Showing posts with label பழமொழிகள். Show all posts
Showing posts with label பழமொழிகள். Show all posts

Tuesday, July 15, 2008

திபெத் பழமொழி !

*இருதயம் மட்டும் உறுதியாக இருந்தால் - சுண்டெலியால் கூட யானையை தூக்க முடியும் .

*பணிவோடு பேசுபவனைப் பயந்தாங்கொள்ளி என்று நினைப்பவன் படுமுட்டாள் .

*உலகத்தில் யாருக்குமே - மனைவியை எப்படிச் சமாளிப்பது என்று தெரியவில்லை - பிரம்மச்சாரியை தவிர .

*கன்றும், முட்டையும் வேண்டுமென்றால் - பசுவையும், கோழியையும் பயமுறுத்தக் கூடாது.

*இருட்டில் ஓடுகிறவன் தடுக்கி விழக்கூடும் .

*ஒரு முட்டையை திருடுபவன் எதையும் திருடுவான்.

*பணக்காரர்களின் கைகள் நீளமாயுள்ளன. ஆனால் அவை தேவலோகத்தை எட்டாது.

Sunday, July 13, 2008

மடகாஸ்கர் பழமொழி !

*மக்களை வெறுக்காதே. ஏனெனில், அவர்கள் செல்வத்திற்கு சமமானவர்கள்.

*உன் இதயத்தை ஒருபோதும் - செல்வத்தின் மீது சாய்ந்திருக்கவிடாதே !

*எப்போதும் நன்மையை அரைகுறையாக செய்யாதே !

*உடல் நலம் குறைந்திருக்கும்போது ஓய்வெடுப்பதற்காக - உடல்நலமாக இருக்கும்போது உழைக்காமல் இருந்துவிடாதே !

*கொஞ்சம் நட்பை இழப்பதைவிட கொஞ்சம் பணத்தை இழப்பது மேலானது !

டென்மார்க் பழமொழி !

*சீப்பும் - சவரக் கத்தியும் - ஒரு காதலியை ஏமாற செய்கின்றன.

*இன்பத்தை பங்கு போட்டால் அது இரட்டிப்பாகும்.

*திருமணம் செய்துக் கொள்ளும் முன்பும், கோர்ட்டுக்கு செல்லும் முன்பும் தீர்க்கமாக யோசிக்கவேண்டும் .

*குழந்தையும் ,குடிகாரனும் உண்மை பேசுவதில் ஒன்றானவர்கள் .

*நானும் எஜமானன்; நீயும் எஜமானன் - அப்படியானால் கழுதையை ஓட்டுபவர் யார்?

Saturday, July 12, 2008

சீன பழமொழி !

*வாழ்க்கையில் தோல்வியுற்ற ஒருவனிடம் உனது வெற்றியைப் பற்றி பேசுவது அவனது பகைமையை சம்பாதிப்பதாகும்.

*ஒருவனுடைய முகத்திற்கு நேராக சொல்வது _ அவதூறல்ல .

*பணம் நூறு _ அவலட்சணங்களையும் மறைத்து விடுகிறது.

*கடனாக ஆயிரத்துக்கு விற்பதைக்காட்டிலும் _ ரொக்கமாக எண்ணூறு பெறுவது மேல் .

*மலிவான பொருள்கள் நல்லவையல்ல - நல்ல பொருள்கள் மலிவானவையல்ல.

Thursday, July 3, 2008

ஜப்பான் பழமொழிகள்

* பறவைக்கு பயந்து விதைக்காமல் இருக்காதே !

*அயோக்கியனை கேட்காதே! அவன் தன் கருத்தையே சொல்லிக் கொண்டிருப்பன்.

* நோய் வந்தபோது ஒருவன் - தன் உயிரைப்பற்றி நினைக்கிறான். சுகமானபோது பணத்தை பற்றி நினைக்கிறான்.

*மாமியாருக்கு மரியாதை கட்டினால்- தினமும் மூன்று முறை வந்து சலிப்படைய செய்வாள்.

* அறிவும், ஒழுக்கமும் வண்டியின் இரு சக்கரங்கள் மாதிரி .

* கிழே விழுந்தவனை பார்த்து சிரிக்காதிர்கள் உங்கள் பாதையும் வழுக்கல் நிறைந்தது தான் .

*மணம் செய்து கொண்ட பெண்கள் எல்லாம் மனைவிகள் அல்லர் .