பெண்கள் கோடைக் காலத்தில் வெளியில் செல்லும் முன்பும், சென்றுவிட்டு வந்த பிறகும் முகத்தைக் குளிர்ந்த நீரில் கழுவி M Refreshing Lotion வைத்து முகத்தைத் துடைக்க வேண்டும். இப்படிச் செய்து வந்தால், முகத்தில் இருக்கும் எண்ணெய்ப் பசை நீங்கும். அதோடு முகத்தில் அழுக்கும் சேர வாய்ப்பே இருக்காது.
à முகத்தில் எண்ணெய்ப் பசை அதிகமாக இருக்கும் பெண்கள், தேங்காய்த் தண்ணீரை சிறிது பஞ்சில் நனைத்து முகத்தைத் துடைத்து வந்தால், முகத்தில் உள்ள தூசு, அழுக்கு, எண்ணெய்ப் பசை நீங்கி முகம் பளிங்கு போல் ஜொலிக்கும்.
à கோடைக்காலங்களில் வெப்பத்தின் கொடூரத்தன்மை அதிகமாக இருப்பதால் பெண்களின் முகத்தில் வறட்சி ஏற்பட்டு சுருக்கங்கள் தோன்றுகின்றன. இதைத் தடுக்க வாரத்திற்கு 2 முறை முட்டையின் மஞ்சள் கருவுடன் சில துளிகள் எலுமிச்சை சாற்றைக் கலந்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் ஊறவிட்டுக் கழுவி வந்தால் முகச் சுருக்கங்கள் மறையும்.
சிலருக்கு முகத்தில் மூக்கு, கன்னம் போன்ற பகுதிகளில் கருப்பு கருப்பாக மச்சம் போல காணப்படும். இதற்கு சந்தனம், சாதிக்காய், வேப்பங்கொழுந்து இம்மூன்றையும் சமமாக எடுத்து நீர்விட்டு அரைத்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவி வர, அந்த கருமைநிறம் தானே மறைந்துவிடும். முகமும் அழகாகத் தோற்றமளிக்கும்
Friday, July 11, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment