Monday, July 14, 2008

நெகிழவைக்கும் நெல்லிக்காயின் பயன்? (Gooseberry)

ஒரு ஆரஞ்சுப் பழத்தில் இருக்கும் வைட்டமின் `சி'யின் அளவைப்போல் இருபது மடங்கு வைட்டமின் சத்தைக் கொண்டது நெல்லிக்காய். இதைவிட நெல்லிக்காய் சாப்பிடுங்க அப்படின்னு நான் உங்களுக்கு எடுத்துச் சொல்ல வேறெதாவது காரணம் தேவைப்படுமா? இன்னொரு அற்புதமான விஷயம் என்னவென்றால், மற்ற இயற்கை உணவுகளைப்போல் இல்லாமல் நெல்லிக்காயை சமைத்து உண்டாலும் அதனுடைய சத்து சமைப்பதனால் குறைவதே கிடையாது.

கொழுப்புச்சத்து உடலிற்குத் தேவையான ஒன்று. மனிதனுடைய ஈரல் இந்த கொழுப்புச் சத்திற்கு அடிப்படையாக அமைவது. உடலிற்குத் தேவைப்படாத அதிகப்படியான கொழுப்புச்சத்து இரத்தக் குழாய்களில் படிய ஆரம்பிக்கும். இதுதான் மாரடைப்பு ஏற்பட காரணமாகிவிடுகிறது. நெல்லிக்காயில் இருக்கும் வைட்டமின் `சி' இரத்தக் குழாய்களில் படிந்திருக்கும் கொழுப்புச் சத்துக்களை சுலபமாக கரைத்துவிடும். மாரடைப்பைத் தவிர்க்கலாம்.

நெல்லிப்பொடி + சர்க்கரைத் தூள் தினமும் வெறும் வயிற்றில் தண்ணீரில் கரைத்துப் பருகி வர, உடம்பில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்கலாம். சர்க்கரை நோயால் அவதிப்படுகிறவர்கள் நெல்லிப்பொடி + சர்க்கரை + பாகற்காய் பொடி 2 அல்லது 3 முறை ஒரு நாளைக்கு சாப்பிட்டு வர முன்னேற்றம் தெரியும்.

அசிடிடி உள்ளவர்களுக்கும் நெல்லி ஒரு சிறந்த நிவாரணி. ஏன் முடி வெள்ளையாக மாறி வருகிறது என்று கவலைப்படுபவர்கள், நெல்லிப்பொடியை ஒரு இரும்புக் கின்னத்தில் போட்டு தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்தால் ஷாம்பு + கண்டிஷனர் + ஹேர்டை தயார்!

0 comments: