டபடி சாப்பிட்டு விட்டால் இதய நோய்களுக்கு ஆளாகிவிடுவது உறுதி. இதய அறுவை சிகிச்சை என்று போய்விட்டால் வலியும், வேதனையும், பணச்செலவும், உயிர்ப்பயமும் ஒருபக்கம் இருக்க, உணவுக்கட்டுப்பாடு என்ற பெயரில் வேளைக்கு வேளை வாய்க்கு பூட்டு போட்டுக் கொள்ள வேண்டிய கட்டாயமும் ஏற்படும். வாழ்க்கையே வெறுத்துப்போய்விடும். இவைகளை மனதில் கொண்டு ருசிக்கு மட்டுமே சாப்பிடாமல் பசிக்கு சாப்பிட பழகிக் கொள்ள வேண்டும்.

இளசுகளுக்கான எச்சரிக்கை
நமது நாட்டில் நாகரிக மோகத்தின் தாக்கத்தினால் ஃபாஸ்ட் ஃபுட் சாப்பிடுவது இளம் வயதினரிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் அதிக எடை கூடுவதோடு, இரத்தத்தில் கொழுப்பின் அளவும் அதிகரிக்கும் அபாயம் உண்டு. மேலும் தற்போது கணிப்பொறியின் சந்நிதியிலேயே காலத்தைக் கழிப்பதை ஆண்களும் பெண்களும் வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர். உடல் உழைப்பே இல்லாத நிலையில் இந்த உணவு வகைகள் உடல் எடையைக் கூட்டுவதற்கும், ஊளைச்சதை போடுவதற்கும் அடிப்படையாக அமைகின்றன. இது மட்டும் அல்லாமல் இந்த உணவு வகைகள் இவர்களது கொலஸ்டிராலின் அளவை கணிசமான அளவிற்கு உயர்த்தி இதயநோய் தாக்கும் அபாயத்தை உண்டாக்குகின்றன.

எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவை இன்றைய இளசுகள் மிகவும் விரும்பி உண்கின்றனர். கணிப்பொறி வேலையைப் பற்றியும், கைநிறையப் பெறும் வருமானத்தைப் பற்றியுமே கவலைப்படும் இவர்கள், தங்கள் ஆரோக்கியத்தை கவனிக்கத் தவறிவிடுகின்றனர். மிதமிஞ்சிய இத்தனை உணவினால் எதிர்காலம் இவர்களுக்கு இருண்டுவிடும் அபாயம் இருக்கிறது. எனவே ஃபேஷனுக்கு அடிமையாகி மோசம் போகாமல் இளைய தலைமுறையினர் தவறான உணவு முறையைத் தவிர்ப்பது நல்லது.

ஃபாஸ்ட் ஃபுட்டுக்குப் பதிலாக இவர்கள் பழங்களைச் சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ளலாம். தினமும் திராட்சைச் சாறு குடிப்பது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. இது பல் சொத்தையைத் தடுக்கிறது. மேலும் இது நன்மை செய்யும் கொழுப்பான எச்.டி. எல்லின் அளவை ஏழு சதவீதம் வரையில் உயர்த்துகிறது. ஆகவே தினமும் திராட்சையை சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்வது நல்லது. மேலும் இரத்த சோகை உள்ள பெண்கள் தினமும் 500 கிராம் அளவிற்கு திராட்சைப் பழங்களைச் சாப்பிட்டு வந்தால் இரண்டு வாரங்களில் அவர்களின் இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகமாகும். எனவே ஃபாஸ்ட் ஃபுட் கலாசாரத்திற்கு விடைகொடுத்து பழங்களை உண்ணும் பழைய வழக்கத்திற்குத் திரும்புவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. அப்புறமென்ன கொழுப்புக்கு குட்பைதானே!

மாதுளை ஸ்பெஷல் !

மாதுளை மிதவெப்பமண்டலப் பழவகை மரமாகும். இதன் தாயகம், மேற்கு ஆசியப் பகுதிகளும், தெற்கு ஐரோப்பியப் பகுதிகளுமாகும். இம்மரம் 10 முதல் 20 அடி உயரம் வளரக்கூடியது. பழம் தரும் மரவகைகளில், மாதுளை சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது. இதன் தாவரஇயல் பெயர், `பியுனிகா கிரேநேட்டம்' புயூனிகேசியே தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது.

பன்மொழிப்பெயர்கள்: மாதுளம்பழத்தின் ஆங்கிலப் பெயர் `பொமே கிரேநெட்' ஆகும். இந்தியில் அனார், தெலுங்கில் நிம்பபண்டு, கன்னடத்தில் தாளிம்பொ, மலையாளத்தில் மாதளா, மராத்தியில் தாளிம்செ, குஜராத்தியில் தாதம்னா, ஒரிய மொழியில் தாளிம்பா, வங்காளியில் தரீம், அசாமியில் தாளிம் என்று பெயர்கள் வழங்கப்படுகின்றன.

மாதுளையும் அனார்கலியும்: மாதுளம் பழத்திற்கு இந்தியில், `அனார்' என்று பெயர். இக்கனியின் பெயரையே அனார்கலிக்கு அவள் பெற்றோர் சூட்டினர். இந்திய நாட்டில் அனார்கலி, சலீம் காதல் பிரசித்தி பெற்றதாகும். இது வரலாற்றுச் சிறப்புடையது' என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் பெயர் வந்த விதம்: பெண்களின் உள்ளம் கவர்ந்த கனி ஆதலின், இக்கனிக்கு `மாதுளங்கனி' என்று தாவர இயல் வல்லுனர்கள் தமிழில் இதற்கு பெயர் சூட்டினார்கள்.

தமிழில் வேறு பெயர்கள்: தமிழில் மாதுளைக்கு, அருள்மரம், இருசகம், உருண்டை நீர்ப்புட்பி, கோவர்த்தனம், சிவப்பு சந்தானிகம், சுகாசனம், சுகவல்லம், தசன பீசம், தித்திப்புப்பாலை, நறுமாதுளம், மதலைமா சகி, மாதுலங்கம், மாதுலிங்கம், விருத்தபலம் முதலிய வேறு பெயர்கள் உள்ளன.

சத்துப்பொருட்கள்: நூறு கிராம் மாதுளம் பழத்தில் கீழ்க்கண்ட அளவுகளில் சத்துப் பொருட்கள் உள்ளன. புரதம் 1.6 கிராம், கொழுப்புச்சத்து 0.1 கிராம், நார்ப்பொருள் 6.1 கிராம், மாவுப் பொருள் 14.5 கிராம், கால்சியம் 10 மி.கி., மெக்னீசியம் 70 மி.கி, சோடியம் 0.9 மி.கி, இரும்புச்சத்து 0.3 மி.கி, குளோரின் 2 மி.கி, கலோரி 65ஐ யூ. கிலோ கலோரி, தயாமின் 0.06 மி.கி, நியாசின் 0.3 மி.கி, வைட்டமின் `சி' 16 மி.கி. ஆகியன அடங்கியுள்ளன.


வகைகள்: மாதுளம்பழத்தில், பாபூல், வெள்ளோடு, ஊத்துக்குளி, பேப்பர்ஷெல், கணேஷ் முதலிய வகைகள் அதிக பழங்கள் தரும் உயர் விளைச்சல் வகைகள் ஆகும்.


மாதுளைக்கவிதை: ``உருண்டைப்பேழை ஒன்று மூடியிருக்குது உள்ளே முன்னூறு முத்திருக்குது. திரண்டு வந்திதை திறப்பீர் தித்திக்கும் முத்தென யெடுத்துத்தின்பீர்''
என்னும் கவிதை, மாதுளம்பழத்தின் பாங்கை, தித்திக்கும் மாதுளை முத்துக்களை நமக்கு விளக்குகிறது தெளிவாக.


எப்படிச்சாப்பிடலாம்: மாதுளம்பழத்தின் முத்துக்களை தனியாக எடுத்து அப்படியே சாப்பிடலாம். மாதுளம் பழத்தின் மேல் தோலை களைந்து விட்டு, மாதுளை முத்துக்களை மிக்சியிலிட்டு, சாறாக்கி, அப்படியே பருகலாம். மிக்சி இல்லாவிடின், ஒரு மெல்லிய துணியில், மாதுளை முத்துக்களை வைத்து முடிந்து, பிழிந்தால் சாறு தனியாக வரும். இதைக் குடிக்கலாம். சாறு, சாஸ், ஜாம், காண்டி தயாரித்து பயன்படுத்தலாம். ஃபுரூட் சாலட், பஞ்சாமிர்தம் இவைகளில் மாதுளை முத்துக்களைச் சேர்க்கலாம். இதன் சாறு, கேச், மிட்டாய், சாக்லேட், கேசரி, பர்பி, அல்வா, அப்பம், பாயசம், பாதுஷா அதிரசம், ஜாங்கிரி முதலியன செய்ய ஒரு அங்கமாக சேர்த்து உண்ணலாம்.

பொதுப்பயன்கள்: இதன் சாறு சாஸ், சிரப், ஜாம், கரண்டி, கேக், சாலட், பஞ்சாமிர்தம், பலவகை பண்டங்கள் செய்ய பயன்படுகிறது. கொதித்து ஆறவைத்த பாலுடன், மாதுளஞ்சாறு சேர்த்து, ``மாதுளை கீர்'' தயாரித்து குடிக்கலாம். மாதுளம் பழம் பல மருத்துவக்குணங்கள் கொண்டது. அஜீரணமகற்றி பசிதூண்டி. சளித் தொல்லையை குணமாக்கும். உடம்பை பளபளப்பாக பராமரிக்கும். தாகத்தைத் தணிக்கும். பித்தம் போக்கி. குடல் கோளாறுகளை நீக்கும். இரத்த அழுத்த நோய்க்கு எளிய மருந்து. ஆண்மலட்டுத்தன்மையைப் போக்கும். சீதபேதியை குணமாக்கும். கல்லீரலை நன்கு இயங்கச் செய்யும். இரத்த விருத்தி செய்யும்.

மருத்துவப்பயன்கள்:
ே மாதுளம் பழச்சாறு அருந்தினால், அஜீரணக் கோளாறுகள் நீங்கி, நன்கு பசி ருசி உண்டாகும்.

ே சளித்தொல்லையால் அவதிப்படுபவர்கள், மாதுளஞ்சாறுடன் சிறிது மிளகுத்தூள் சேர்த்து குடித்து வர, சளித்தொல்லை முற்றிலும் குணமாகும்.

ே அடிக்கடி மாதுளம்பழச்சாறு குடித்துவர மேனியை நன்கு பளபளப்பாக வைக்கும். சருமநோய்கள் வராது காக்கும்.

ே இச்சாறுடன், எலுமிச்சை சாறு, தேன் கலந்து பருகினால் பித்தம் மொத்தமாக விலகும்.

ே கோடையில் ஏற்படும் நாவறட்சி, அதிக தாகம் தணிய மாதுளம் பழச்சாறு குடிக்கவும். உடலுக்கு நன்கு குளிர்ச்சியையும் ஏற்படுத்தும்.

ே மாதுளம் பழத்துடன், ஊறவைத்த வெந்தயத்தைச் சேர்த்து, மென்று தின்றால், குடல் கோளாறுகள் குணமாகும்.

ே இரத்த அழுத்த நோய் உள்ளவர்கள், மாதுளஞ்சாறு பருகி வர, இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.

ே மாதுளம் பழச்சாறு குடித்து, ஒரு செவ்வாழைப் பழம் தின்று வர, ஆண் மலட்டுத்தன்மை நீங்கும். விந்து உற்பத்தியையும், மொபிலிட்டியையும் அதிகரிக்கச் செய்யும்.

ே மாதுளைச் சாறுடன், வெங்காயச்சாறு, தேன் கலந்து குடித்துவர, சீதபேதி குணமாகும்.

ே மாதுளம் பழச்சாறுடன் சிறுது சீரகப் பொடியைச் சேர்த்து, தினம் இருவேளை சாப்பிட்டு வர, கல்லீரல் கோளாறுகள் நீங்கி நலன் பயக்கும்.

ே திராட்சை சாறுடன், மாதுளம் பழச்சாறு சம அளவில் கலந்து குடித்து வர, இரத்த சோகை நோய் குணமாகி, இரத்த விருத்தி ஏற்படும்.

ே தசைகளை நன்கு இயங்கச் செய்யும் தன்மை, மாதுளம் பழத்திற்கு உண்டு என சித்தர்கள் கூறியுள்ளார்கள்.

ே மாதுளம் பழத்தோலையும், நெல்பொரி, வெல்லம் இவைகளையும் சேர்த்து கஷாயம் செய்து பருகி வர, குண்டுடம்பு மெலிந்து, உடல்வாகு நடுநிலை அடையும். இது பக்கவிளைவில்லா இயற்கை மருந்தாகும்.

ே மாதுளம்பழ முத்துக்களை நன்கு மென்று தின்றால் விக்கல், வாந்தி விலகும்.

ே நெஞ்செரிச்சல், காதடைப்பு இவைகளை குணப்படுத்தும் ஆற்றல் உள்ளது மாதுளம் பழம்.

ே மாதுளை முத்துக்களை, விதையோடு நன்கு மென்று தின்றால், மலச்சிக்கலைப் போக்கும்.

ே மலத்துடன், இரத்தம் கசிவதை குணப்படுத்தும் தன்மை மாதுளஞ்சாற்றுக்கு உண்டு.

ே மாதுளஞ்சாறு பருகி வர, முதியோர்க்கு நினைவாற்றல் அதிகரிக்கும்.

ே மாதுளஞ்சாறுடன் ஆப்பிள்சாறு சேர்த்துப் பருகினால், மன இறுக்கம் குறையும்.

ே சிறுநீர் பிரியாமல் அவதிப்படுபவர்கள், மாதுளம்பழச்சாறு குடித்துவர, சிறுநீர் நன்கு பிரியும்.

கீரை ஸ்பெஷல் !

இன்றைக்கு கண்பிரச்னை சர்க்கரை நோய் போன்ற நோய்களின் தாக்கம் இல்லாதவர்கள் யாருமில்லை என்று சொல்லும் அளவுக்கு பல வியாதிகள் மனிதர்களைத் தாக்கி வருகிறது. நோய்களுக்கான மருந்துகள் எடுத்துக் கொள்வது ஒரு பக்கம் என்றாலும் உணவுக்கட்டுப்பாடு தேவை என்பதே எல்லோராலும் சிபாரிசு செய்யப்படுகிறது. அந்த வகையில் காய்கறி உணவுகளே நல்லது என்று சொல்லப்படுகிறது. காய்கறி உணவில் கீரைகள் முக்கியப்பங்கு வகிக்கின்றன. அதனால் கீரைகளில் உள்ள சத்துக்களைத் தெரிந்து கொள்வது நல்லது.

முளைக் கீரை:
இதில் சுண்ணாம்புச் சத்து நிறைந்திருப்பதால் எலும்புகள் வலுவடைந்து நன்றாக வளரும். வயிற்றுப்புண்ணை ஆற்றுவதோடு மலச்சிக்கலையும் போக்கக்கூடியது. நீரடைப்பை போக்கும். கண்பார்வை தெளிவாகும்.

பொன்னாங்கண்ணிக் கீரை
பொன்னாங்கண்ணிக் கீரையை சமைத்துச் சாப்பிட்டு வந்தால் உடல் உஷ்ணத்தைத் தணிப்பதோடு கண் சம்பந்தமான வியாதிகளையும் குணமாக்கும். சொறி சிரங்குகளைப் போக்கும்.

புதினாக்கீரை
புதினாக்கீரையை சட்னி, துவையலாகச் செய்து பலகாரங்கள் மற்றும் சாதத்துடன் சேர்த்துச் சாப்பிடலாம். வயிற்றுப் போக்கு ஏற்பட்டால் புதினாத்துவையலை சாதத்துடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் போக்கு நின்றுவிடும். இதில் வைட்டமின் ஏ மற்றும் பி சத்துக்கள் நிறைந்துள்ளன.

தரைப் பசலைக் கீரை
மலச்சிக்கலை நீக்கும். சிறுநீர் சம்பந்தப்பட்ட வியாதிகள் குணமாகும். உடல் உஷ்ணத்தைக் குறைத்துவிடும். குளிர்ச்சியான தேகம் உடையவர்கள் இதைச் சாப்பிடக்கூடாது.

கொடிப்பசலைக் கீரை
உடலுக்குக் குளிர்ச்சியைத் தரக்கூடியது. மலச்சிக்கலைப் போக்கும்.

சிறுகீரை
காசநோயை குணப்படுத்தக்கூடியது. இதற்கு விஷத்தை முறிக்கும் சக்தியுண்டு. சிறுநீர் சம்பந்தமான சகல வியாதிகளும் குணமாகும்.

வெந்தயக்கீரை
இந்தக் கீரை சுண்ணாம்புச் சத்தும் வைட்டமின் ஏ சத்தும் நிறைந்தது. அஜீரணத்தைப் போக்கி பசியை உண்டு பண்ணும். கண் பார்வைக்கு நல்லது. சொறி சிரங்கைப் போக்கும்.

புளிச்ச கீரை
புளிச்சக் கீரைவாத சம்பந்தமான எல்லா வியாதிகளையும் இது போக்கக்கூடியது. மலச்சிக்கல் உள்ளவர்கள் இந்தக் கீரையை அடிக்கடி சேர்த்து வந்தால் நாளாவட்டத்தில் மலச்சிக்கல் ஏற்படாத நிலை வந்து விடும். காச நோயை சமன்படுத்தும்.

கீரைத் தண்டு
சீதபேதி உள்ளவர்களுக்குக் கொடுத்து வந்தால் சீதபேதி உடனே குணமாகும். பேதியுடன் இரத்தமாகப் போகும்போது இந்தக் கீரைத்தண்டை, காரம் சேர்க்காமல் சாப்பிட்டால் இரத்தப்போக்கு நின்று விடும்.

அகத்திக் கீரை
மூளைக் கோளாறு உள்ளவர்கள் அடிக்கடி இதை வேக வைத்து சாப்பிட்டு வந்தால் மூளைக் கோளாறு நீங்கும். வாய்ப்புண், வயிற்றுப்புண்ணை ஆற்றும். நீர்ச்சளியை நீக்கும். நீரடைப்பு போன்ற நோய்களைக் குணப்படுத்தும். நோயாளிகள் மருந்து சாப்பிடும் பொழுது இக்கீரையை சேர்க்கக் கூடாது.

முருங்கைக் கீரை
இதில் சுண்ணாம்புச் சத்தும் இரும்புச் சத்தும் பாஸ்பரசும் அடங்கி உள்ளன. இக்கீரை பல வியாதிகளையும் தீர்க்கக்கூடிய அருமருந்தாக இருந்து வருகிறது. கண் எரிச்சல் தீரும். கண்பார்வை தெளிவடையும். இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். தாதுவை விருத்திப்படுத்தும். நீரழிவை நிவர்த்தி செய்யும்.

கொத்தமல்லிக் கீரை
சுண்ணாம்புச்சத்தும் இரும்புச்சத்தும் நிறைய உள்ளன. இரத்தத்தைச் சுத்தமாக்கும். மாலைக் கண், சிரங்கு, சொறி, புண் இவைகளைக் குணப்படுத்தும். சிறுநீர் சம்பந்தமான வியாதிகள், கண் சம்பந்தமான வியாதிகள், வாய்ப்புண், வயிற்றுப்புண், உதட்டுப்புண் ஆகியவைகளைஆற்றக்கூடியது.

கறிவேப்பிலை கீரை
இதில் வைட்டமின் ஏ.பி.சி. உயிர்ச்சத்துக்கள் நிறையவே உள்ளன. சுண்ணாம்புச் சத்தும் இருக்கிறது. இந்தச் சத்துக்கள் உடல் பலத்தைக் கொடுக்கவும், எலும்புகளுக்குச் சக்தியூட்டவும் செய்கிறது. மேற்கண்ட இரு கீரைகளையும் துவையலாகச் செய்து சாப்பாட்டுடன் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நல்லது

ஸ்மூத்திஸ்

உடம்புக்கு ஏற்ற டிரிங்க் இது. உடம்பு சூட்டைத் தணிக்கும் சக்தி இதற்கு உண்டு.

இதை சீக்கிரமாகத் தயார் செய்யலாம்.

இதில் உள்ள விட்டமின் கன்டென்ட்டை அதிகரிக்க முளைகட்டிய கோதுமை, ஓட்ஸ் குறைந்த கொழுப்பு, பால், தயிர், சோயா பால் (அ) ஐஸ்க்ரீம் முதலியவற்றைச் சேர்க்கலாம்.

இதைத் திக்காக தயார் செய்வதற்கு பழங்களை உதிர்த்து ஃப்ரீசரில் வைக்கலாம். பழத்தை ப்ரீஸ் செய்ய முடியாவிட்டால் சிறிதளவு ஐஸ் கட்டியை இதனுடன் சேர்த்துக் கொள்ளலாம்

Friday, July 11, 2008

அம்மை நோய் வருவதை முன்கூட்டியே தெரிந்து கொள்வது எப்படி?

சின்னம்மை வருவதற்கு மூன்று, நான்கு நாட்கள் முன்பே காய்ச்சல், ஜலதோஷம், இருமல், உடல்வலி, தலைவலி, கண் எரிச்சல் போன்றவை ஆரம்பிக்கும்.

பிறகு தோலில் எரிச்சலும், அரிப்பும் ஏற்படும். பிறகு முகம், கழுத்து, முதுகு, மார்பு என்று உடல் முழுவதும் கொப்புளங்கள் வரும்.

சின்னம்மைக்கு என்றே தனியாக மாத்திரைகள், சிரப், ஆயின்மென்ட்டுகள் இருக்கின்றன. டாக்டரிடம் முதலிலேயே காட்டி ட்ரீட்மென்ட் எடுத்துக் கொண்டால் நோயின் வீரியத்திலிருந்தும், பக்க விளைவுகளிலிருந்தும் தப்பலாம்.

ட்ரீட்மென்ட் சரியாக எடுத்துக் கொள்ளாத போது வயிற்றுப் போக்கு ஏற்படும். சின்னம்மை ஒரு முறை ஏற்பட்டால், அது ஆயுளுக்கும் திரும்ப வராது.
மணல்வாரி அம்மை வந்தாலும் சளி, இருமல், ஜலதோஷம், கண் எரிச்சல் இருக்கும். தாடையின் உள்பகுதிகளில் சிவப்பு கலந்த வெண் புள்ளிகள் தோன்றுவதுதான் இந்த நோயின் அறிகுறி.

இந்த அம்மைக்கும் சரியான மருத்துவம் எடுத்துக் கொள்ளாவிட்டால் வயிற்றுப்போக்கு, காதில் சீழ் வடிவது, நிமோனியா போன்ற பிரச்னைகள் ஏற்படும்.

காதின் கீழ்ப்புறம், தாடையின் கீழ்ப்புறம் காணப்படும் உமிழ்நீர் சுரப்பிகளைத் தாக்கக்கூடியது, `பொன்னுக்கு வீங்கி' அம்மை. தொண்டை வலி, விழுங்குவதில் சிரமம், வாயைத் திறக்கும்போது வலி, காதின் கீழ் வலியுடன் வீக்கம் போன்றவை இதன் அறிகுறிகள். மருந்து மாத்திரைகள் மூலமே வலியையும், வீக்கத்தையும் குறைக்கலாம்.

அம்மையின்போது என்ன சாப்பிடலாம்?

உணவில் காரம், புளிப்பைத் தவிர்ப்பது நல்லது. பழரசம், கஞ்சி, மோர், பழங்கள், இளநீர், குளுக்கோஸ் போன்றவை உடம்புக்கு மிகவும் நல்லது. எல்லாவற்றுக்கும் மேலாக, தனி நபர் சுத்தமும், சுற்றுப்புற சுத்தமும், சரியான நேரத்தில் டாக்டரின் ஆலோசனையும் உங்களை இந்த நோயிலிருந்து காப்பாற்றும்.

ஆலுவேரா

ஆலுவேராக்கு (சோற்றுக் கற்றாழை) சித்த மருத்துவர்கள் கொடுத்திருக்கும் மதிப்பே தனிதான். மூலிகைகள் உலகத்தில் ராஜ மரியாதையுடன் வலம் வரும் இந்த ஆலுவேரா அதற்கு முற்றிலும் தகுதி உடையதுதான். எளிதாக கிடைக்கக்கூடிய இந்த மூலிகை ஏராளமான மருத்துவக்குணங்களை கொண்டது.

தீய சக்திகள், கண் திருஷ்டி இவைகளை அண்டவிடாது என்ற நம்பிக்கையின் காரணமாக வீட்டின் முன்புறம் வளர்க்கப்படுகிற அல்ல கட்டித் தொங்க விடப்படுகிற இந்த செடி மாட்டுத் தொழுவங்களில் கால்நடைகளுக்கு உண்ணி பற்றாமலிருப்பதற்காகவும் தொங்க விடப்படுவது உண்டு.

ì கற்றாழையின் சோற்றைத் தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊற வைத்துக் குளிக்க தலையில் ஏற்படும் பொடுகு, சிரங்கு குணமாகும்.

ì சோற்றுக் கற்றாழை மடலை இரண்டாகப் பிளந்து உள்ளே சிறிதளவு வெந்தயத்தை வைத்து மூடி விடவும். இரண்டு நாட்கள் கழித்து ஊறிய அந்த வெந்தயத்தை எடுத்து தேங்காய் எண்ணெயில் போட்டு அதை தேய்த்து குளிக்க நரை முடியும் கறுப்பாகும்.

ì வாடிச் சருகான கற்றாழை மடலை தீயில் கருக்கி, தேங்காய் எண்ணெயோடு கலந்து தீப் புண்களில் மீது பூசி வர விரைவில் புண் ஆறும்.
ì கற்றாழை மடலில் சிறு துண்டு எடுத்து இரண்டாக பிளந்து சோற்றுப் பகுதியை தீயில் வாட்டி உடல் பொறுக்கும் சூட்டில் அடிப்பட்ட இடத்தில் இதை வைத்து ஒத்தடம் கொடுக்க வலி, வீக்கம் மட்டுமல்ல இரத்தக் கட்டும் மாறும்.

ì இச் செடியின் மடலில் உள்ள சோற்றை எடுத்து தண்ணீரில் நன்க அலசி அதை சாப்பிட்டு வர குடல் புண், மூல நோய் மாறும். மலச் சிக்கல் தீரும்.

ì மஞ்சள்காமாலை நோய்க்கும் ஆலுவேரா மருந்தாக பயன்படுகிறது. தவிர கூந்தல் தைலம், அழகு சாதனப் பொருள்களில் இது சேர்க்கப்படுவதால் பொருளின் தரமும், வீரியமும் மட்டுமல்ல மருத்துவதன்மையும் அதிகரிக்கிறது.

கொளுத்தும் வெய்ளிலும் நீங்கள் ஜொலிக்க

வியர்வை, வேர்க்குரு, எண்ணெய் பிசுபிசுப்பு, முகப்பரு, வறண்ட சருமம் என்று பளிங்கு போன்ற சருமத்தையும் சம்மர் பாழாக்கி விடும். இப்படிப்பட்ட சம்மரிலும் நீங்கள் அழகாக ஜொலிக்கவும், சூரியனே உங்கள் அழகைக் கண்டு வெட்கப்படவும் சம்மர் பியூட்டி டிப்ஸ் தருகிறார் அழகுக்கலை நிபுணர் மஹா!

கேடைக்காலங்களில் சிலருக்கு முகம் வறண்டு காணப்படும். அதற்கு பாலேட்டில் சிறிது எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவி, 10 நிமிடங்கள் ஊறிய பின்னர் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படிச் செய்தால், முகம் ஈரப்பதமாகவும், வழுவழுப்பாகவும் மாறும். ஆனால் முகப்பரு உள்ளவர்கள் பாலேடு உபயோகப்படுத்தக் கூடாது.

வேயர்வை அதிகமாக உள்ள பெண்கள் சந்தனக் கட்டையை பன்னீர் விட்டு இழைத்து முகத்தில் பூசி வந்தாலே போதும்.

வேயிலாலும், கவரிங் நகைகளை அணிவதாலும் சிலருக்கு கழுத்து மட்டும் கறுத்துவிடும். இதற்கு கோதுமை, ஓட்ஸ், பாசிப்பயிறு மாவு மூன்றையும் பாலுடன் கலந்து கழுத்தில் தேய்த்து சிறிது நேரம் கழித்துக் கழுவி வந்தால் கறுமை படிப்படியாக மறைந்துவிடும்.

à வேர்க்குரு பிரச்னையுள்ளவர்கள், நீரில் சிறிது சந்தனம் கரைத்து அந்த இடங்களில் தடவி வந்தால் வேர்க்குரு ஓடியே போச்.

à கோடைக்காலத்தில் சருமம் கருத்துப் போனால், இரவில் கசகசாவை பாலில் ஊறவைத்து அதைக் காலையில் அரைத்து உடம்பில் தேய்த்து அரை மணி நேரம் ஊறிய பின்னர் குளித்து வந்தால் சருமம் நிறமாகவும், பள பளப்பாகவும் மாறும்.

à பப்பாளிப் பழத்தை நன்றாக மசித்து அதை முகத்தில் பூசிவர, முகத்திலுள்ள இறந்த செல்கள் உதிர்ந்து முகம் பளபளப்பாகும்.

à வெள்ளரிப் பிஞ்சு மற்றும் உருளைக் கிழங்கை சிறு துண்டுகளாக வெட்டி கண்ணின் மேல் வைத்தால் இந்த கொளுத்தும் வெயிலில் கண்களுக்கும் குளிர்ச்சி. தவிர நாட்பட்ட கறு வளையம் நீங்கிவிடும்.

à தர்ப்பூசணியின் அடிப்பகுதியை முகம், உடம்பு, கை, கால்கள் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்து வர சம்மரில் சருமத்தில் இருக்கும் சுருக்கங்கள் மறைந்து புதுப்பொலிவு உண்டாகும்.

தலைமுடிக்கு...

à பாசிப்பயிறு அரைத்து தலைமுடியில் தேய்த்துக் குளிப்பது தலைமுடிக்கு நல்ல ஊட்டச்சத்து.

à வாரத்திற்கு ஒரு முறை அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறை முட்டையின் வெள்ளைக்கரு, தயிர், பாசிப்பயிறு மூன்றையும் சேர்த்துத் தடவி வந்தால் தலைமுடிக்குத் தேவையான சத்துக்கள் கிடைப்பதுடன், தலைமுடி நன்கு பளபளப்பாக இருக்கும்.

à வேப்பிலை, துளசி, புதினா மூன்றையும் நன்கு அரைத்து தலையில் பேக் போட்டு அரை மணி நேரம் ஊற வைத்துக் குளித்தால் பேன் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

à வால்மிளகை பாலில் ஊற வைத்து நன்கு அரைத்து அதை தலையில் தடவி 15 நிமிடங்கள் ஊற வைத்து அலசினால் பொடுகுத் தொல்லை போய்விடும்.
மருதாணி, டீ டிகாஷன், எலுமிச்சைச் சாறு மூன்றையும் தலையில் தடவி அரை மணி நேரம் ஊற வைத்துக் குளித்தால், உடல் சூடு தணிவதுடன் முடிக்கும் நல்ல வலு கிடைக்கும்.

à வெயில் காலங்களில் முடி வறண்டு காணப்படும். அதைத் தவிர்க்க செம்பருத்தி இலை, வெந்தயம், கறுப்பு உளுந்து, தயிர், எலுமிச்சை சாறு எல்லாவற்றையும் தேவையான அளவில் அரைத்து தலையில் தேய்த்து 15 நிமிடங்கள் ஊற வைத்த பின்னர் குளிக்க வேண்டும். இதனால் முடி உலர்ந்து போகாமல் இருப்பதோடு பொடுகுத் தொல்லை, நுனி முடியில் வெடிப்பு ஏற்படுதல் என எல்லா முடி பிரச்சினைகளையும் தவிர்க்கலாம்.

à தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், ஆலிவ் எண்ணெய் மூன்றையும் 4 டீஸ்பூன் அளவு எடுத்து மிதமாக சூடாக்கி தலையின் முடிக் கால்களில் விரல் நுனியால் நன்கு தேய்த்த பின்னர் வெந்நீரில் டவலை நனைத்து தலையைச் சுற்றிக் கட்டினால் கூந்தல் வறட்சியின்றி காணப்படுவதோடு, முடியும் செழித்து வளரும்.

à கோடைக்காலங்களில் தலை சருமம் வறண்டு காணப்படுபவர்கள் வால்மிளகு, வெந்தயம் (4:2) என்ற விகிதத்தில் இரண்டையும் பசும்பாலில்
ஊற வைத்து இதனுடன் கசகசாவையும் கலந்து அரைத்து தலையில் ஊற வைத்து அரைமணி நேரம் கழித்து குளிக்க, கூந்தல் சாஃப்ட்டாக மாறும்