தேவையானப் பொருட்கள்
சப்பாத்தி - 6

பெரிய வெங்காயம் - ஒன்று
ஸ்பிரிங் ஆனியன் - கால் கப்
பச்சை மிளகாய் - 2
துருவிய கேரட் - கால் கப்
துருவிய முள்ளங்கி - கால் கப்
நறுக்கின பீன்ஸ் - கால் கப்
தக்காளி - பாதி
முட்டை - ஒன்று

சிக்கன் மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
மிளகுத்தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - அரை தேக்கரண்டி
எண்ணெய் - 4 தேக்கரண்டி
வெங்காயம், ஸ்பிரிங் ஆனியன், தக்காளி மூன்றையும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
சப்பாத்தியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் அரை தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கி வைத்திருக்கும் பீன்ஸை போட்டு சிறிது உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்கி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
அதன் பின்னர் மீதமிருக்கும் எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் சீரகத்தை போட்டு தாளிக்கவும். அதனுடன் நறுக்கின வெங்காயம், ஸ்பிரிங் ஆனியன், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
பிறகு நறுக்கின முள்ளங்கி, கேரட் மற்றும் வதக்கி எடுத்து வைத்திருக்கும் பீன்ஸை போட்டு 2 நிமிடம் வதக்கவும்.
இந்த காய்கறி கலவையுடன் நறுக்கின தக்காளியை சேர்த்து நன்கு கிளறி விடவும்.
பின்னர் மசாலா தூள் மற்றும் உப்பு சேர்த்து 3 அல்லது 4 மேசைக்கரண்டி தண்ணீர் தெளித்து கிளறி விடவும். அதில் நறுக்கி வைத்திருக்கும் சப்பாத்தியை போட்டு கிளறவும்.

அதனுடன் முட்டையை உடைத்து ஊற்றி கிளறி விட்டு அதில் மிளகு தூள், கொத்தமல்லி தழை சேர்த்து கிளறி இறக்கவும்.
சுவையான ஃப்ரைடு சப்பாத்தி ரெடி. இதனுடன் கோஸ், குடைமிளகாய் மற்றும் வேக வைத்த பட்டாணி சேர்த்தும் செய்யலாம்.
1 comments:
Nice one. thanks for it.
Post a Comment