Tuesday, July 1, 2008

இளம் பெண்களுக்கு பலன் தரும் வெண்பூசணி !

பூப்படைந்த பல இளம் பெண்கள் உடல் மெலிந்த நிலையில் இருப்பது பெற்றோர்களுக்கு கவலை தரும் விஷயம். எவ்வளவு சத்தான உணவுகள் கொடுத்தாலும் பல பெண்களுக்கு உடல் பொலிவு பெறுவதில்லை.

இதுபோன்ற உடல்வாகு கொண்ட பெண்கள், உணவில் அடிக்கடி வெண்பூசணியை சேர்த்து வர வேண்டும்.

இதுதவிர, பசும்பால் மற்றும் பூசணிச் சாறு ஆகியவற்றை சமவிகிதத்தில் கலந்துக் கொள்ளவும். இதனுடன் தேவையான அளவு கற்கண்டு சேர்த்து, மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். நீர் வற்றியதும் லேகியம் போல் இருக்கும்.

இதை சேகரித்து வைத்துக்கொண்டு, இளம் பெண்கள் தினமும் காலை, மாலை என இருவேளையும் சாப்பிட்டு வந்தால், சில வாரங்களில்யே உடம்பில் சதை பிடித்து பார்ப்பதற்கு ஆரோக்கியமாக, அழகாக தோன்றுவர்

0 comments: