Tuesday, July 22, 2008

தண்ணீருக்குள் நிகழும் சுக பிரசவம்!

பெண்களை பொருத்தவரை பிரசவம் என்பது ஒரு மறுபிறவி மாதிரி.

ஆனால், இன்றைய காலக்கட்டத்தில் இதை பெரும்பாலான மருத்துவர்களே கூட உணர்வதில்லை.

பிரசவ வலி என்று போனாலே, பெரும்பாலான மருத்துவர்கள் உடனடியாக அறுவைச் சிகிச்சையில் இறங்கிவிடுகின்றனர் என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதனால், பாதிக்கப்பட்ட பெண்கள் வாழ்நாள் முழுவதும் பல்வேறு உடல்நல பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர்.

அறுவைச் சிகிச்சையின் போது ஏற்படும் கவனக்குறைவுகள் காரணமாக, குழந்தையும் ஊனம் அல்லது குறைபாடுகளுடன் பிறக்கும் அபாயம் நேரிடுகிறது.

மருத்துவத்தை சேவையாக கருதாமல் வணிக நோக்கில் செயல்படும் ஒரு சில மருத்துவர்களால், இதுபோன்ற களங்கம் ஏற்பட்டுவிடுகிறது.

ஆனால், 'தண்ணீருக்குள் பிரசவம்' என்ற நவீன முறையில் இதுபோன்ற தொல்லைகள் இல்லை.

இந்த முறையின்படி, கர்ப்பிணி பெண்கள் இளம் சூடான தண்ணீருக்குள் அமரவைக்கப்பட்டு, பிரசவம் நிகழ்கிறது.

இதனால், 80 சதவீதம் பிரசவ வலி நீங்கி, அந்த பெண்கள் மிகவும் எளிதாக ஆரோக்கியமான முறையில் குழந்தைகளை பெற்றெடுக்கின்றனர்.

"பொதுவாக, தண்ணீருக்கும் இருக்கும்போது, உடல் உறுப்புக்களுக்கு நெகிழ்வுத்தன்மை அதிகம் என்பதால், வலி இல்லாத இந்த சுகப்பிரசம் சாத்தியமாகிறது" என்கிறார் புதுடெல்லி ஃபீனிக்ஸ் மருத்துவமனையை சேர்ந்த பிரபல மகப்பேறு மருத்துவர் ஊர்வசி சேஹால்.

0 comments: