பயணம்... சுற்றுலாவாகவோ இருந்தாலும் சரி, அலுவல் சார்ந்ததாக இருந்தாலும் சரி, நீண்ட தூரம் மேற்கொள்ள வேண்டும் என்று வந்துவிட்டால், சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம்.
காலநிலை மாற்றம் போன்ற காரணங்களால் பயணத்தின் இடையே உடல் நலக் குறைவு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் என்பதாலேயே, முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியமாகிறது.
பயணம் இனிதாக இருக்க சில குறிப்புகள் இதோ...
* தினமும் மருந்துகளை உட்கொள்பவர்களாக இருப்பின், அதை எடுத்துச் செல்ல மறந்து விடக்கூடாது.
* புதிய இடத்துக்குப் பயணிப்பதால், எடுத்துக் கொள்ளும் மாத்திரைகளின் டோசேஜ் குறித்து உங்களுடைய மருத்துவரிடம் ஆலோசிப்பது சிறந்தது.
* வயிறு வலி, வாந்தி, வயிற்றுப் போக்கு, காய்ச்சல் போன்ற குறுகிய கால பாதிப்புகளுக்கு உகந்த மருந்து, மாத்திரிகளை மருத்துவர்களின் அறிவுரைக்கேற்ப எடுத்துச் செல்ல வேண்டும். கூடவே, பேண்ட் - எய்ட் சிலவற்றையும் எடுத்துச் செல்வதும் நல்லதே.
* புதிய இடத்தில் கையேந்தி பவன்களை தவிர்க்க வேண்டும். சூடானதும் முழுமையாக வேகவைக்கப்பட்டதுமான உணவுகளையே உட்கொள்ள வேண்டும்.
* பழங்கள் உண்ண விரும்பினால், தோலை உறித்து சாப்பிடக்கூடிய வகைகளையே வாங்கிச் சாப்பிட வேண்டும். இல்லையெனில், நன்றாகக் கழுவிய பிறகு சாப்பிட வேண்டும்.
* அதேபோல், பாட்டிலில் அடைக்கப்பட்டு விற்கப்படும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரையோ அல்லது கொதிக்க வைக்கப்பட்ட குடிநீரையோ மட்டுமே பருக வேண்டும்.
Friday, August 1, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment