Friday, August 1, 2008

கர்ப்பிணிகள் கவனிக்க வேண்டிய உணவுமுறை

கர்ப்பிணிகள் கடைப்பிடிக்கும் தவறான உணவுமுறையானது, பிறக்கும் குழந்தைகளின் உடல் நலனுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

அந்த வகையில், கர்ப்பம் தரித்த காலத்தில் இருந்தே முந்திரி, வேர்க்கடலை முதலிய கொட்டைப் பருப்புகளை அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லதல்ல.

அன்றாடம் கொட்டைப் பருப்பு வகை உணவுகளை உட்கொண்டால், பிறக்கும் குழந்தைகளுக்கு மூச்சுக் கோளாறு மற்றும் ஆஸ்துமா நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம் என்கிறது, ஒரு மருத்துவ ஆய்வு.

ஆஸ்துமா மற்றும் அலர்ஜி கோளாறுள்ள 1,327 கர்ப்பிணிகள், அந்த வகையான கோளாறுகள் ஏதுமற்ற 2,819 கர்ப்பிணிகளைக் கொண்டு, அமெரிக்க மருத்துவ ஆய்வாளர்கள் ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர்.

மேற்குறிப்பிட்ட கர்ப்பிணிகளின் உணவு முறைக்கும், பிறந்த குழந்தைகளின் உடல் நலனுக்கும் உள்ள தொடர்பை ஆய்வு செய்ததில், பேறு காலத்தில் அதிக அளவிலான கொட்டைப் பருப்பு வகைகளை உட்கொண்டவர்களுடைய குழந்தைகளில் பெரும்பாலானோருக்கு மூச்சுக் கோளாறு போன்ற குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டது.

கர்ப்பிணிகள் கொட்டைப் பருப்புகள் உண்பதற்கும், குழந்தைகளுக்கு ஆஸ்துமா வருவதற்கும் இடையேயுள்ள தொடர்பை முழுவதுமாக உறுதி செய்ய, மேலும் சில ஆய்வுகள் அவசியமாகிறது.

எனினும், ஆஸ்துமா பிரச்சனையுள்ள கர்ப்பிணிகள் கொட்டைப் பருப்பு வகைகள் உட்கொள்வதைக் குறைத்துக் கொள்வது சாலச் சிறந்தது என்கின்றனர், மருத்துவ ஆய்வாளர்கள்.

0 comments: