Sunday, July 6, 2008

சிறுவயது மன அழுத்தமே அலர்ஜிக்கு காரணம்: ஆய்வு

ஒருவருக்கு ஒவ்வாமை ஏற்பட பல காரணங்கள் இருக்கலாம். மரபு வழி, உணவு முறை, தீய பழக்கங்கள் போன்றவற்றால் பெரும்பாலான ஒவ்வாமைகள் ஏற்படுகின்றன.

இந்நிலையில், ஒவ்வாமை ஏற்படுவதற்கான புதிய காரணம் ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

அதன்படி, சிறுவர், சிறுமியராக இருக்கும்போது ஏற்படும் மன அழுத்தங்களும் பிற்காலத்தில் அவர்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துகிறதாம்.

அதாவது, சிறு வயதில் வீட்டில் நிகழும் மிகவும் கோரமான அல்லது சோகமான சம்பவங்கள், பாலியல் தொல்லைகள், அதிர்ச்சி தரும் சம்பவங்கள், வெளியே சொல்ல முடியாத துயரங்கள், தாய்-தந்தையர் பிரிந்து செல்வது உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் சிறுவர், சிறுமியருக்கும் மன அழுத்தம் ஏற்படுகிறது.

இதனால், ஒரு விதமான வேதிப்பொருட்கள் அவர்களது உடலில் சுரக்க ஆரம்பிக்கிறது.

இதுவே நாளடைவில் அவர்களது உடலில் அலர்ஜியை ஏற்படுத்தும் முக்கிய காரணியாக மாறுகிறது. எனவே, தங்களது குழந்தைகளை மன அழுத்தம் ஆள்கொள்ளாத வகையில் பெற்றோர்கள் கவனிக்க வேண்டும்.

ஒருவேளை அப்படி ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் சென்று முறையான சிகிச்சைகளை அளிக்க வேண்டும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

0 comments: