Showing posts with label ஆரோக்கியம். Show all posts
Showing posts with label ஆரோக்கியம். Show all posts

Thursday, September 4, 2008

கேன்சரை உருவாக்கும் சிக்கன் 65


ராகவனுக்கு முப்பது வயதுகூட ஆகவில்லை. அவருக்கு கேன்சர் என்று மருத்துவர்கள் சொன்னதும், ஒட்டுமொத்த குடும்பமே அதிர்ச்சியில் உறைந்து போனது. காரணம் ராகவனிடம் மது, புகை என்று எந்த கெட்ட பழக்கமும் இல்லை. பிறகு எப்படி கேன்சர்?
தலையைப் பிய்த்துக்கொண்ட மருத்துவர்கள் கடைசியாக அவரது உணவுப் பழக்கத்தை ஆராய்ந்தபோதுதான் உண்மை தெரியவந்தது. அசைவப்பிரியரான ராகவன் தினமும் சாப்பாட்டில் சிக்கன் 65 இல்லாமல் சாப்பிடவே மாட்டாராம். அதுவும் செக்கச் சிவந்த நிலையில் மொறு மொறுவென்று இருக்கும் சிக்கன் 65ஐத்தான் விரும்பிச் சாப்பிடுவாராம். அதுதான் அவரது கேன்சருக்குக் காரணமாம். எப்படி? பளிச்சென்று தூக்கலாகத் தெரிவதற்காக சிக்கனுடன் சேர்க்கப்படும் அந்த சிவப்பு நிற கெமிக்கல் பவுடர்தான் அந்த கேன்சருக்கு முழுக்காரணம்.
இந்த கெமிக்கல் கலந்த சிக்கன் 65 சாப்பிடுவதால் வயிற்றில் கேன்சர், சிறுநீரகக் கோளாறு. மரபணுக்களில் பாதிப்பு போன்ற நோய்கள் உண்டாவதைக் கண்டறிந்திருக்கிறார்கள்.
உணவுப் பொருட்களில் பயன்படுத்தக்கூடிய செயற்கை நிறங்கள் பற்றியும், பயன்படுத்தக்கூடாத நிறங்கள் பற்றியும் நெல்லை மாநகராட்சியின் உணவு ஆய்வாளர் சங்கரலிங்கம் பேசும்போது :
``உணவு வகைகளில் பயன்படுத்தக்கூடிய செயற்கை நிறங்கள், பயன்படுத்தக்கூடாத செயற்கை நிறங்கள் என உண்டு. இந்தியாவில் 8 வகையான செயற்கை நிறங்களை மட்டுமே உணவுப் பொருட்களில் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த நிறங்களும் குறிப்பிட்ட அளவு. அதாவது 10 கிலோ உணவுப் பொருளுக்கு 1 கிராம் மட்டுமே சேர்க்க அனுமதி. ஆனால் இதை யாரும் கடைப்பிடிப்பதில்லை. அனுமதிக்கப்பட்ட உணவு வகைகளில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேல் செயற்கை நிறங்களைச் சேர்த்தால் உடலுக்குக் கேடுதான். எடுத்துக்காட்டாக, உணவில் சிவப்பு நிறம் கொடுக்க பயன்படுத்தப்படும் எரித்ரோசின் அளவு கூடினால் கழுத்துக் கழலை நோய் (goItre) வரும். இந்த செயற்கை நிறங்களும் இனிப்பு வகைகளில் மட்டுமே சேர்க்க அனுமதி. கார வகையான உணவுகளில் சேர்க்க அனுமதி கிடையாது.
பொன்சியூ4.ஆர்., எரித்ரோசின் பயன்படுத்தினால் சிவப்பு நிறம் கிடைக்கும். பிரில்லியண்ட் புளூ, இண்டிகோ கார்மைன் பயன்படுத்தினால் ஊதா கலர் கிடைக்கும். இந்த மாதிரியாக கிடைக்கக் கூடிய எட்டு வகையான கலர்களை ஐஸ்கிரீம் ஃப்ளேவர்டு மில்க், பிஸ்கட், இனிப்பு வகைகள், டின்களில் அடைத்து வரக்கூடிய பட்டாணி வகைகள், பாட்டில் பழ ஜூஸ் வகைகள், குளிர்பானங்கள் என ஏழு வகையான உணவுகளில் மட்டுமே சேர்க்க அனுமதி.
கார வகையான உணவுப் பொருட்களில் செயற்கை வண்ணங்களை கண்டிப்பாகச் சேர்க்கக்கூடாது. ஆனால் நமது மக்களின் மனதில் உணவைவிட உணவின் கலர்தான் பளிச்சென்று பதிந்து இருக்கிறது. சிக்கன் 65 என்றால் சிவப்பாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே அது சிக்கன் 65 என்ற முடிவில் மக்கள் இருக்கிறார்கள். மக்களின் மனதிற்கேற்ப வியாபாரிகளும் சிக்கன் 65 நிறத்தைக் கூட்டி, ஆபத்தை அறியாமலேயே வியாபாரம் செய்கின்றனர்.
சிக்கன் 65-ல் செயற்கை வண்ணங்களைச் சேர்ப்பதே தவறு. அதிலும் அனுமதிக்கப்படாத செயற்கை வண்ணங்களை அளவுக்கு அதிகமாக சேர்க்கின்றனர். எடுத்துக்காட்டாக சூடான் டை, மெட்டானில் எல்லோ கெமிக்கல்களைச் சேர்த்து துணிகளுக்கு சாயம் ஏற்றுவார்கள். இன்று இதனை சிக்கன் 65யுடன் சேர்த்து விடுகின்றனர். இப்படி சேர்ப்பதால் சிக்கன் 65 ரெட் கலரில் பளிச்சென்று தூக்கலாகத் தெரியும். இதைச் சாப்பிடுவதால் குடல்கேன்சர், சிறுநீரகக் கோளாறு, மரபணுக்களில் கோளாறு என கொடிய நோய்களை உண்டாக்கி விடுகிறது.
கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் சூடான் டையை உணவில் பயன்படுத்தத் தடை விதித்துள்ளனர். செயற்கை நிறம் கொடுக்கக் கூடிய சூடான் டை கலந்த உணவை எலிகளுக்குக் கொடுத்து ஆராய்ச்சி செய்து பார்த்ததில் எலிகளின் சிறுநீரகங்களிலும் கல்லீரல்களிலும் கேன்சர் உருவாகியதாம்.
இப்படி உணவுப் பொருளில் கலப்படம் செய்து வியாபாரம் செய்யும் வியாபாரிகள் உணவு தடைச்சட்டத்தின் பிடியிலிருந்தும் ஈஸியாகத் தப்பி விடுகின்றனர்.
உணவுக் கலப்பட வழக்குகளில் ஆஜராகும் வழக்கறிஞர் காந்திமதிநாதன் கூறும்போது: ``ஃபுட்கலர்ஸ் விற்பவர்கள் மீது சட்டப்படி எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. அந்த ஃபுட்கலர்ஸ் உணவுப் பொருட்களில் கலந்து உணவுப் பொருட்களுக்கு நிறத்தைக் கொடுத்த பின்புதான் அது குற்றமாகிறது. கலப்பட உணவுப் பொருட்களின் மீது வழக்குத் தொடரவேண்டுமானால் முதலில் தயாரித்து வைத்த உணவுப் பொருட்களை மூன்று பாகங்களாக சாம்பிள் எடுக்க வேண்டும். முதல் பாகத்தை உடனடியாக கெமிக்கல் லேபுக்கு அனுப்பி கலப்படத்தை உறுதி செய்து, ரிப்போர்ட் வாங்கி அந்த அடிப்படையில் வியாபாரியின் மீது வழக்குத் தொடரவேண்டும். மீதமுள்ள இரண்டு பாகமும் சுகாதார அதிகாரியின் கட்டுப்பாட்டில் வைத்து நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும்போது சுகாதார அதிகாரி கட்டுப்பாட்டில் உள்ள உணவுப் பொருளின் இரண்டு பாகங்களை நீதிமன்றம் மூலம் மத்திய பகுப்பாய்வுக் கூடத்திடம் ரிசல்ட் கேட்கவேண்டும். அந்தச் சூழ்நிலையில் கண்டிப்பாக உணவுப் பொருள் கெட்டுப்போய்த்தான் இருக்கும். மத்திய பகுப்பாய்வுக் கூடத்தால் சரியான ரிசல்ட்டை கொடுக்க முடியாது. இதனால் வழக்கு நிற்காமல் அடிபட்டு விடும்.
எடுத்துக்காட்டாக சூடான்டையால் நிறம் ஊட்டப்பட்ட சிக்கன் 65ஐ சாம்பிள் எடுத்து கெட்டுப்போகாமல் இருக்க பார்மலின் என்ற கெமிக்கலை சிக்கன்-65 மீது ஊற்றி வைப்பார்கள். அந்த கெமிக்கல் சிக்கன் 65யின் முழுப்பகுதியையும் அடைய வாய்ப்புக் குறைவு. அப்படி கெமிக்கல் படாத இடம் முதலில் கெட்டுப்போய் மொத்த சிக்கன் 65ஐயும் கெட்டுப்போகச் செய்து விடுகிறது. அதனால் அதிலிருந்து சரியான ரிசல்ட் எடுக்க முடியாமல் போய் விடுகிறது.
உணவுக் கலப்பட சட்டத்தைப் பொறுத்தமட்டில் வியாபாரிகளுக்கும், சில பங்களிப்பு இருப்பதால் வியாபாரிகள் எளிதில் தப்பிவிடுகின்றனர்'' என்கிறார். அதனால் தேவையற்ற கெமிக்கல் கலர் பொடிகள் சேர்த்த சிக்கன்களைத் தவிர்ப்பது ஒன்றே இதற்குத் தீர்வு?

கேன்சர் ஆபத்து!
இது குறித்து சென்னையைச் சேர்ந்த பிரபல குடல்நோய் நிபுணர் டாக்டர் சதீஷிடம் கேட்டபோது: ``சிக்கன் 65ல் சேர்க்கப்படும் நிறத்தால் உடனடி பாதிப்பாக நெஞ்சு எரிச்சல், அமிலத்தன்மை அதிகரிப்பால் இரைப்பை அழற்சி ஏற்படும்.
நீண்ட நாட்கள் அதைச் சாப்பிட்டு வந்தால் பெருங்குடலில் கேன்சர், சிறுநீரகப் பாதிப்பு உண்டாகும். தொடர்ந்து சிறுநீரகத்திலிருந்து ரசாயன நச்சுப் பொருட்கள் ரத்தத்தோடு கலந்து சிறுநீர்ப் பைக்கும் செல்லும். அங்கே ஏற்படும் மாற்றங்களால் சிறுநீர்ப் பையில் புற்றுநோய் வரும் ஆபத்து உண்டு. கழுத்தில் கழலை, மரபணுக்களில் மாற்றங்கள் ஏற்படுவதையும் தவிர்க்க முடியாது'' என்று எச்சரிக்கிறார்

Saturday, August 2, 2008

ஆளையே முடக்கி விடுமா ஆர்த்தரைடிஸ் பிரச்சனை!

ஆர்த்தரைடிஸ் என்றாலே மூட்டு தேய்ந்து விட்டது, இனி ஒன்றுமே செய்ய முடியாது என்ற பயமும் குழப்பமும் பலருக்கு ஏற்படுகிறது.

ஆனால், இந்நோயைப் பற்றி இனி பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஆரம்பத்திலேயே அதற்கான மருந்து உட்கொண்டால் நோயைக் கட்டுப்படுத்தி விடலாம்'' என்று நம்பிக்கையோடு கூறுகிறார் ஆர்த்தோ நிபுணர் டாக்டர் ஆனந்த் ரெங்கசாமி எம்.எஸ்.

``நமது மூட்டுகளின் எலும்பு முனைப்பகுதிகளில் `கார்டிலேஜ்' என்கிற சவ்வு காணப்படும். இந்த சவ்வானது எலும்புகளுக்குள் உராய்வு ஏற்படாமல் தடுக்கும். ஆனால், கார்டிலேஜ் சவ்வில் அரிப்பு ஏற்பட்டு எலும்புகள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்வதால் வலியும் வீக்கமும் உண்டாகும்.

ஆஸ்டியோ ஆர்த்தரைடிஸ் (Osteo arthritis) 50 வயதிற்கு மேல் குறிப்பாக பெண்களை அதிகம் பாதிக்கும். சில சமயம் - மூட்டு எலும்பு முறிவு, பிறவி மூட்டு ஊனம் உள்ளவர்களுக்கு இளம் வயதிலேயே பாதிக்கும்.

ரூமடாய்டு ஆர்த்தரைடிஸ் (Rheumatoid arthritis)பெண்கள் மற்றும், இளம் வயதினரைப் பாதிக்கும் பொழுது மிகக் கடுமையாக இருக்கும். உடம்பில் உள்ள அனைத்து மூட்டுகளையும் அரித்து உருமாற்றம் ஏற்படுத்தி ஆளையே முடக்கிவிடும். இந்த மூன்று ஆர்த்தரைடிஸ்தான் தற்போது பலரையும் பயமுறுத்தி வருகிறது.

இந்நோயினால் மூட்டுகள் மோசமாக தேய்ந்திருந்தால் செயற்கையாக சவ்வுகளை அறுவை சிகிச்சை மூலம் பொருத்தி இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப இயலும். மேலும் மக்களிடையே மூட்டுமாற்று அறுவை சிகிச்சை என்றால் மூட்டு எலும்பையே கழற்றி வேறு பொருத்துவார்கள் என்ற தவறான கருத்து நிலவுகிறது. இந்த அறுவை சிகிச்சையில் மூட்டு எலும்பையே மாற்றுவது கிடையாது. ஆர்த்தரைடிஸினால் தேய்ந்து போன கார்டிலேஜ் பகுதியை மட்டும் மாற்றப்படும். இதனால் உடனடியாக அவர்களுக்கு வேதனையிலிருந்து நிரந்தர தீர்வு கிடைக்கிறது. நன்றாக நடக்கவும் இயலும்..

அடிக்கடி சிசேரியன் ஏன்?

இப்போதெல்லாம் யாரைக் கேட்டாலும் `இப்போதெல்லாம் யாரைக் கேட்டாலும் `சிசேரியன் டெலிவரி' என்கிறார்கள். நார்மல் டெலிவரி மெல்ல குறைந்து கொண்டே வருகிறது. ஏன் என்பது மகப்பேறு மருத்துவர்களுக்கு மட்டுமே தெரிந்த விஷயம். சிசேரியன் மூலம்தான் குழந்தை பிறக்கவேண்டும் என்ற முடிவு மருத்துவர்களால் ஏன் எடுக்கப்படுகிறது? அதன் நிஜமான மருத்துவக் காரணங்கள் என்ன என்ற கேள்வியை திருநெல்வேலி மகப்பேறு மருத்துவ நிபுணர் டாக்டர் ஆக்னஸ்ஸிடம் கேட்டோம்.


"முன்புபோல சிசேரியனைக் கண்டு இப்போது பயப்படத் தேவையில்லை. பாதுகாப்பு அதிகமாகிவிட்டது. ஒருவருக்கு சிசேரியன் தேவையா, இல்லையா என்பதை அவரைப் பரிசோதிக்கும் டாக்டர்தான் முடிவு செய்யமுடியும். சிசேரியன் செய்ய வேண்டியதற்கான மருத்துவக் காரணங்கள் பொதுவாக இவைதான்:

1.பிரசவ வலி ஆரம்பிக்கும்போதே குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு நஞ்சுக் கொடி குழந்தையின் கழுத்தைச் சுற்றிக் கொண்டிருப்பது.

2.முதல் பிரசவம் சிசேரியனாக இருந்தால், இரண்டாம் முறையும் சிசேரியனுக்குச் செல்வது பொதுவாக பாதுகாப்பானது. காரணம், பிரசவ வலியினால் கர்ப்பப்பை கிழிந்து போக வாய்ப்பிருப்பதைத் தவிர்ப்பதுதான்.

3.குழந்தையின் தலை பெரிதாக இருந்து தாயின் இடுப்பெலும்பு சிறியதாக இருக்கிற சூழ்நிலையில்.

4.பனிக்குடம் உடைந்து பிரசவ வலி வரவில்லை என்றாலும் சிசேரியன் தேவைப்படும்.

5.பனிக்குடம் உடைந்தும், பிரசவ வலி அதிகமாக இருந்தும் குழந்தை பிறக்கவில்லை என்றால் சிசேரியன் தேவைப்படும்.

6.ஏற்கெனவே சில முறை குழந்தை இறந்து பிறந்தவர்களுக்கு நிறை மாதத்திற்கு முன்பே சிசேரியன் தேவைப்படும்.

7.கர்ப்பப்பை அடி இறங்கி அதனை சரி செய்ய ஆபரேஷன் செய்திருந்தால் சிசேரியன் தேவைப்படும்.

8.கருப்பை வாயில் கேன்சர் இருந்தால் சிசேரியன் தேவைப் படும்.

9.தாய்க்கு அதிக இரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற பிரச்னைகள் இருக்குமானால் குழந்தைக்கு பிரச்னை ஏற்படுவதைத் தடுக்க சிசேரியன் தேவைப்படும்.

10.நிறைமாதத்திற்குப் பிறகும், வலி தூண்டிவிடப்பட்ட பிறகும் வலி வராத நிலையில், சிசேரியன் தேவைப்படும்.

11.நஞ்சுக்கொடி பிரசவப் பாதையை அடைத்திருந்தால் சிசேரியன் தேவைப்படும்.

12.கருப்பையில் ஏதாவது கட்டி இருந்தால் சிசேரியன் தேவைப்படும்.

13.வயது முதிர்ந்த பெண்களுக்கு சூழ்நிலையைப் பொறுத்து சிசேரியன் தேவைப்படலாம்.

14.யோனிக்குழாயின் அமைப்பு சீரற்று இருந்தால் சிசேரியன் தேவைப்படலாம்.

15.குழந்தையின் வளர்ச்சி குறைவாக இருந்தால் சிசேரியன் தேவைப்படும்.

16.செயற்கை முறை கருத்தரிப்பு குழந்தைக்கு சிசேரியன்தான் பாதுகாப்பானது'' என்றார் ஆக்னஸ். .

Friday, August 1, 2008

உணவுமுறையாலும் மன அழுத்தத்தைக் குறைக்கலாம்!

மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு யோகா, தியானம் போன்ற வழிமுறைகளை நாடும் அதேவேளையில், உணவு முறையைக் கொண்டும் கவலை, பதற்றம் போன்றவற்றை களையலாம்.

இதற்கு கடைப்பிடிக்க வேண்டிய சில உணவுமுறை இதோ...

* கார்போஹைட்ரேட் கலவை அதிகமுள்ள உணவுப் பொருட்களுக்கு முன்னுரிமை தரவேண்டும். அரிசி, ஓட், பிரட் போன்றவற்றை தினமும் எடுத்துக்கொள்ளலாம்.

* அதிக அளவில் சர்க்கரை கலந்த பொருட்களை தவிர்த்தல் நல்லது.

* உணவு இடைவெளியில் கவனம் செலுத்துவது அவசியம். உணவு உட்கொள்வதற்கான நேர இடைவெளி அதிக அளவாக இல்லாமல், சீரானதாக இருக்க வேண்டும். குறிப்பாக, பகல் பொழுதில் உணவை தவிர்க்க கூடாது.

* பால், கீரைகள், பச்சை இலை கொண்ட காய்கறிகள், முட்டை, பயறு வகைகள், சோயாபீன்ஸ் போன்றவற்றில் உள்ள சத்துகள், மன அழுத்தத்தை கட்டுப்படுத்த வல்லது.

* புகை மற்றும் மது பழக்கத்தை தவிர்க்க வேண்டும். இல்லையேல், இப்பழக்கங்களைக் குறைத்துக் கொள்வதாவது சாலச் சிறந்தது.

* தேநீர், காபி மற்றும் குளிர்பானங்களை அதிக அளவில் பருகக் கூடாது.

வழுக்கையா, கவலை வேண்டாம்!

டைபாய்டு, மலேரியா போன்ற கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலைமுடி கொட்ட ஆரம்பித்து விடும். நாளடைவில் இது வழுக்கையாகி விடும்.

இதுபோன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பயன் படும் டிப்ஸ் இது:

சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி எடுத்துகொள்ளவும். இதை செம்பருத்தி பூவுடன் சேர்த்து நன்றாக அரைக்கவும்.

இதன் சாறு எடுத்து வழுக்கையான பகுதியில் தேய்த்து வந்தால், தலைமுடி மீண்டும் வளர வாய்ப்புகள் உண்டு.

'சிறார்களின் நினைவாற்றலுக்கு இனிப்பு பண்டங்கள் உதவும்'

குழந்தைகளுக்கு இனிப்பு பண்டங்களைத் தருவதில் 'தடா' விதிக்கும் பெற்றோர்களா நீங்கள்...? இந்த விஷயத்தில் சற்று யோசிப்பது நல்லது.

சிறார்களுக்கு இனிப்பு பண்டங்களையும், பானங்களையும் தருவதால், அவர்களது நினைவாற்றல் திறன் பெருகும் என்றும், கூர்மையாக கவனிக்கும் திறன் உயரும் என்றும் மருத்துவ ஆய்வு ஒன்று கூறுகிறது.

இதுபற்றி, பிரிட்டன் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அதன் முடிவில், 'மற்ற உறுப்புகளைப் போன்று சக்தியை மூளையானது சேமித்து வைத்துக்கொள்ளாத காரணத்தால், அதனை நேரடியாக இரத்தத்தில் இருந்து எடுத்துக்கொள்கிறது. எனவே, ஐந்து முதல் 10 வயதுக்குள் உள்ள குழந்தைகளுக்கு பெரியவர்களை விட இரு மடங்கு அளவில் குளுகோஸ் தேவைப்படுகிறது' என்பது தெரியவந்துள்ளது.

இந்த காரணத்தால், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு மிதமான அளவில் இனிப்பு பண்டங்களைக் கொடுக்க வேண்டும். மாறாக, அதிக அளவில் கொடுத்தால், உடல் பருமன் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் என்று ஆய்வாளர்கள் அறிவுறுத்துவதாக, பிரிட்டனில் இருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குளுகோஸ் உட்கொள்ளும் குழந்தைகளின் நினைவாற்றல் திறன் மிகுதியாக இருப்பது, ஆய்வின் மூலம் அறியப்பட்டுள்ளதாகவும் அந்தத் தகவல் தெரிவிக்கிறது.

அதேநேரத்தில், ஆரோக்கியமான காலை மற்றும் மதிய உணவுகளை குழந்தைகளுக்கு அளிப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்கின்றனர், ஆய்வாளர்கள்.

வயிற்றுப் புண் பிரச்சனையும் உணவுமுறையும்

தற்போதைய வாழ்க்கை முறையின் காரணமாக, நம்மில் பெரும்பாலானோருக்கும் வயிற்றுப் புண் பிரச்சனை ஏற்படுவதைத் தவிர்ப்பது கடினம்.

ஆயினும், வயிற்றுப் புண்களைக் குணமாக்குவதற்கான மருத்துவ சிகிச்சைகளையும் எளிதில் பெறுகிறோம்.

அதேநேரத்தில், வயிற்றுப் புண் முழுவதுமாக குணமடையும் வரை உணவு முறையில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

* வயிற்றுப் புண் பிரச்சனை உள்ளவர்கள், காரத்தை முழுமையாக தவிர்ப்பது சிறந்தது.

* காரம் சேர்க்கப்படாத உணவுகளையே உண்ண வேண்டும்.

* அன்றாட உணவில் பச்சைக் காய்கறிகளை சேர்த்துக்கொள்வது நல்லது.

* வாரத்தில் 3 அல்லது 4 நாட்களுக்கு கீரை வகைகளை உணவில் சேர்க்க வேண்டும்.

* இயன்ற வரை போதுமான தண்ணீரைப் பருக வேண்டும்.

* முக்கியமாக, வேளை தவறாமல் உணவு உட்கொள்ள வேண்டும். காலை, மதியம், இரவு ஆகிய மூன்று வேளைகளிலும் குறிப்பிட்ட நேரத்தில் தவறாமல் உணவருந்துவதை வழக்கமாகக் கொள்ள வேண்டும்

கர்ப்பிணிகள் கவனிக்க வேண்டிய உணவுமுறை

கர்ப்பிணிகள் கடைப்பிடிக்கும் தவறான உணவுமுறையானது, பிறக்கும் குழந்தைகளின் உடல் நலனுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

அந்த வகையில், கர்ப்பம் தரித்த காலத்தில் இருந்தே முந்திரி, வேர்க்கடலை முதலிய கொட்டைப் பருப்புகளை அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லதல்ல.

அன்றாடம் கொட்டைப் பருப்பு வகை உணவுகளை உட்கொண்டால், பிறக்கும் குழந்தைகளுக்கு மூச்சுக் கோளாறு மற்றும் ஆஸ்துமா நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம் என்கிறது, ஒரு மருத்துவ ஆய்வு.

ஆஸ்துமா மற்றும் அலர்ஜி கோளாறுள்ள 1,327 கர்ப்பிணிகள், அந்த வகையான கோளாறுகள் ஏதுமற்ற 2,819 கர்ப்பிணிகளைக் கொண்டு, அமெரிக்க மருத்துவ ஆய்வாளர்கள் ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர்.

மேற்குறிப்பிட்ட கர்ப்பிணிகளின் உணவு முறைக்கும், பிறந்த குழந்தைகளின் உடல் நலனுக்கும் உள்ள தொடர்பை ஆய்வு செய்ததில், பேறு காலத்தில் அதிக அளவிலான கொட்டைப் பருப்பு வகைகளை உட்கொண்டவர்களுடைய குழந்தைகளில் பெரும்பாலானோருக்கு மூச்சுக் கோளாறு போன்ற குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டது.

கர்ப்பிணிகள் கொட்டைப் பருப்புகள் உண்பதற்கும், குழந்தைகளுக்கு ஆஸ்துமா வருவதற்கும் இடையேயுள்ள தொடர்பை முழுவதுமாக உறுதி செய்ய, மேலும் சில ஆய்வுகள் அவசியமாகிறது.

எனினும், ஆஸ்துமா பிரச்சனையுள்ள கர்ப்பிணிகள் கொட்டைப் பருப்பு வகைகள் உட்கொள்வதைக் குறைத்துக் கொள்வது சாலச் சிறந்தது என்கின்றனர், மருத்துவ ஆய்வாளர்கள்.

பயணங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும்!

பயணம்... சுற்றுலாவாகவோ இருந்தாலும் சரி, அலுவல் சார்ந்ததாக இருந்தாலும் சரி, நீண்ட தூரம் மேற்கொள்ள வேண்டும் என்று வந்துவிட்டால், சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம்.

காலநிலை மாற்றம் போன்ற காரணங்களால் பயணத்தின் இடையே உடல் நலக் குறைவு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் என்பதாலேயே, முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியமாகிறது.

பயணம் இனிதாக இருக்க சில குறிப்புகள் இதோ...

* தினமும் மருந்துகளை உட்கொள்பவர்களாக இருப்பின், அதை எடுத்துச் செல்ல மறந்து விடக்கூடாது.

* புதிய இடத்துக்குப் பயணிப்பதால், எடுத்துக் கொள்ளும் மாத்திரைகளின் டோசேஜ் குறித்து உங்களுடைய மருத்துவரிடம் ஆலோசிப்பது சிறந்தது.

* வயிறு வலி, வாந்தி, வயிற்றுப் போக்கு, காய்ச்சல் போன்ற குறுகிய கால பாதிப்புகளுக்கு உகந்த மருந்து, மாத்திரிகளை மருத்துவர்களின் அறிவுரைக்கேற்ப எடுத்துச் செல்ல வேண்டும். கூடவே, பேண்ட் - எய்ட் சிலவற்றையும் எடுத்துச் செல்வதும் நல்லதே.

* புதிய இடத்தில் கையேந்தி பவன்களை தவிர்க்க வேண்டும். சூடானதும் முழுமையாக வேகவைக்கப்பட்டதுமான உணவுகளையே உட்கொள்ள வேண்டும்.

* பழங்கள் உண்ண விரும்பினால், தோலை உறித்து சாப்பிடக்கூடிய வகைகளையே வாங்கிச் சாப்பிட வேண்டும். இல்லையெனில், நன்றாகக் கழுவிய பிறகு சாப்பிட வேண்டும்.

* அதேபோல், பாட்டிலில் அடைக்கப்பட்டு விற்கப்படும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரையோ அல்லது கொதிக்க வைக்கப்பட்ட குடிநீரையோ மட்டுமே பருக வேண்டும்.

குடல்வால் நோயும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையும்

சிறியவர் முதல் பெரியவர் வரை யாருக்கு வேண்டுமானாலும் வரக்கூடிய நோய் வகையறாக்களில் குடல்வால் நோயும் ஒன்று.

அப்பெண்டிசைடிஸ் என்றழைக்கப்படும் இந்நோய், குடல்வாலில் பாக்டீரியா கிருமிகளின் தாக்குதல் உண்டாவதாலும், குடல் புழுக்களின் பாதிப்புகள் காரணமாகவும் உண்டாகிறது.

தடுப்பு நடவடிக்கைகளாவன:

* சுகாதாரம் பேணுதல் மிக மிக அவசியம்.

* மலச்சிக்கல் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கையாக செயல்படுதல்.

* இரவில் போதுமான அளவில் தண்ணீர் குடித்தல்.

* நார்ச்சத்து மிகுந்த உணவுப் பொருட்களை மிகுதியாக உட்கொள்ளுதல்

நீரிழிவு ஆபத்தை உண்டாக்கும் ஆரஞ்சு பழரசத்தை தவிர்ப்பீர்!

நீரிழிவு நோய் ஏற்படும் ஆபத்து அதிகம் உள்ளது என்பதால், ஆரஞ்சு பழரசத்தை பெண்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

தினமும் காலையில் ஒரு டம்ளர் ஆரஞ்சு பழரசம் அருந்தும் பெண்களுக்கு, டைப் 2 நீரிழிவு நோய் வருவதற்கான சாத்தியம், 18 சதவிகிதம் அதிகம் என்கிறது, ஒரு மருத்துவ ஆய்வு.

இது, மொத்தம் 70 ஆயிரம் செவிலியர்களைக் கொண்டு மேற்கொள்ளப் பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

அதேநேரத்தில், இது ஆண்களுக்கும் பொருந்துமா என்பது இதுவரை கண்டறியப்படவில்லை.

பரம்பரை காரணமாக அல்லாமல், வேறு நோய்களால் இன்சுலின் செயல்பாடு பாதிக்கப்பட்டு வருவதே டைப் 2 நீரிழிவு நோயாகும்.

ஆரஞ்சு பழரசத்தில் உள்ள இனிப்பானது திரவ வடிவில் உள்ளதால், அது வயிற்றில் மிக விரைவாக உறிஞ்சிகொள்ளப்படும் என்பதாலேயே, டைப் 2 நீரிழிவு பாதிப்பு ஏற்பட காரணமாகிறது என மருத்துவ ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளதாக, 'டயபடிக் கேர்' என்ற மருத்துவ இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொல்லை நீக்கும் வெள்ளைப் பூண்டு

35 வயதை தாண்டிவிட்டாலே வாயுத்தொல்லை பாடாய் படுத்தும். இந்த தொல்லையை தீர்க்கும் அரிய குணம் வெள்ளைப்பூண்டுக்கு மட்டுமே உண்டு.

வெள்ளைப்பூண்டை அப்படியே உரித்து சாப்பிடலாம். இதன் காரம் போக்க மோர் அருந்தலாம்.

நெருப்பில் சுட்டு சாப்பிடும் பூண்டு, அதிக சுவையுடையதாக இருக்கும்.

உணவுக்கு பயன்படுத்தும் குழம்பில் வெள்ளைப் பூண்டு முக்கிய இடம் பிடிப்பதற்கு காரணமும் இதுவே.

பெண்களுக்கு ஊட்டம் கொடுக்கும் சத்துக்களும் பூண்டில் உண்டு. தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் வெள்ளைப் பூண்டை சாப்பிட்டால், தாய்க்கு மட்டுமின்றி சேய்க்கும் நலம் தருகிறது பூண்டு.

பூனை முடி உதிர...

சில பெண்களுக்கு மேலுதட்டின் மேல் மீசை போன்று ரோமங்கள் வளர்ந்து, அருவெறுப்பாக காட்சியளிக்கும்.

இதை போக்க ஓர் எளிய டிப்ஸ்:

குப்பை மேனி இலை, வேப்பங்கொழுந்து, விரலி மஞ்சள் ஆகியவற்றை சேகரித்து கொள்ளவும். இவற்றை மாவு போல் நன்றாக அரைத்து, படுக்கைக்கு போகும் முன் மேலுதட்டில் பூசவும்.

தொடர்ந்து இரு வாரங்கள் பூசி வந்தால், பூனை முடி உதிர்ந்து உதடுகள் பளிச்சிடும்.

ஆரோக்கிய இதயத்துக்கு உதவும் மீன் உணவு!

அசைவப் பிரியர்களுக்கு இது ஆனந்த செய்தியாகக் கூட இருக்கலாம். அதுவும், மீன் விரும்பிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சிக்குரிய தகவல் இதோ...

அன்றாட உணவில் அவ்வப்போது மீன் வகைகளை சேர்த்துக் கொண்டால், இதயம் மிகுந்த ஆரோக்கியத்துடனும், பாதிப்புகள் ஏதும் தீண்டாத வகையிலும் இருக்கும்.

இதனை, ஆய்வு ஒன்றின் மூலம் மெய்ப்பித்து, அது தொடர்பான விவரங்களை, ஜப்பானிய மருத்துவ ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

மீன் உணவுகளை உட்கொள்வதால், இதயம் தொடர்பான நோய்கள் வருவதில் இருந்து காத்துக்கொள்ள முடியும் என்கின்றனர், ஆய்வாளர்கள்.

மீன் எண்ணெயில் கண்டறியப்பட்டுள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களுக்கு, இதய நோய்கள் வராமல் தடுக்கும் வல்லமை உண்டு என ஜப்பானிய மருத்துவ ஆய்வில் தெரியவந்துள்ளது

மருத்துவக் குணம் நிறைந்த பாகற்காய்!

பாகற்காய் என்றவுடனே பலருக்கும் நாவில் கசப்பு சுவை தான் ஊற்றெடுக்கும். ஆனால், அதில் பல மருத்துவக் குணங்கள் இருப்பது பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை.

பாகற்காயில் 2 வகைகள் உண்டு. பொடியாக இருப்பது மிதி பாகற்காய். நன்கு பெரிதாக நீளமாக இருப்பது கொம்பு பாகற்காய்.

நீரிழிவு, ஜூரம், இருமல், இரைப்பு, மூலம் மற்றும் வயிற்றில் பூச்சித் தொல்லை இருப்பவர்களுக்கு பாகற்காயை அருமருந்து.

பாகற்காயை விட பாகற்காயின் இலையில் அதிக மருத்துவக் குணங்கள் உள்ளன. அதன் சாறு பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.

பாகற்காயின் இலைகளை அரைத்து உடல் முழுவதும் பத்துப்போட்டால் படை, சிரங்கு, அரிப்பு போன்றவை மறைந்துவிடும்.

இதேபோல, ஒவ்வொரு நோய்க்கும் ஒவ்வொரு விகிதத்தில் பாகற்காய் இலையின் சாறை குடிக்க, மிக விரைவில் நோய்கள் குணமாகும்

Wednesday, July 23, 2008

மகப்பேறு மருத்துவர் செக்கப்பில் என்ன செய்வார்?

முதல் விசிட் !

நீங்கள் முதன் முறையாக மகப்பேறு மருத்துவரை சந்திக்கும்போது, அவர் உங்களிடம் சில கேள்விகளை கேட்பார். இதன் மூலம் நீங்கள் கர்ப்பம் அடைந்திருப்பதற்கான அறிகுறி தெரிகிறதா என்று கன்ஃபார்ம் செய்து கொள்வார். தவிர உங்களுடைய ஃபேமிலி மெடிக்கல் ஹிஸ்ட்ரியைப் பற்றியும் டாக்டர் விசாரிப்பார். இதன் மூலம் நீங்கள் கர்ப்பமாக இருக்கும்போது ஏதாவது காம்ப்ளிகேஷன் வர வாய்ப்புள்ளதா என்று டாக்டர் தெரிந்துக்கொள்வார். நீங்கள் ஏற்கனவே கர்ப்பமாகி இருந்தால், அந்த டெலிவரி நார்மலா அல்லது சிசேரியனா என்று விசாரிப்பார். அதன் பிறகு உங்கள் கருப்பையின் அளவை பரிசோதனை செய்து நீங்கள் கர்ப்பமடைந்து எவ்வளவு நாள் ஆகியுள்ளது என்று சொல்லுவார்.

கருப்பையின் அளவை பரிசோதித்தல்!

கர்ப்பம் அடைந்த புதிதில் நீங்கள் மருத்துவரை சந்திக்கும் முதல் விசிட்டின்போது உள் பரிசோதனையின் மூலம் (internal Examination) கருப்பையின் அளவைதான் மருத்துவர் சோதிப்பார். கர்ப்பம் தரித்து 3 மாதம் ஆன பிறகு சாதாரணமாக வயிற்றின்மேலே மட்டும்தான் பரிசோதனை செய்வார்கள். ஏனென்றால் கர்ப்பமான மூன்று மாதம் கழித்து சாதாரணமாக அடிவயிற்றைத் தொட்டுப் பார்த்தாலே கர்ப்பம் தெரியும். இப்படி கருப்பையின் அளவை பரிசோதனை செய்துதான் வயிற்றிலுள்ள குழந்தையின் வளர்ச்சி நன்றாக இருக்கிறதா,இல்லையா என்று டாக்டர்கள் கண்டுபிடிப்பார்கள்.

பரிசோதனைகள்!

கர்ப்பமடைந்த பிறகு டாக்டரை சந்திக்கப்போகும் முதல் விசிட்டில், சில ப்ளட் டெஸ்ட்களை செய்ய சொல்லி அறிவுறுத்துவார். அவைகள்;

ற நீங்கள் அனிமிக்காக (ரத்தசோகை) இருக்கிறீர்களா என்று கண்டுபிடிக்கும் ஹீமோகுளோபின் (Haemoglobin)) மற்றும் ஹீமோடோக்ரிட் (Haematocrit) டெஸ்ட்.

ீ ப்ளட் குரூப் மற்றும் ஆர்.எச்.டைப் டெஸ்ட் இந்த டெஸ்ட் எதற்காக முக்கியம் என்றால் நீங்கள் ஆர்.எச். நெகடிவா அல்லது பாஸிடிவா என்று தெரிந்துக் கொள்வது முக்கியம்.

ீவி.டி.ஆர்.ஆ (அ) ஆர்.பி.ஆர். டெஸ்ட்கள்; சிபிள்ஸ் (syphilis)என்ற தொற்று நோய்க்கான அறிகுறி. இந்த நோய் அரிதாக இருந்தாலும் குழந்தைக்கு ஊனம் ஏற்படுத்தலாம்.

ீ தாய்க்கு இருந்தால் குழந்தைக்கு பரவக் கூடிய ஹெப்பாடைடிஸ் `பி' மற்றும் ஹெ.ஐ.வி.க்கான டெஸ்ட் செய்வார்கள். ஏனென்றால் இது பாசிட்டிவாக இருந்தால் குழந்தைக்கு வராமல் தடுக்க முயற்சி செய்யலாம்.

ீ கர்ப்பத்தின் 6 அல்லது 7 மாதத்தில் டயாபடீஸீக்கான டெஸ்ட் செய்யப்படும். ஏனென்றால் இந்தியப் பெண்களுக்கு கர்ப்பத்தின்போது டயாபடீஸ் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

டவுன் சின்ட்ரோம் டெஸ்ட்!

குழந்தைகளுக்கு மென்டல் ரிட்டார்டேஷன் வருவதற்கு டவுன் சின்ட்ரோம்தான் முதல் காரணம். அந்தக் குழந்தைக்கு 21வது குரோமோசோம் அதிகமாக இருப்பதால் இந்த பிரச்னை உண்டாகும். பெண்களுக்கு எந்த வயதிலும் டவுன் சிண்ட்ரோம் உள்ள குழந்தை பிறக்க வாய்ப்பு இருப்பதால் இந்த டெஸ்ட் செய்வது நல்லது. வயது அதிகமாக ஆக டவுன் சின்ட்ரோம் வாய்ப்பும் அதிகமாகும். அதனால் 35வயதில் இருந்து கர்ப்பமாக இருக்கும் பெண்கள் தன்னுடைய மகப்பேறு மருத்துவரிடம் இந்த டெஸ்ட் பற்றி ஆலோசிக்க வேண்டும். டவுன் சின்ட்ரோம் டெஸ்ட்டில் பிளட் டெஸ்ட் மற்றும் அல்ட்ரா சவுண்ட் என இரண்டு டெஸ்ட்களை செய்வார்கள். இந்த டெஸ்ட்களின் ரிசல்ட் பாசிட்டிவாக வந்தால் நீங்கள் அடுத்தக்கட்டமாக கருப்பையின் உள்ளே இருக்கும் அம்னியோடிக் திரவத்தை எடுத்து டெஸ்ட் செய்வார்கள். இதற்கு `அம்னியோசென்டிஸிஸ்' என்று பெயர்.

கருவின் இதயத்துடிப்பை கேட்டல்!

ஃபீட்டோஸ்கோப் என்று அழைக்கப்படும் ஒரு எலக்ட்ரானிக் கருவியால் மூன்று மாத கருவின் இதயத் துடிப்பை கேட்க முடியும். ஆனால் உங்கள் டாக்டரிடம் ரெகுலர் ஃபீட்டோஸ்கோப் இருந்தால் கருவின் இதயத்துடிப்பை 5-ம் மாதத்தில் இருந்துதான் கேட்க முடியும். இப்படி கருவின் இதயத்துடிப்பை கேட்பதன் மூலம் கரு ஹெலத்தியாகவும், நல்லபடியாகவும் இருப்பதை தெரிந்துக் கொள்ள முடியும்.

உங்களுடைய ரத்த அழுத்தத்தை பரிசோதித்தல்!

நீங்கள் ஒவ்வொரு முறை டாக்டரை சந்திக்க செல்லும்போது அவர் உங்கள் ரத்த அழுத்தத்தை பரிசோதனை செய்வார். இதன் மூலம் உங்கள் டாக்டர் உங்களுடைய ரத்த அழுத்தம் நார்மலாக இருக்கிறதா, இல்லையா என்று கவனிப்பார். இந்தியப் பெண்களுக்கு ரத்த அழுத்தம் 90/60 (mmHg) முதல் 120/80 (mmHg) வரைக்கும் இருக்கலாம்.

சாதாரணமாக குறைந்த ரத்த அழுத்தம் என்று ஒன்றுமில்லை. எப்போது 140/90 (mm Hg) அதிகமானால் அந்தப் பெண்ணுக்கு உயர் ரத்த அழுத்தம் இருக்கிறது என்று அர்த்தம்.

உங்கள் எடையை செக் செய்தல்!

ஒவ்வெரு செக்கப்பின் போது உங்கள் வெயிட்டை டாக்டர் பதிவு செய்து கொள்வார். கர்ப்பமாக இருக்கும்போது மாதம் ஒன்றுக்கு அரை கிலோவில் இருந்து ஒரு கிலோ வரையிலும் வெயிட் போடலாம். மொத்தமாக பார்க்கும்போது 10-லிருந்து 12 கிலோ வரை வெயிட் போடுவது நார்மல்தான். உங்கள் வெயிட் இதை விட மிகவும் குறைவாக இருந்தால், குழந்தை மிகச் சிறியதாக பிறக்கலாம். உங்கள் வெயிட் அதிகமாக இருந்தாலோ டெலிவரிக்கு பிறகு பிறகு அதைக் குறைப்பது மிகவும் கடினமாகி விடலாம்.

யூரின் டெஸ்ட்!

ஒவ்வொரு தடவை டாக்டரை பார்க்க செல்லும் போது `யூரினில் அல்புமின் (albumin) மற்றும் சுகர் இருக்கிறதா என்று டெஸ்ட்' செய்வார்கள். யூரினில் சுகர் இருந்தால் இரத்தத்திலும் சுகர் இருக்கிறதா என்று டெஸ்ட் செய்வார்கள். யூரினில் உப்பு இருந்தால் உங்களுக்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருக்கிறதா என்று பார்ப்பார்கள்.

அல்ட்ரா சவுண்டு பரிசோதனை!!

கருவில் உள்ள குழந்தையின் வளர்ச்சியை தெரிந்துக்கொள்வதற்காக உங்கள் டாக்டர் உங்களை அல்ட்ரா சவுண்டு பரிசோதனை செய்யச் சொல்லுவார். பொதுவாக இந்த ஸ்கேன்கள் மூன்றாம் மாதத்திலும், 5 அல்லது 6-ம் மாதத்தின் இடையிலும் செய்யப்படும். கடைசி 3 மாதத்தில் தேவைப்பட்டால் மறுபடியும் ஒரு ஸ்கேன் செய்ய சொல்லுவார்கள்.

மறுமுறை செக்கப் செய்தல்!

பொதுவாக கருத்தரித்த 32-வது வாரம் வரை மாதம் ஒரு முறையும் அதன் பிறகு 2 வாரத்துக்கு ஒரு முறையும் செக்கப் செய்யப்படும். கடைசிமாதத்தில் மட்டும் வாரம் ஒரு முறை செக்கப் செய்யப்படும்!

Tuesday, July 22, 2008

தண்ணீருக்குள் நிகழும் சுக பிரசவம்!

பெண்களை பொருத்தவரை பிரசவம் என்பது ஒரு மறுபிறவி மாதிரி.

ஆனால், இன்றைய காலக்கட்டத்தில் இதை பெரும்பாலான மருத்துவர்களே கூட உணர்வதில்லை.

பிரசவ வலி என்று போனாலே, பெரும்பாலான மருத்துவர்கள் உடனடியாக அறுவைச் சிகிச்சையில் இறங்கிவிடுகின்றனர் என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதனால், பாதிக்கப்பட்ட பெண்கள் வாழ்நாள் முழுவதும் பல்வேறு உடல்நல பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர்.

அறுவைச் சிகிச்சையின் போது ஏற்படும் கவனக்குறைவுகள் காரணமாக, குழந்தையும் ஊனம் அல்லது குறைபாடுகளுடன் பிறக்கும் அபாயம் நேரிடுகிறது.

மருத்துவத்தை சேவையாக கருதாமல் வணிக நோக்கில் செயல்படும் ஒரு சில மருத்துவர்களால், இதுபோன்ற களங்கம் ஏற்பட்டுவிடுகிறது.

ஆனால், 'தண்ணீருக்குள் பிரசவம்' என்ற நவீன முறையில் இதுபோன்ற தொல்லைகள் இல்லை.

இந்த முறையின்படி, கர்ப்பிணி பெண்கள் இளம் சூடான தண்ணீருக்குள் அமரவைக்கப்பட்டு, பிரசவம் நிகழ்கிறது.

இதனால், 80 சதவீதம் பிரசவ வலி நீங்கி, அந்த பெண்கள் மிகவும் எளிதாக ஆரோக்கியமான முறையில் குழந்தைகளை பெற்றெடுக்கின்றனர்.

"பொதுவாக, தண்ணீருக்கும் இருக்கும்போது, உடல் உறுப்புக்களுக்கு நெகிழ்வுத்தன்மை அதிகம் என்பதால், வலி இல்லாத இந்த சுகப்பிரசம் சாத்தியமாகிறது" என்கிறார் புதுடெல்லி ஃபீனிக்ஸ் மருத்துவமனையை சேர்ந்த பிரபல மகப்பேறு மருத்துவர் ஊர்வசி சேஹால்.

அடிக்கடி தலைவலியா...?

பல்வேறு காரணங்களினால் அடிக்கடி தலைவலி ஏற்படலாம். இதிலிருந்து உடனடி நிவாரணம் பெற ஓர் எளிய வழி:

இரண்டு கைகளாலும் கண்களை இறுக மூடிக்கொள்ளவும். அப்போது, கை விரல்களால் நெற்றியை அழுத்தி பிடித்தபடி சிறிது நேரம் இருக்கவும்.

ஒரு சில நிமிடங்கள் இப்படி செய்தால், தலைவலி படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.

டைப் 2 நீரிழிவு : மிகுதியான காய்கறிகள்; குறைந்த பழரசம்!

டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்; குறைந்த அளவிலான பழரசத்தையே பருக வேண்டும்.

பரம்பரை காரணமாக அல்லாமல், வேறு நோய்களால் இன்சுலின் செயல்பாடு பாதிக்கப்பட்டு வரும் டைப் 2 நீரிழிவு நோய்க்கு ஆளானவர்களால் உட்கொள்ளப்படும் காய்கறிகள், பழங்கள் மற்றும் பருகப்படும் பழரசங்கள் ஆகியவற்றால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஆய்வு ஒன்றினை பிரிட்டன் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டனர்.

38 முதல் 63 வயது வரையிலான 71,346 பெண்களிடம் 18 ஆண்டுகளாக திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில், பச்சை இலைகள் கொண்ட காய்கறிகளையும், பழங்களையும் உண்ணும் பெண்களுக்கு நீரிழிவு பாதிப்பு குறைவாகவுள்ளதும், பழரசத்தை மிகுதியாக பருகும் பெண்களுக்கு பாதிப்பு அதிகமாகியிருப்பதும் தெரியவந்துள்ளது.

பழரசத்தில் உள்ள இனிப்பானது திரவ வடிவில் உள்ளதால், அது உடலில் மிக விரைவாக உறிஞ்சிகொள்ளப்படும் என்பதாலேயே, டைப் 2 நீரிழிவு பாதிப்புள்ளவர்கள் குறைந்த அளவிலேயே பழரசத்தை பருக வேண்டும் என்கின்றனர், ஆய்வாளர்கள்.

Sunday, July 20, 2008

பற்கள் பளீரிட...

பெரும்பாலானோர் பற்களை பராமரிப்பதற்கு அதிக முக்கித்துவம் கொடுப்பதில்லை. பல் தானே என்று அலட்சியமாக இருந்துவிடுவது உண்டு. இதனால், காலப்போக்கில் பல்வேறு சிரமங்களை சந்திக்க நேரிடும்.

பற்களில் கறைபடிய விடக்கூடாது. பலரது பற்கள் காவி கலந்த மஞ்சள் நிறத்தில் காட்சியளிக்கும். இது 'புளுரோஸிஸ்' என்னும் நோயின் அறிகுறி.

இதை ஆரம்பித்திலேயே கவனித்து குணப்படுத்திவிட வேண்டும். தவறினால் இந்த கறைகள் பற்களில் நிரந்தரமாக தங்கிவிடும். பின்னர் இது தொடர்பான பல்வேறு நோய்களுக்கும் வழி வகுத்துவிடும்.

அதோடு, புளோரைடு கலந்த பற்பசைகளையும் தவிர்த்துவிட வேண்டும். குடிநீரில் புளோரைடு அளவு குறைவாக இருக்கும்படி பார்த்துகொள்ள வேண்டும்.

இந்த நோய் தாக்கியவர்கள் அலுமினியம், பொட்டாசியம் மற்றும் எலுமிச்சை சாறு சிறிதளவு கலந்து 10 நிமிடங்கள் நன்கு கலக்கவும். 3 மணி நேரம் கழித்து மெல்லிய துணியில் வடிகட்டி, பின்னர் பருக வேண்டும். இப்படி செய்து வந்தால், பற்கள் மஞ்சள் நிறத்திலிருந்து மாறி, பளீரிட ஆரம்பிக்கும்.