Monday, July 14, 2008

மஷ்ரும் வறுத்த மசாலா

தேவையானப் பொருட்கள்
பட்டன் மஷ்ரும் =1/4கி
சின்னவெங்காயம் =15
தக்காளி =3
சீரகம் =1ஸ்பூன்
சோம்பு =1ஸ்பூன்
வரமிளகாய் =4
மல்லி [தனியா] =1தேக்கரண்டி
மிளகு =1தேக்கரண்டி
பட்டை =1
அன்னாசிப்பூ =1
பூண்டு =6பல்
இஞ்சி =1சின்ன துண்டு ம.பொடி =1/4ஸ்பூன்
எண்ணை =2தேக்கரண்டி
உப்பு =தேவையானது

செய்முறை
வெங்காயம், தக்காளி இரண்டையும் தனித்தனியே அரைத்து எடுக்கவும்.
மிளகாய், மிளகு, தனியா, பட்டை, அன்னாசிப்பூ, பூண்டு, இஞ்சி, சீரகம், சோம்பு ஆகியவற்றை மைய்ய அரைக்கவும். கடாயில் எண்ணை விட்டு அரைத்த வெங்காயம், உப்பு போட்டு சிறிது வதக்கி தக்காளி போட்டு வதக்கி, அரைத்த மசாலா, ம.பொடி போட்டு சுருள வதக்கி எண்ணை மிதந்து வரும்போது காளானை இரண்டாக[அ]நான்காக நறுக்கி போட்டு சிறுதீயில் கிளறும்போது தண்ணீர் விட்டு வரும். காளான் வெந்து மசாலா திக்கானதும் இறக்கவும்.

0 comments: