Thursday, July 17, 2008

சந்தேகம்

காலையில் அப்பாவிடம் அம்மா பேசியது அப்படி.

``ஏங்க, கலாவை, கோடம் பாக்கம் மீனாட்சி காலேஜ்லேயே சேர்க்கலாங்கறேன். சரின்னு சும்மாயிருக்காம, குரோம்பேட் வைஷ்ணவாலயும் இதைவிட நல்ல கோர்சுக்கு ட்ரை பண்ண லாங்கறீங்க. தேவையா இது? அவ காதல் கீதல்னு மாட்டினா என்னாவறது'' கேட்க, கலாவுக்குத்தான் ஆத்திரம் அதிகமானது.

``நான் காலேஜ்லயே சேரலைப்பா. கரஸ்பாண்டன்ஸ் கோர்ஸ்லயே படிக்கிறேன். அப்படியாவது அம்மாவோட சந்தேக வியாதி தீரட்டும்...'' கலா அழுதாள்.

``ச்சூ... அம்மாவானா எல்லாரும் அப்படித்தான் இருப்பாங்க கலா.''

``அதுக்காக இப்படியா பேசறது.''

``கலா... உன் அம்மாவுக் குச் சொந்த ஊர் தஞ்சாவூர். அங்க, சரபோஜி காலேஜ்லேயே படிக்காம, மெட்ராஸ் வந்து பிரசிடென்ஸி காலேஜ்ல தான் படிச்சு முடிச்சா. என்னையும், லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டா. அந்த அனுபவம்தான், இந்த பயத்திற்குக் காரணம். இப்ப புரியுதா...''

கலா, அம்மாவின் சந்தேகப் பின்னணி புரிந்து சிரிக்கலானாள்..

0 comments: