Saturday, August 2, 2008

பணம் வேண்டாம்!

கிராமத்திலிருக்கும் அப்பா விற்கு நானும் என் நாலு தம்பிகளும் ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்திற்குள் பணம் அனுப்பி விடுவோம்.
அன்று காலை வந்த கடிதத்தில் அவர் `இனி பணம் அனுப்ப வேண்டாம்' என்று எழுதியிருந்தார். எனக்கு மட்டுமல்லாமல் என் தம்பிகளுக்கும் இதையே எழுதியிருந்தார். ஏன் இப்படி எழுதியிருக்கிறார் என்பதைத் தெரிந்து கொள்ள கிராமத்திற்கு நாங்கள் சென்று அவரிடம் கேட்டோம்.

``நீங்க ஒழுங்கா பணம் அனுப்புறீங்க, பெருமையாத்தான் இருக்கு. ஆனா பக்கத்து வீட்டு மாரியப்பனோட இரண்டு மகன்களும் பெரிய வேலையில சென்னையில இருக்காங்க. அவங்க அவருக்கு பைசா அனுப்புறதில்லை. எதிர் வீட்டு இசக்கி முத்துவோட மூணு பையன்களும் வடக்க வேலை செய்யுறாங்க. பணம் மட்டுமில்ல, கடிதம் கூட போடுறது கிடையாது. தபால்காரர் எனக்கு மணியார்டர் தந்த போது அவங்க மனநிலைய நினைச்சேன். வருத்தமாயிருந்தது. அதுதான் அனுப்ப வேண்டாம்னு எழுதினேன். என்னோட பென்ஷன் பணம் எனக்கும் உங்க அம்மாவுக்கும் போதும். சிக்கனமா சேத்து வையுங்க'' என்றார் அப்பா

0 comments: