Monday, July 14, 2008

சிக்கன் ஆம்லெட் !

தேவையானப் பொருட்கள்
சிக்கன் - 100 கிராம்
முட்டை - 2
இஞ்சி,பூண்டு பேஸ்ட் - 1/2 தேக்கரண்டி
மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
உப்பு - சிறிதளவு
எண்ணெய் - 1 அல்லது 2 தேக்கரண்டி

செய்முறை
முதலில் சிக்கனை மிக பொடியாக கட் செய்து கொள்ள வேண்டும்.
வாணலியில் 1 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி நன்கு சூடானதும் இஞ்சி,பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி,பிறகு சிக்கனை சேர்த்து வதக்கவும்.
சிக்கன் கலர் மாறியதும் உப்பு சேர்த்து வதக்கி மூடி வைத்து சிம்மில் 7 - 10 நிமிடம் வேக விடவும்.
இறுதியில் முளகுத்தூள் சேர்த்து இறக்கி வைக்கவும்.
மற்றொரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து,சிறிது உப்பு சேர்த்து ஊற்றி நன்றாக அடித்துக் கொள்ளவும்.
பின் அதில் வேக வைத்திருக்கும் சிக்கனை சேர்த்துக் கலக்கி தோசை கல்லில் ஆம்லெட் போல ஊற்றி,சிறிது எண்ணெய் ஊற்றி, மிளகுத்தூள் தூவி வேக விடவும்.
பின் திருப்பிப் போட்டு மற்றொரு புறமும் வேக விடவும்.
இப்போது சுவையான சிக்கன் ஆம்லெட் ரெடி.
குறிப்பு:மேற்கூறிய அளவில் 2 அல்லது 3 ஆம்லெட் செய்யலாம்.

0 comments: