Wednesday, July 2, 2008

சமையல் டிப்ஸ்



சப்பாத்தி மாவில் எண்ணெய், உப்பு சேர்த்து, வெந்நீரை ஊற்றி பிசைந்து சிறிது நேரம் ஊற வைத்து பிறகு சப்பாத்தி செய்தால் சப்பாத்தி மிகவும் மிருதுவாக இருக்கும். கீரை, கேரட், பீட்ரூட் போன்றவற்றின் சாற்றினை மாவில் பிழிந்து விட்டு பிசைந்து, வண்ண வண்ணமாக சப்பாத்திச் செய்யலாம். தோற்றமும் நன்றாக இருக்கும். சத்தும் அதிகமாய் இருக்கும்.


பெரும்பாலும் சிற்றுண்டி வகை உணவுகள் தானியங்களைக் கொண்டு அல்லது அரைத்த தானிய மாவுகளைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. தானியங்களில் அதிக அளவில் கார்போஹைட்ரேட்ஸ் (Carbohydrates) இருக்கின்றது. புரதம் (Protein), தாதுக்கள் (Minerals), நார்ச்சத்து (Fibre) போன்றவையும் நிறைந்து உள்ளது.

0 comments: