மாரடைப்பு, இதய கோளாறுகளால் ஏற்படும் பாதிப்பை தவிர்ப்பதற்கு, கொழுப்பு நீக்கப்பட்ட பாலை தினமும் ஒரு டம்ளர் அளவில் பருக வேண்டும் என ஆய்வு ஒன்று பரிந்துரைக்கிறது.
சர்வதேச ஆராய்ச்சிக்குழு ஒன்று மேற்கொண்ட ஆய்வில், கொழுப்பு நீக்கப்பட்ட அல்லது கொழுப்பின் அளவு குறைக்கப்பட்ட பாலை பருகும் பெரியவர்களுக்கு, அத்தகைய பாலை பருகாதவர்களைக் காட்டிலும் இதய நோய்களுக்கு வழிவகுக்கும் நுரையீரல் இயக்கக் கோளாறு ஏற்படுவதற்கான வாய்ப்பு 37 சதவிகிதம் குறைவு கண்டறியப்பட்டுள்ளது.
பாலில் உள்ள புரதம், வைட்டமின் டி, மெக்னீசியம் மற்றும் கால்சியம் ஆகியவை, இதய ஆரோக்கியத்துக்கு துணை புரிகிறது.
இவை, 45 முதல் 84 வரையிலான 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது என 'அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் நியூட்ரிஷன்' ஜூன் 2006 பதிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sunday, July 20, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment