அந்த மாதத்து வரவு செலவுப் பட்டியலை எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்த சண்முகம், கல்பனாவை அழைத்தான்.
``செலவு அதிகமாயிடுச்சு. நாளையில இருந்து வேலைக்காரியை வரவேண்டாம்னு சொல்லிரு. நீயே பாத்திரம் தேச்சி, துணி துவைச்சிக்க. நான் வேணும்னா கூட மாட ஒத்தாசையா இருக்கேன்.''
இந்த `கூட மாட' என்பதே ஒரு ஏமாற்று வேலை என்பது கல்பனாவுக்கு நன்றாகத் தெரியும். விதியே என சண்முகம் போடும் இம்சையை தாங்கிக் கொள்ள முடிவெடுத்தாள்.
மறுநாள்.
அலுவலகத்தில் உதவி மேனேஜர் ராமு வரவில்லை. கிளார்க்குகளில் இரண்டு பேரையும் காணோம்.
``எல்லாரும் எங்க போயிட்டாங்க'' என்றபோதே பாக்ஸ் மெஷின், தாளைத் துப்பியது. `சிக்கன நடவடிக்கைக்காக அவர்களை ஆளில்லாத மற்ற கிளைகளுக்கு மாற்றியுள்ளோம். மானேஜர் என்று சும்மா அறைக்குள் உட்கார்ந்திருக்காமல் கவுண்டரில் போய் அங்குள்ள வேலைகளையும் `கூடமாட' ஒத்தாசையாக கவனித்துக் கொள்ளவும்' என்பதை நறுக்குத் தெறித்த ஆங்கிலத்தில் எழுதியிருந்தார்கள் மேலிடத்திலிருந்து.
சண்முகம் அதிர்ந்தார்.?
Saturday, August 2, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment