Sunday, July 6, 2008

கண்ணிலே நீர் எதற்கு?...

சில குழந்தைகளுக்கு அடிக்கடி கண்களில் நீர் வழியும். இதை கவனக்குறைவாக விட்டு விட்டால் பல்வேறு சிக்கல்களை உருவாக்கும். கண்ணீர் வடியும் வழியில் அடைப்பு இருப்பதால், மூக்கின் வழியாக நீர் செல்வதற்கு பதிலாக கண்கள் வழியாக இப்படி வெளியேறும்.

ஒரு வயது குழந்தைகளுக்கு இந்த பிரச்சனை தானாகவே சரியாகிவிடும். பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஏற்பட்டால், கண்கள் மற்றும் மூக்கு பகுதிக்கு இடையே இலேசாக மஜாஜ் செய்தால் சரியாகிவிடும்.

நோய் எதிர்ப்பு சொட்டு மருந்துகளையும் பயன் படுத்தலாம்.அப்படியும் சரியாகவில்லையெனில், 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு சிறிய அளவிலான அறுவைச் சிகிச்சை செய்து குணப்படுத்தலாம்.

வயோதிகம், ஒவ்வாமை, தொற்று நோய், காயம் காரணமாக பெரியவர்களுக்கும் இந்த நோய் ஏற்படலாம். அவர்கள் அறுவைச் சிகிச்சை செய்து இதை குணப்படுத்திவிட வேண்டும்.

தற்போதைய நவீன மருத்துமுறையில் வலியோ, தழும்புகளோ இல்லாமலேயே அறுவைச் சிகிச்சைகளை செய்து குணம் பெறலாம்.

0 comments: