தேவையானப் பொருட்கள்
சிறிய மாவடுகள்- 2 கிலோ
விளக்கெண்ணெய்- 200 மி.லி
கடுகு- 100 கிராம்
தேவையான கல் உப்பு
விரலி மஞ்சள்-2
மிளகாய் வற்றல்-100 கிராம்
செய்முறை
மாவடுகளை சிறிய அளவு மட்டுமே காம்பு வைத்து அவற்றின் நீளமான காம்புகளை வெட்டியெடுத்து, நன்கு அலசிக் கழுவி, பின் ஈரம் போக துடைக்கவும்.
விளக்கெண்ணெயை அவற்றின் மீது பரவலாகத் தடவி 2 மணி நேரம் ஊறவைக்கவும்.
விரலி மஞ்சள், மிளகாய் வற்றல், கடுகு அனைத்தையும் பொடித்து உப்புடன் கலந்து, பிறகு மாவடுகளில் கொட்டி நன்கு கலக்கவும்.
இவற்றை ஒரு பெரிய கல் சட்டி அல்லது மாச்சட்டியில் போட்டு தினமும் இரண்டு தடவை குலுக்கி விட்டு நன்கு ஊறவிடவும்.
Monday, July 14, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment