தேவையானப் பொருட்கள்
சப்பாத்தி - 6
பெரிய வெங்காயம் - 1
குடைமிளகாய் - 1
பூண்டு - 3 பல்
ஸ்பிரிங் ஆனியன் - 1
தக்காளி - 1
மிளகாய்தூள் - 3/4 தேக்கரண்டி
டொமேட்டோ சாஸ் - 2 தேக்கரண்டி
மல்லி இலை/புதினா - சிறிதளவு
உப்பு - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 4 தேக்கரண்டி
செய்முறை
சப்பாத்தியை 1சதுர இன்ச் அளவாக நறுக்கி கொள்ளவும்.வெங்காயம், தக்காளி,ஸ்பிரிங் ஆனியன்,பூண்டை பொடியாக நறுக்கி வைக்கவும்.குடைமிளகாயை நீளவாக்கில் இரண்டாக நறுக்கி,பின் குருக்காக,மெல்லியதாக நறுக்கவும்.மல்லி இலை/புதினாவையும் பொடியாக நறுக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், ஸ்பிரிங் ஆனியன்,பூண்டு,குடைமிளகாய் ஆகியவற்றை சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.
பின் மிளகாய்தூள்,தக்காளியை சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.
அதன் பிறகு சப்பாத்தி,உப்பு சேர்த்து வதக்கவும்.
இறுதியாக டொமெட்டொ சாஸ் சேர்த்து 2 நிமிடம் கைவிடாமல் கிளரி,மல்லி/புதினா தூவவும்.
இப்போது சுவையான சில்லி சப்பத்தி ரெடி.சூடாக ஆனியன் ரைத்தாவுடன் பரிமாறவும்.
குறிப்பு:
சப்பாத்தி மீதம் ஆகிவிட்டால் இது போல் செய்து வைத்தால் விரைவில் காலியாகிவிடும். எளிதாகவும் செய்யலாம்,சைடிஷும் செய்யத் தேவையில்லை.
Tuesday, July 22, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment