Saturday, August 2, 2008

அடிக்கடி சிசேரியன் ஏன்?

இப்போதெல்லாம் யாரைக் கேட்டாலும் `இப்போதெல்லாம் யாரைக் கேட்டாலும் `சிசேரியன் டெலிவரி' என்கிறார்கள். நார்மல் டெலிவரி மெல்ல குறைந்து கொண்டே வருகிறது. ஏன் என்பது மகப்பேறு மருத்துவர்களுக்கு மட்டுமே தெரிந்த விஷயம். சிசேரியன் மூலம்தான் குழந்தை பிறக்கவேண்டும் என்ற முடிவு மருத்துவர்களால் ஏன் எடுக்கப்படுகிறது? அதன் நிஜமான மருத்துவக் காரணங்கள் என்ன என்ற கேள்வியை திருநெல்வேலி மகப்பேறு மருத்துவ நிபுணர் டாக்டர் ஆக்னஸ்ஸிடம் கேட்டோம்.


"முன்புபோல சிசேரியனைக் கண்டு இப்போது பயப்படத் தேவையில்லை. பாதுகாப்பு அதிகமாகிவிட்டது. ஒருவருக்கு சிசேரியன் தேவையா, இல்லையா என்பதை அவரைப் பரிசோதிக்கும் டாக்டர்தான் முடிவு செய்யமுடியும். சிசேரியன் செய்ய வேண்டியதற்கான மருத்துவக் காரணங்கள் பொதுவாக இவைதான்:

1.பிரசவ வலி ஆரம்பிக்கும்போதே குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு நஞ்சுக் கொடி குழந்தையின் கழுத்தைச் சுற்றிக் கொண்டிருப்பது.

2.முதல் பிரசவம் சிசேரியனாக இருந்தால், இரண்டாம் முறையும் சிசேரியனுக்குச் செல்வது பொதுவாக பாதுகாப்பானது. காரணம், பிரசவ வலியினால் கர்ப்பப்பை கிழிந்து போக வாய்ப்பிருப்பதைத் தவிர்ப்பதுதான்.

3.குழந்தையின் தலை பெரிதாக இருந்து தாயின் இடுப்பெலும்பு சிறியதாக இருக்கிற சூழ்நிலையில்.

4.பனிக்குடம் உடைந்து பிரசவ வலி வரவில்லை என்றாலும் சிசேரியன் தேவைப்படும்.

5.பனிக்குடம் உடைந்தும், பிரசவ வலி அதிகமாக இருந்தும் குழந்தை பிறக்கவில்லை என்றால் சிசேரியன் தேவைப்படும்.

6.ஏற்கெனவே சில முறை குழந்தை இறந்து பிறந்தவர்களுக்கு நிறை மாதத்திற்கு முன்பே சிசேரியன் தேவைப்படும்.

7.கர்ப்பப்பை அடி இறங்கி அதனை சரி செய்ய ஆபரேஷன் செய்திருந்தால் சிசேரியன் தேவைப்படும்.

8.கருப்பை வாயில் கேன்சர் இருந்தால் சிசேரியன் தேவைப் படும்.

9.தாய்க்கு அதிக இரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற பிரச்னைகள் இருக்குமானால் குழந்தைக்கு பிரச்னை ஏற்படுவதைத் தடுக்க சிசேரியன் தேவைப்படும்.

10.நிறைமாதத்திற்குப் பிறகும், வலி தூண்டிவிடப்பட்ட பிறகும் வலி வராத நிலையில், சிசேரியன் தேவைப்படும்.

11.நஞ்சுக்கொடி பிரசவப் பாதையை அடைத்திருந்தால் சிசேரியன் தேவைப்படும்.

12.கருப்பையில் ஏதாவது கட்டி இருந்தால் சிசேரியன் தேவைப்படும்.

13.வயது முதிர்ந்த பெண்களுக்கு சூழ்நிலையைப் பொறுத்து சிசேரியன் தேவைப்படலாம்.

14.யோனிக்குழாயின் அமைப்பு சீரற்று இருந்தால் சிசேரியன் தேவைப்படலாம்.

15.குழந்தையின் வளர்ச்சி குறைவாக இருந்தால் சிசேரியன் தேவைப்படும்.

16.செயற்கை முறை கருத்தரிப்பு குழந்தைக்கு சிசேரியன்தான் பாதுகாப்பானது'' என்றார் ஆக்னஸ். .

0 comments: