Tuesday, July 1, 2008

சிறு பறவையின் வரவென

சலனமற்ற பிற்பகல் ஆகாயத்தில்
சிறு பறவையின் வரவென
சீறிச் செல்கிறது
பல அதிர்வுகளை உண்டாக்கும்
உன் நிகழ்வு
கீறிக் கொண்டேயிருக்கிறது
கலைந்து வானில் கவிதைகள்
நீ விட்டுச் சென்ற வாசனையும்
யோசனையும்
அளவற்ற வலிகளுடன்
அலையும் வானம்
கூர் நகங்களற்ற பறவை தேடி
சதா இரத்தம் வழியவிட்டு
பொழிகிறது ஒரு மழை

0 comments: