இந்த வகை தோசைகள் இரண்டு இரண்டான எண்ணிக்கையில் பரிமாறப்படுவதால் இவற்றை செட் தோசை என்ற பெயரில் அழைக்கப்படுகின்றது.
தேவையானப் பொருட்கள்

பச்சரிசி- மூன்று கோப்பை
புழுங்கலரிசி/parboiled - ஒரு கோப்பை
உளுந்து-முக்கால் கோப்பை
வேகவைத்த சாதம்-அரைக்கோப்பை
வெந்தயம்- ஒரு தேக்கரண்டி
உப்பு-இரண்டு தேக்கரண்டி
ஆப்பச்சோடா- ஒரு சிட்டிகை
எண்ணெய்- தேவையான அளவு.
செய்முறை
பின்பு அவற்றை குறைந்தது நான்கு மணிநேரம் ஊறவைத்து அதனுடன் சாதத்தைச் சேர்த்து மைய்ய அரைக்கவும்.
பிறகு அரைத்த மாவில் உப்பைச் சேர்த்து நன்கு கலக்கி இரவு முழுவதும் புளிக்க விடவும்.
அடுத்தநாளன்று சோடாவைச் சிறிது நீரில் கரைத்து ஊற்றி மாவை நன்கு கலக்கவும்.
அடுப்பில் தோசைக் கல்லில் எண்ணெய் தடவி காயவைத்து ஒரு கரண்டி மாவை எடுத்து ஊற்றி வழக்கமான தோசை அளவை விட சற்று தடிமனாக இருக்குமாறு தோசை வார்க்க வேண்டும்.
தோசை ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பிவிட்டு சுற்றிலும் எண்ணெயை ஊற்றி வேகவைத்து எடுக்கவும்.
செட் தோசைக்கு வடகறி, மீன் குழம்பு, தக்காளி சட்னி போன்றவை பொருத்தமாக இருக்கும்.
0 comments:
Post a Comment