Friday, July 4, 2008

முட்டை பஃப்ஸ்

தேவையானப் பொருட்கள்

உள் வைக்கும் ஸ்டஃபிஙிற்கு
முட்டை - 6 வேக வைத்து பாதியாக்கியது
சின்ன வெங்காயம் - 10
தக்களி - 1/2
கறிவேப்பிலை - 5 இலை
சிக்கன் ஸ்டாக் - 1/2 கியூப்
இஞ்சி &பூண்டு விழுது - 1/2 ஸ்பூன்
மிளகுத் தூள் - 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1 பின்ச்
மல்லித் தூள் - 1/4 ஸ்பூன்
மேலும் பஃப் ஷீட்ஸ் ரெடிமேட் கிடைப்பதை 12 ஷீட் எடுக்கவும்....ஒரு பஃப்ஸுக்கு பாதி முட்டை வைக்க வேண்டும்.

செய்முறை

3 ஸ்பூன் என்னையை காயவைத்து அதில் வெங்காயம்,கறிவேப்பிலை வதக்கி பின் இஞ்சி பூண்டு இட்டு வதக்கி பின் தக்காளி சேர்த்து வதக்கி நன்கு தக்காளி உடைந்து வதங்கியதும் மற்றுள்ள பொடிவகைகளை சேர்த்து மேலும் 3 நிமிடம் வதக்கி பின் வேக வைத்த முட்டையை இட்டு பிறட்டி தீயை அனைக்கவும்....இப்பொழுது இதில் தன்னீர் அதிகம் இல்லாமல் ட்ரையாக இருக்க வேண்டும் இல்லையென்ட்ரால் நன்கு வற்ற வைக்கவும்..

பின் இந்த மசாலாவில் இருந்து பாதிமுட்டையையும் கொஞ்சம் மசாலாவையும் ஒரு ஷீடில் வைத்து ஓரங்களை மடிக்கவும்..இப்படி 12 ஷீட்டையும் செய்து வைக்கவும்..பின் ஓவென் டோஸ்டரில் 30 நிமிடம் வைத்து எடுக்கவும்..அவரவரது ஓவெனின் சூடிர்Kஎற்ப டெம்பெரேசரை செட் செய்து கொள்ளவும்.சூடான சுவையான முட்டை பஃப்ஸ் தயார்..இது கடைகளில் வாங்கும் பஃப்ஸை விட சுவையாக இருக்கும்

0 comments: