டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்; குறைந்த அளவிலான பழரசத்தையே பருக வேண்டும்.
பரம்பரை காரணமாக அல்லாமல், வேறு நோய்களால் இன்சுலின் செயல்பாடு பாதிக்கப்பட்டு வரும் டைப் 2 நீரிழிவு நோய்க்கு ஆளானவர்களால் உட்கொள்ளப்படும் காய்கறிகள், பழங்கள் மற்றும் பருகப்படும் பழரசங்கள் ஆகியவற்றால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஆய்வு ஒன்றினை பிரிட்டன் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டனர்.
38 முதல் 63 வயது வரையிலான 71,346 பெண்களிடம் 18 ஆண்டுகளாக திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில், பச்சை இலைகள் கொண்ட காய்கறிகளையும், பழங்களையும் உண்ணும் பெண்களுக்கு நீரிழிவு பாதிப்பு குறைவாகவுள்ளதும், பழரசத்தை மிகுதியாக பருகும் பெண்களுக்கு பாதிப்பு அதிகமாகியிருப்பதும் தெரியவந்துள்ளது.
பழரசத்தில் உள்ள இனிப்பானது திரவ வடிவில் உள்ளதால், அது உடலில் மிக விரைவாக உறிஞ்சிகொள்ளப்படும் என்பதாலேயே, டைப் 2 நீரிழிவு பாதிப்புள்ளவர்கள் குறைந்த அளவிலேயே பழரசத்தை பருக வேண்டும் என்கின்றனர், ஆய்வாளர்கள்.
Tuesday, July 22, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment