தேவையான பொருட்கள் :
பாசுமதி அரிசி -250 கிராம்,
முளைகட்டிய கொண்டைக்கடலை,
முளைகட்டிய கொள்ளு,
முளைகட்டிய சோளம் - தலா 25 கிராம் (ஊற வைத்து வேக விடவும்),
நெய் - 2 ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு,
முந்திரி, திராட்சை,
வறுத்தது சிறிதளவு.
செய்முறை :
பாசுமதி அரிசியை ஒரு மடங்குக்கு இரு பங்கு தண்ணீர் வைத்து குக்கரில் இரண்டு விசில் விட்டு இறக்கவும். முளைகட்டிய தானியங்களை தேவையான உப்பு சேர்த்து ஆவியில் வேக விடவும். சோளம் வேகாது. அதனால் சோளத்தை 30 நிமிடம் ஊற வைத்து பின்பு எல்லா தானியங்களுடன் சோளத்தையும் சேர்த்து வேக விடவும்.
சாதத்துடன் வெந்த இந்த தானியங்களை நெய் சேர்த்துக் கலந்து கொள்ளவும். மேலே முந்திரி, திராட்சை வைத்து அலங்கரித்துக் கொடுக்கவும். எல்லாவித புரோட்டீன் சத்துக்களும் அடங்கியது இந்த தானிய புலாவ். சுடச்சுடக் கொடுத்தால் குழந்தைகள் ரசித்துச் சாப்பிடுவார்கள்
Saturday, July 12, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment