குழந்தைகளுக்கு இனிப்பு பண்டங்களைத் தருவதில் 'தடா' விதிக்கும் பெற்றோர்களா நீங்கள்...? இந்த விஷயத்தில் சற்று யோசிப்பது நல்லது.
சிறார்களுக்கு இனிப்பு பண்டங்களையும், பானங்களையும் தருவதால், அவர்களது நினைவாற்றல் திறன் பெருகும் என்றும், கூர்மையாக கவனிக்கும் திறன் உயரும் என்றும் மருத்துவ ஆய்வு ஒன்று கூறுகிறது.
இதுபற்றி, பிரிட்டன் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அதன் முடிவில், 'மற்ற உறுப்புகளைப் போன்று சக்தியை மூளையானது சேமித்து வைத்துக்கொள்ளாத காரணத்தால், அதனை நேரடியாக இரத்தத்தில் இருந்து எடுத்துக்கொள்கிறது. எனவே, ஐந்து முதல் 10 வயதுக்குள் உள்ள குழந்தைகளுக்கு பெரியவர்களை விட இரு மடங்கு அளவில் குளுகோஸ் தேவைப்படுகிறது' என்பது தெரியவந்துள்ளது.
இந்த காரணத்தால், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு மிதமான அளவில் இனிப்பு பண்டங்களைக் கொடுக்க வேண்டும். மாறாக, அதிக அளவில் கொடுத்தால், உடல் பருமன் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் என்று ஆய்வாளர்கள் அறிவுறுத்துவதாக, பிரிட்டனில் இருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குளுகோஸ் உட்கொள்ளும் குழந்தைகளின் நினைவாற்றல் திறன் மிகுதியாக இருப்பது, ஆய்வின் மூலம் அறியப்பட்டுள்ளதாகவும் அந்தத் தகவல் தெரிவிக்கிறது.
அதேநேரத்தில், ஆரோக்கியமான காலை மற்றும் மதிய உணவுகளை குழந்தைகளுக்கு அளிப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்கின்றனர், ஆய்வாளர்கள்.
Friday, August 1, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment