Sunday, July 20, 2008

சர்க்கரை நோய் ஏற்பட காரணம்

இன்சுலின் என்ற இயக்குநீர் தேவையான அளவு சுரக்காதபோது சர்க்கரை நோய் ஏற்படுகிறது. இது குறைந்த அளவில் சுரந்து, முழுமையாக செயல்படாதபோதும் சர்க்கரை நோய் உருவாகிறது.

அதிக உடல் எடை மற்றும் உடல் உழைப்பு இல்லாதது போன்றவையும் சர்க்கரை நோய் வருவதற்கான முக்கியக் காரணங்களாக அமைகின்றன.

அகோர பசி, உடல் எடை குறைதல், சோர்வு மற்றும் அரிப்பு ஆகியவை சர்க்கரை நோய்க்கான முக்கிய அறிகுறிகள்.

முறையான உணவு பழக்க வழக்கங்கள், உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி ஆகியவற்றின் மூலம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம்

0 comments: