Monday, June 30, 2008

தோற்றுப் போவதற்காகவே...


தோற்றுப் போவதற்காகவே வயிறுமுட்டக்
குடித்துவிட்டு சாலையோரம் விழுந்து கிடக்கிறாய் நீ
இன்று உன் சம்பள நாளாய் இருக்கக்கூடும்
இல்லையுன் வாடிக்கையாயும் இருக்கக்கூடும்
நீ விழுந்து கிடப்பாய் எனத் தெரிந்தும்
நிறைவேறாத ஆசைகளின் ஏக்கங்களுடன்
முட்டாள்த்தனமாய் வாசல் பார்த்து காத்திருப்பாள் உன் மனைவி
இன்றாவது அப்பாவுடன் சேர்ந்து சாப்பிடலாம் என காத்திருக்கும்
மகனைப்பற்றியோமுதல் மதிப்பெண் அட்டையுடன்
கையெழுத்திற்காக காத்திருக்கும் மகளைப்பற்றியோ
உனக்கென்ன அக்கறை இருக்கக்கூடும்?
வழமை போலவே இந்த உறக்கத்தின் முடிவிலும்
மீண்டும் ஒரு ஞானோதயம் தோன்றலாம்
நாளை மாலை உன் தேடுதலில் மீண்டும்
தோற்றுப் போவதற்காகவே!

0 comments: