நான் வெஜ் அடிக்கடி செய்பவர்களாக இருந்தால் இஞ்சி&பூண்டை விழுதாக்கி உப்பு,மஞ்சள் சேர்த்து 1 மாதம் வரை ஃப்ரிட்ஜில் வைக்கலாம்.என் ஆன்டி நான் வெஜ்ஜுக்கு செய்யும் மசாலாவை வதக்கி பாக்கெட் போட்டு ஃப்ரிட்ஜில் மாதக்கணக்கில் வைப்பார்கள். தேவைக்கு 1 பாக்கெட் மசாலாவும் சிக்கன் சேர்த்து கிளறி மூடியிட்டு விட்டு போனால் போதும்சமைப்பதை விட கஷ்டம் என்ன செய்யலாம் என்று யோசிப்பது..அதற்கு அதிக நேரம் வேண்டும்..இரவு படுத்தபின் தூங்க நேரம் எடுக்கும் அந்த நேரத்தில் நாளை என்ன சமைக்கலாம் என்ற்ய் யோசித்து வைத்து விட்டு அடுத்த நாள் காலையே எல்லா பொருட்களும் தயாராஇ வைத்து சமைத்தால் 1 மணிநேரம் போதும்
சமையல் வேலை ஈஸியாக முதலில் தேவை கான்ஸன்ட்ரேஷன்.இரண்டாவது சாமான்கள் கைக்கு எட்டும் தூரத்தில் கரைக்டாக இருக்கவேண்டும்.தினமும் உபயோகப்படுத்தும் தாளிப்பு சாமான்களை நமக்கு வலது பக்கமாக அடுப்புக்கு பக்கத்திலேயே வைத்திருக்க வேண்டும்.அஞ்சறைபெட்டி இருந்தால் சௌகரியமாக இருக்கும்.மற்ற சாமான்களை ட்ரான்ஸ்பரன்ட் கண்டைனர்களில் போட்டு வைக்கவேண்டும்.அடுப்பு இருக்கும் இடத்திலிருந்து இரண்டு அடி எடுத்துவைத்தால் எல்லா சாமான்களும் இருக்கவேண்டும். சிலர் நறுக்க வேண்டியவை, அரைக்கவேண்டியவைகளை எல்லாம் முடித்து ரெடியாக வைத்துக்கொண்டு சமைக்க ஆரம்பிப்பார்கள். ஆனால் நான் பெரும்பாலும் பீன்ஸ், அவரை, கொத்தவரை,வெண்டை போன்ற காய்களை மட்டும்தான் நறுக்கி தயாராக வைத்திருப்பேன். மற்றபடி வெங்காயம், ப. மிளகாய், மற்றும் பொடியாக நறுக்க தேவை இல்லாத காய்களை அடுப்பில் பாத்திரத்தை ஸிம்மில் வைத்து அது சூடாவதற்குள் வெங்காயம் நருக்குவேன். கடுகு வெடித்து வெங்காயம் வதங்குவதற்குள் காயை நறுக்கி விடுவேன்.....இது கொஞ்சம் அனுபவத்தில்தான் வரும்.மற்ற சாமான்களை போட்டு வதங்கும் நேரத்தில் மிக்ஸியில் அரைக்கவேண்டியதை அரைத்துவிடலாம்.என்னமோ மேஜிக் செய்வது மாதிரி இருக்கிறதா?இன்னுமொரு முக்கியமான விஷயம் இப்ப மூன்று பர்னர் அடுப்பு கிடைக்கிறது. எக்சேஞ்ச் ஆஃபரில் கூட கொடுக்கிறார்கள். அதை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். ரைஸ் குக்கர் இருந்தால் அதையும் யூஸ் பண்ணலாம்.சமையல் கலையில் பிகினர்ஸ் எல்லாம் முதல் நாளே காய்களை வாங்கி நருக்கி ஃபிரிஜில் வைக்கலாம். அரைக்க வேண்டியவைகளை அரைத்து ஃபீஸரில் வைக்கலாம்.நல்ல பழைய ( பிடித்தவர்கள் புதிய பாடலையும் கேட்கலாம் ) பாடல்களை போட்டுவிட்டு மனதை ஒருநிலைப்படுத்தி அதில் லயிக்கவிட்டு சமையலை ஆரம்பித்தால் பிறகு ஒருமணி நேரத்திற்கு மேல் அங்கு என்ன வேலை?.....சும்மாவா சொன்னாங்க? ஆடிப்பாடி வேலை செஞ்சா அலுப்பிருக்காது.....சமையல்வேலை சுலபமாக எனக்கு தெரிந்த ஒரேவழி கான்ஸன்ட்ரேஷன்....கான்ஸன்ட்ரேஷன்...
அவசரத்துக்கான ஆபத்பாந்தவன்கள் யாருன்னு பார்த்தா, பொடிகள், தொக்குகள், இன்ஸ்டன்ட் மிக்ஸ் இதெல்லாம் தான். வீட்ல சும்மா இருக்கும் போது இதையெல்லாம் ரெடி செஞ்சுகிட்டா போதும். பருப்புப்பொடி, கருவேப்பிலை பொடி, இட்லிபொடி, புளிகாய்ச்சல், தக்காளி தொக்கு, கொத்தமல்லி தொக்கு, புதினாதொக்கு இதெல்லாம் ப்ரிட்ஜ்ல ரொம்ப நாளைக்கு வைக்கலாம். ரவா இட்லி, ரவா தோசை, பெசரட்டு இதுக்கெல்லாம் இன்ஸ்டன்ட் மிக்ஸ் செஞ்சு வைச்சுக்கலாம்.
இஞ்சி, பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய் பேஸ்ட்ன்னு செஞ்சு வைச்சா சமைக்கும் போது ஈசியா இருக்கும். புளி கூட வாரத்திற்கு ஒரு தடவை ஊறப்போட்டு கெட்டியா கரச்சு, லேசா கொதிக்க வைச்சு எடுத்து ப்ரிட்ஜ்ல வைச்சுகிட்டா வேணும் போது சாம்பார்,ரசம்,குழம்புக்கு யூஸ்சாகும்.
தேங்காயை முதல் நாளே உடைத்து கட் பண்ணி பாக்ஸில் போட்டு பிரிஜில் வைத்துப்பேன் இது 2 நாளைக்கு வரும் பால்,துறுவல் இப்படி எனக்கு எடுத்து தேவை படுதோ அதுக்கு உடனே எடுக்க வசதியா இருக்கும்....இங்சி,பூந்தை பேஸ்ட் பண்ணி டப்பாவில் போட்டு வைத்துப்பேன்...எப்போதும் என் பிர்ஜில் தயிர் ரெடியா இருக்கும்...
கறி,காய்கறிகளை பால்தீன் கவரில் போட்டு வைதுப்பேன்..கறி வகைகளை மொத்தமாக கிளீன் பண்ணி என் குடும்பத்துக்கு தேவையான அளவை எடுத்து அவைகளை தனி தனி கவரில் போட்டு வைத்துப்பேன்..சமைக்க ஆரம்பிக்குறப்ப ஒரு கவரை மட்டும் எடுத்தால் போதுமானது..மொத்தமா எடுத்து பிய்த்து அதோட போராட வேண்டிய அவசியம் இல்லை....
தேங்காய் அரைக்குறப்ப கொஞ்சம் அதிகமாகவே அரைத்து வைத்துப்பேன்..கசகசாவும் அப்ப்டிதான் அவைகளை பிரீஜரில் வைத்தால் தேவைக்கு எடுத்துக்கலாம்..அதிலும் நமக்கு ஒரு வேலைக்கு எவ்லோ தேவைன்னு நமக்கே தெரியும் சோ அதையும் தேவையான அளவுகளாக உருண்டை பிடித்து போட்டுப்பேன்..எடுக்குறப்ப ஒரு உருண்டையை மட்டும் எடுத்தால் போதமானது...இதெல்லாம் ரெடி ஆனால் போதுமே காலை டீ போடுறப்பவே தாளிச்சும் போட்டுடலாம்...
Monday, June 30, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment