Saturday, August 2, 2008

அரைக்கூலியே போதும்!

சேலம் ஐந்து ரோடு பொது சந்திப்பு களை கட்டியிருந்தது. சித்தாள், கொத்தனார், இதர கூலியாட்கள் என்று ஏகப்பட்ட பேர் நின்று கொண்டிருந்தார்கள். அவர்களுடன் சின்னானும் முருகனும் இருந்தார்கள். சின்னானுக்கு இரண்டு நாட்களாக வேலை சரியாக இல்லை. அன்றைக்கு வேலை கிடைத்தால்தான் சாப்பாடே. அப்போது இரண்டு ஏஜெண்ட்டுகள் அங்கு வந்தார்கள். ஒருவரிடம் அரைநாள் வேலை. இன்னொருவரிடம் முழு நாள் வேலை.

சின்னான் அரைநாள் வேலையிருப்பவரிடம் மட்டும் ஆசையோடு போனான். ``என்ன சின்னா... குடும்ப கஷ்டமுன்னு சொன்னே. முழுநாள் வேலைக்குப் போகாம, குறைந்த கூலி கொடுக்குற அரைநாள் வேலைக்குப் போறியே?'' ஆச்சரியத்தோடு கேட்டான் முருகன்.

``அரைநாள் வேலைங்கறது மரச் செடிகளை நடுற வேலை. முழு நாள் வேலைங்கறது, ரோடு ஓரத்தில் உள்ள மரத்தை வெட்டுற வேலை. என்னைப் பொறுத்தவரை வெட்டுற வேலையைவிட செடிகளை நட்டு வைக்கிற வேலைதான் மனசுக்குத் திருப்தியா இருக்கு. கூலி கம்மியா கிடைச்சாலும் பரவாயில்லை.''

- சின்னானின் வார்த்தையைக் கேட்டு சிலிர்த்துப் போனான் முருகன்.?

0 comments: