வசந்திக்கு மிக நீளமான தலைமுடி. சீயக்காயும், பூந்திக்காயும் அரைத்து அவள் தலையில் தேய்துக் கழுவி சாம்பிராணி போட்டு, சீவி சிக்கெடுத்து பார்த்துப் பார்த்து கவனித்துக் கொள்வாள் வசந்தியின் அம்மா.
ஒரு மாதம் வட இந்திய டூர் போய்விட்டு அப்போதுதான் திரும்பியிருந்தேன். பிரசாதத்தோடு வசந்தி வீட்டுக்குப் போயிருந்தேன். வீடே கைளயிழந்து போய்க்கிடந்தது. என்னைக் கண்டதும் வசந்தியின் அம்மா ஓடி வந்து கையைப் பிடித்துக் கொண்டு ``இந்தப் பாவிமக இப்படிப் பண்ணிட்டுப் போயிட்டாளேக்கா... நாம வளத்த புள்ளைக்கு நல்லது கெட்டது நாம சொல்லக் கூடாதாக்கா... அக்கா, அவ தலமயிருக்கு எண்ணெய் வாங்கக்கூட அவன் சம்பளம், கட்டுபடியாகாதேக்கா. அழுத அந்தத் தாய் மனசைப் பார்க்கப் பார்க்க வயிற்றைப் பிசைந்தது எனக்கு. இரண்டு மாதங்களுக்குப் பிறகு பஸ் ஸ்டாப்பில் யதேச்சையாய் வசந்தியையே பார்க்க நேர்ந்தது.
முதலில் அவளை அடையாளம் காண்பதில் ஏற்பட்ட சிரமத்திற்குக் காரணம் அவளது தலைமுடி.
தோளோடு வெட்டப்பட்டுக் காற்றில் அலைபாய்ந்து கொண்டிருந்தது.
ஓடிவந்து கையைப் பிடித்துக் கொண்டவள் ``நல்லாருக்கீங்களா ஆண்ட்டி... எங்கம்மாவ பாத்தீங்களா? நல்லாருக்காங்களா... நானும் இப்ப வேலைக்குப் போறேன். ரொம்ப சௌக்கியமா இருக்கேன்னு அம்மாகிட்ட சொல்லுங்க! என்னோட தலைமுடியப் பத்தித்தான் ரொம்பக் கவலைப்பட்டு எல்லார்கிட்டயும் சொல்லிக்கிட்டிருந்தாங்களாம். இனிமே கவலைப்படாம இருக்கச் சொல்லுங்க!
என் மனசுக்குப் பிடிச்ச வாழ்க்கைய நான் தேர்ந்தெடுக்க எனக்கு உரிமையில்லையா... கல்யாணம் பண்ணிக்கப் போற புருஷன் பணக்ககாரனா மட்டும் இருந்தா போதுமா..? பணக்கார வீட்டுல ஒரு குடிகாரனுக்கோ, பெண்ணடிமைக்காரனுக்கோ ஒரு பொம்மையாய் வாழறத விட, நானே தேர்ந்தெடுத்த இந்த வாழ்க்கைக்காக போராடறதிலயும் சவால்களைச் சந்திக்கறதும் எனக்குப் பிடிச்சிருக்கு. அம்மாவும் சீக்கிரமே என்னைய புரிஞ்சுப்பாங்க. ஏன்னா அவங்களும் ஒரு பணக்கார பெண்ணடிமைவாதியோட பொண்டாட்டியாச்சே...'' வசந்தி சொல்லச் சொல்ல இந்தக் காலப் பெண்கள் புத்திசாலிகள்... என்று நினைத்துக் கொண்டேன்!
Saturday, July 12, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment