சிலருக்கு தோல் எப்போதும் வறண்ட தன்மையுடன் காணப்படும். இதுவே பல்வேறு தோல் நோய்களுக்கு காரணமாகவும் அமைந்துவிடும்.
தோல் வறட்சிக்கு முக்கிய காரணம், அதன் அடியிலுள்ள எண்ணெய் சுரப்பிகள் நீர்ச்சத்தை இழப்பதுதான். இதுதவிர பரம்பரை வழியான பாதிப்புகள், இயக்கு நீர் குறைபாடு, சில மருந்துகளின் பக்கவிளைவு போன்றவற்றாலும் கூட இந்த குறைபாடு வருவதுண்டு.
சில வகை மருத்துகள் மற்றும் பழக்கவழக்கங்களினால் ஒவ்வாமை ஏற்பட்டு அதன் காரணமாகவும் தோல் நோய் ஏற்படலாம்.
தோல் நோய்க்கான சிறப்பு மருத்துவரின் ஆலோசனையின் பேரில், 'நைப்பேற்ற மருந்து' என்ற களிம்பை பாதிக்கப்பட்ட பகுதியில் தொடர்ந்து பூசி வந்தால் தோலில் ஏற்பட்ட வறட்சி நீங்கும். குளியல் சோப் பயன்படுத்துவதையும் தவிர்ப்பது நல்லது.
Sunday, July 20, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment