தங்கள் குழந்தைகள் பருமனாகி விடக்கூடும் என்ற அச்சத்தில் சுட்டிகளுக்கு பழச்சாறு கொடுப்பதை பெற்றோர்கள் சிலர் தவிர்ப்பதுண்டு.
ஆனால், நூறு சதவிகித பழச்சாறுக்கும், சிறுவர்கள் பருமனாவதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதை அமெரிக்க ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
லூசியானா மாகாண பல்கலைக்கழகமும், பேலர் மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சியாளர்களும் இணைந்து, மொத்தம் 21 ஆய்வுகளை மதிப்பீடு செய்து பகுத்தாய்ந்துள்ளனர்.
முடிவில், நூறு சதவிகித பழச்சாறுகளால் சிறுவர்கள் பருமனாக மாட்டார்கள் ; மாறாக அவை நல்ல ஊட்டமாகவே திகழ்கிறது என்று தெரியவந்துள்ளது.
எனவே, பெற்றோர்கள் எவ்வித தயக்கமும் இன்றி, தங்கள் குழந்தைகளுக்கு பழச்சாறு தரலாம்.
Sunday, July 6, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment