
தேவையானப் பொருட்கள்
பெரிய வெங்காயம் - 4
பெங்களூர் தக்காளி - 3
கொத்தமல்லித்தழை - 1 கைப்பிடி
புதினாத் தழை - 1 கைப்பிடி
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் - 2 சிட்டிகை
மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
சாம்பார் பொடி - 3 டீஸ்பூன்
சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
வெங்காயத்தைப் பொடிப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
தக்காளி, புதினா, கொத்தமல்லித்தழையை அரைத்து வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, பெருங்காயம் தாளிக்கவும்.
பொடியாக நறுக்கிய வெங்காயம், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
நன்கு வதங்கியதும் அரைத்த விழுது, உப்பு, சாம்பார் பொடி சேர்த்து வதக்கி இறக்கும்போது சர்க்கரையை சேர்த்துக் கிளறி இறக்கவும்.
குறிப்பு:
விருப்பப்பட்டால் கரம் மசாலா தூள் சேர்த்துக் கொள்ளலாம்.
0 comments:
Post a Comment