Tuesday, July 22, 2008

கோதுமை ரவை மசாலா உப்புமா

இது பேச்சுலர்ஸ் எளிதில் செய்யகூடியது. இதில் மாசாலா சேர்ப்பதலால் சுவை நன்றாக இருக்கும்.

தேவையானப் பொருட்கள்
கோதுமை ரவை - 1 கப்
பச்ச மிளகாய் - 2
வெங்காயம் - 1
பச்ச பட்டானி - 2 தே.க
தக்காளி - 1
பூண்டு - 1
உப்பு - தேவைகேற்ப்ப
தாளிக்க
-----------
எண்னெய் - 1 தே.க
கடுகு - 1/2 டீ ஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 1/4 டீ ஸ்பூன்
கடலை பருப்பு - 1/4 டீ ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 1
கறிவேப்பிலை - கொஞ்சம்

செய்முறை
வானலியில் எண்னெய் விட்டு தாளிக்க வேண்டியவற்றை போட்டு தாளித்த பிறகு
வெங்காயம் (நீட்டமாக ) கட் செய்து போடவும், அது லைட்டா வதங்கிய பிறகு தக்காளி துண்டுகளை போட்டு வதக்கி பிண் பச்சை பட்டானியை சேர்க்கவும். எல்லாம் ஐந்து நிமிடம் வதக்க வேண்டும். பின் 3 கப் தண்ணிர் விட்டு கொதிக்க விட வேண்டும்.
தண்ணிர் கொதிக்க ஆரம்பிதவுடன் ரவையை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிளறிகொண்டே முழுவதும் போட்டு உப்பையும் போட்டு அடுப்பை ஸிம்மில் வைத்து மூடி போட்டு 10 நிமிடம் வைக்கவும்.
பிறகு திறந்து வெந்துள்ளதா என்று பார்த்து மேலே கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.
இது தேங்காய் சட்னி நல்ல காம்பினேஷன்.
பூண்டு இல்லாமலும் செய்யலாம்.


குறிப்பு:
இதில் கரம் மசாலா 1/4 டீ ஸ்பூண் சேர்த்தும் செய்தால் நல்ல மனமாக இருக்கும். maggi masala கூட சேர்க்கலாம்.நன்றாக இருக்கும்.

0 comments: