Sunday, July 13, 2008

மாதுளை ஸ்பெஷல் !

மாதுளை மிதவெப்பமண்டலப் பழவகை மரமாகும். இதன் தாயகம், மேற்கு ஆசியப் பகுதிகளும், தெற்கு ஐரோப்பியப் பகுதிகளுமாகும். இம்மரம் 10 முதல் 20 அடி உயரம் வளரக்கூடியது. பழம் தரும் மரவகைகளில், மாதுளை சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது. இதன் தாவரஇயல் பெயர், `பியுனிகா கிரேநேட்டம்' புயூனிகேசியே தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது.

பன்மொழிப்பெயர்கள்: மாதுளம்பழத்தின் ஆங்கிலப் பெயர் `பொமே கிரேநெட்' ஆகும். இந்தியில் அனார், தெலுங்கில் நிம்பபண்டு, கன்னடத்தில் தாளிம்பொ, மலையாளத்தில் மாதளா, மராத்தியில் தாளிம்செ, குஜராத்தியில் தாதம்னா, ஒரிய மொழியில் தாளிம்பா, வங்காளியில் தரீம், அசாமியில் தாளிம் என்று பெயர்கள் வழங்கப்படுகின்றன.

மாதுளையும் அனார்கலியும்: மாதுளம் பழத்திற்கு இந்தியில், `அனார்' என்று பெயர். இக்கனியின் பெயரையே அனார்கலிக்கு அவள் பெற்றோர் சூட்டினர். இந்திய நாட்டில் அனார்கலி, சலீம் காதல் பிரசித்தி பெற்றதாகும். இது வரலாற்றுச் சிறப்புடையது' என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் பெயர் வந்த விதம்: பெண்களின் உள்ளம் கவர்ந்த கனி ஆதலின், இக்கனிக்கு `மாதுளங்கனி' என்று தாவர இயல் வல்லுனர்கள் தமிழில் இதற்கு பெயர் சூட்டினார்கள்.

தமிழில் வேறு பெயர்கள்: தமிழில் மாதுளைக்கு, அருள்மரம், இருசகம், உருண்டை நீர்ப்புட்பி, கோவர்த்தனம், சிவப்பு சந்தானிகம், சுகாசனம், சுகவல்லம், தசன பீசம், தித்திப்புப்பாலை, நறுமாதுளம், மதலைமா சகி, மாதுலங்கம், மாதுலிங்கம், விருத்தபலம் முதலிய வேறு பெயர்கள் உள்ளன.

சத்துப்பொருட்கள்: நூறு கிராம் மாதுளம் பழத்தில் கீழ்க்கண்ட அளவுகளில் சத்துப் பொருட்கள் உள்ளன. புரதம் 1.6 கிராம், கொழுப்புச்சத்து 0.1 கிராம், நார்ப்பொருள் 6.1 கிராம், மாவுப் பொருள் 14.5 கிராம், கால்சியம் 10 மி.கி., மெக்னீசியம் 70 மி.கி, சோடியம் 0.9 மி.கி, இரும்புச்சத்து 0.3 மி.கி, குளோரின் 2 மி.கி, கலோரி 65ஐ யூ. கிலோ கலோரி, தயாமின் 0.06 மி.கி, நியாசின் 0.3 மி.கி, வைட்டமின் `சி' 16 மி.கி. ஆகியன அடங்கியுள்ளன.


வகைகள்: மாதுளம்பழத்தில், பாபூல், வெள்ளோடு, ஊத்துக்குளி, பேப்பர்ஷெல், கணேஷ் முதலிய வகைகள் அதிக பழங்கள் தரும் உயர் விளைச்சல் வகைகள் ஆகும்.


மாதுளைக்கவிதை: ``உருண்டைப்பேழை ஒன்று மூடியிருக்குது உள்ளே முன்னூறு முத்திருக்குது. திரண்டு வந்திதை திறப்பீர் தித்திக்கும் முத்தென யெடுத்துத்தின்பீர்''
என்னும் கவிதை, மாதுளம்பழத்தின் பாங்கை, தித்திக்கும் மாதுளை முத்துக்களை நமக்கு விளக்குகிறது தெளிவாக.


எப்படிச்சாப்பிடலாம்: மாதுளம்பழத்தின் முத்துக்களை தனியாக எடுத்து அப்படியே சாப்பிடலாம். மாதுளம் பழத்தின் மேல் தோலை களைந்து விட்டு, மாதுளை முத்துக்களை மிக்சியிலிட்டு, சாறாக்கி, அப்படியே பருகலாம். மிக்சி இல்லாவிடின், ஒரு மெல்லிய துணியில், மாதுளை முத்துக்களை வைத்து முடிந்து, பிழிந்தால் சாறு தனியாக வரும். இதைக் குடிக்கலாம். சாறு, சாஸ், ஜாம், காண்டி தயாரித்து பயன்படுத்தலாம். ஃபுரூட் சாலட், பஞ்சாமிர்தம் இவைகளில் மாதுளை முத்துக்களைச் சேர்க்கலாம். இதன் சாறு, கேச், மிட்டாய், சாக்லேட், கேசரி, பர்பி, அல்வா, அப்பம், பாயசம், பாதுஷா அதிரசம், ஜாங்கிரி முதலியன செய்ய ஒரு அங்கமாக சேர்த்து உண்ணலாம்.

பொதுப்பயன்கள்: இதன் சாறு சாஸ், சிரப், ஜாம், கரண்டி, கேக், சாலட், பஞ்சாமிர்தம், பலவகை பண்டங்கள் செய்ய பயன்படுகிறது. கொதித்து ஆறவைத்த பாலுடன், மாதுளஞ்சாறு சேர்த்து, ``மாதுளை கீர்'' தயாரித்து குடிக்கலாம். மாதுளம் பழம் பல மருத்துவக்குணங்கள் கொண்டது. அஜீரணமகற்றி பசிதூண்டி. சளித் தொல்லையை குணமாக்கும். உடம்பை பளபளப்பாக பராமரிக்கும். தாகத்தைத் தணிக்கும். பித்தம் போக்கி. குடல் கோளாறுகளை நீக்கும். இரத்த அழுத்த நோய்க்கு எளிய மருந்து. ஆண்மலட்டுத்தன்மையைப் போக்கும். சீதபேதியை குணமாக்கும். கல்லீரலை நன்கு இயங்கச் செய்யும். இரத்த விருத்தி செய்யும்.

மருத்துவப்பயன்கள்:
ே மாதுளம் பழச்சாறு அருந்தினால், அஜீரணக் கோளாறுகள் நீங்கி, நன்கு பசி ருசி உண்டாகும்.

ே சளித்தொல்லையால் அவதிப்படுபவர்கள், மாதுளஞ்சாறுடன் சிறிது மிளகுத்தூள் சேர்த்து குடித்து வர, சளித்தொல்லை முற்றிலும் குணமாகும்.

ே அடிக்கடி மாதுளம்பழச்சாறு குடித்துவர மேனியை நன்கு பளபளப்பாக வைக்கும். சருமநோய்கள் வராது காக்கும்.

ே இச்சாறுடன், எலுமிச்சை சாறு, தேன் கலந்து பருகினால் பித்தம் மொத்தமாக விலகும்.

ே கோடையில் ஏற்படும் நாவறட்சி, அதிக தாகம் தணிய மாதுளம் பழச்சாறு குடிக்கவும். உடலுக்கு நன்கு குளிர்ச்சியையும் ஏற்படுத்தும்.

ே மாதுளம் பழத்துடன், ஊறவைத்த வெந்தயத்தைச் சேர்த்து, மென்று தின்றால், குடல் கோளாறுகள் குணமாகும்.

ே இரத்த அழுத்த நோய் உள்ளவர்கள், மாதுளஞ்சாறு பருகி வர, இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.

ே மாதுளம் பழச்சாறு குடித்து, ஒரு செவ்வாழைப் பழம் தின்று வர, ஆண் மலட்டுத்தன்மை நீங்கும். விந்து உற்பத்தியையும், மொபிலிட்டியையும் அதிகரிக்கச் செய்யும்.

ே மாதுளைச் சாறுடன், வெங்காயச்சாறு, தேன் கலந்து குடித்துவர, சீதபேதி குணமாகும்.

ே மாதுளம் பழச்சாறுடன் சிறுது சீரகப் பொடியைச் சேர்த்து, தினம் இருவேளை சாப்பிட்டு வர, கல்லீரல் கோளாறுகள் நீங்கி நலன் பயக்கும்.

ே திராட்சை சாறுடன், மாதுளம் பழச்சாறு சம அளவில் கலந்து குடித்து வர, இரத்த சோகை நோய் குணமாகி, இரத்த விருத்தி ஏற்படும்.

ே தசைகளை நன்கு இயங்கச் செய்யும் தன்மை, மாதுளம் பழத்திற்கு உண்டு என சித்தர்கள் கூறியுள்ளார்கள்.

ே மாதுளம் பழத்தோலையும், நெல்பொரி, வெல்லம் இவைகளையும் சேர்த்து கஷாயம் செய்து பருகி வர, குண்டுடம்பு மெலிந்து, உடல்வாகு நடுநிலை அடையும். இது பக்கவிளைவில்லா இயற்கை மருந்தாகும்.

ே மாதுளம்பழ முத்துக்களை நன்கு மென்று தின்றால் விக்கல், வாந்தி விலகும்.

ே நெஞ்செரிச்சல், காதடைப்பு இவைகளை குணப்படுத்தும் ஆற்றல் உள்ளது மாதுளம் பழம்.

ே மாதுளை முத்துக்களை, விதையோடு நன்கு மென்று தின்றால், மலச்சிக்கலைப் போக்கும்.

ே மலத்துடன், இரத்தம் கசிவதை குணப்படுத்தும் தன்மை மாதுளஞ்சாற்றுக்கு உண்டு.

ே மாதுளஞ்சாறு பருகி வர, முதியோர்க்கு நினைவாற்றல் அதிகரிக்கும்.

ே மாதுளஞ்சாறுடன் ஆப்பிள்சாறு சேர்த்துப் பருகினால், மன இறுக்கம் குறையும்.

ே சிறுநீர் பிரியாமல் அவதிப்படுபவர்கள், மாதுளம்பழச்சாறு குடித்துவர, சிறுநீர் நன்கு பிரியும்.

0 comments: