Saturday, August 2, 2008

ஆளையே முடக்கி விடுமா ஆர்த்தரைடிஸ் பிரச்சனை!

ஆர்த்தரைடிஸ் என்றாலே மூட்டு தேய்ந்து விட்டது, இனி ஒன்றுமே செய்ய முடியாது என்ற பயமும் குழப்பமும் பலருக்கு ஏற்படுகிறது.

ஆனால், இந்நோயைப் பற்றி இனி பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஆரம்பத்திலேயே அதற்கான மருந்து உட்கொண்டால் நோயைக் கட்டுப்படுத்தி விடலாம்'' என்று நம்பிக்கையோடு கூறுகிறார் ஆர்த்தோ நிபுணர் டாக்டர் ஆனந்த் ரெங்கசாமி எம்.எஸ்.

``நமது மூட்டுகளின் எலும்பு முனைப்பகுதிகளில் `கார்டிலேஜ்' என்கிற சவ்வு காணப்படும். இந்த சவ்வானது எலும்புகளுக்குள் உராய்வு ஏற்படாமல் தடுக்கும். ஆனால், கார்டிலேஜ் சவ்வில் அரிப்பு ஏற்பட்டு எலும்புகள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்வதால் வலியும் வீக்கமும் உண்டாகும்.

ஆஸ்டியோ ஆர்த்தரைடிஸ் (Osteo arthritis) 50 வயதிற்கு மேல் குறிப்பாக பெண்களை அதிகம் பாதிக்கும். சில சமயம் - மூட்டு எலும்பு முறிவு, பிறவி மூட்டு ஊனம் உள்ளவர்களுக்கு இளம் வயதிலேயே பாதிக்கும்.

ரூமடாய்டு ஆர்த்தரைடிஸ் (Rheumatoid arthritis)பெண்கள் மற்றும், இளம் வயதினரைப் பாதிக்கும் பொழுது மிகக் கடுமையாக இருக்கும். உடம்பில் உள்ள அனைத்து மூட்டுகளையும் அரித்து உருமாற்றம் ஏற்படுத்தி ஆளையே முடக்கிவிடும். இந்த மூன்று ஆர்த்தரைடிஸ்தான் தற்போது பலரையும் பயமுறுத்தி வருகிறது.

இந்நோயினால் மூட்டுகள் மோசமாக தேய்ந்திருந்தால் செயற்கையாக சவ்வுகளை அறுவை சிகிச்சை மூலம் பொருத்தி இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப இயலும். மேலும் மக்களிடையே மூட்டுமாற்று அறுவை சிகிச்சை என்றால் மூட்டு எலும்பையே கழற்றி வேறு பொருத்துவார்கள் என்ற தவறான கருத்து நிலவுகிறது. இந்த அறுவை சிகிச்சையில் மூட்டு எலும்பையே மாற்றுவது கிடையாது. ஆர்த்தரைடிஸினால் தேய்ந்து போன கார்டிலேஜ் பகுதியை மட்டும் மாற்றப்படும். இதனால் உடனடியாக அவர்களுக்கு வேதனையிலிருந்து நிரந்தர தீர்வு கிடைக்கிறது. நன்றாக நடக்கவும் இயலும்..

0 comments: