Thursday, July 17, 2008

வெட்கப் புகழ்

27& ம் நெம்பர் பஸ்ஸில் ஒரே நெரிசல். பின் பக்கமாக ஏறிய பரந்தாமன், எல்லோரும் முட்டி மோத முன் பக்கமாக வந்தார்.

கூட்ட நெரிசலில் தலையை குனிந்து கொண்டே வந்தவருக்கு கீழே இருந்த ஒரு பத்து ரூபாய் நோட்டு கண்ணை உறுத்தியது. நைசாக எடுத்துக்கொண்டார்.

``டிக்கெட்.... டிக்கெட்...'' கண்டக்டர் கத்திக் கொண்டே அருகே வந்தார். இவர் பக்கம் வந்ததும், பக்கத்தில் இருந்த பெரியவரைப் பார்த்து,

``என்ன பெருசு, நீங்க இறங்க வேண்டிய ஸ்டாபிங் கூட வந்துவிட்டது. எப்பதான் டிக்கெட்டுக்கு பணம் கொடுக்கப்போறே. ஓசியிலேயே பயணம் செய்ய வந்திருப்பீங்க போலி-ருக்கு.'' கண்டக்டர் திட்டினார்.

பெரியவர் நெளிந்து கொண்டே காலியான தனது பாக்கெட்டை தடவிக் கொண்டிருந்தார். உடனே பரந்தாமன்,

``ஏங்க அவரைத் திட்டுறீங்க. அவர் டிக்கெட்டுக்கான காசை நானே கொடுத்து விடுகிறேன்'' என்று சொல்லிக் கொண்டு இருக்கும்போதே,

``வண்டியில் ஏறும்போது பாக்கெட்டில் பத்து ரூபாயோடு-தான் வந்தேன். கூட்ட நெரிசலில் எங்கே விழுந்ததோ தெரிய வில்லை. நல்ல வேளையாக தெய்வம்போல வந்து என் மானத்தை காப்பாத்தினீங்க.'' பெரியவரின் புகழ்ச்சியை தலைகுனிவோடு கேட்டுக் கொண்டிருந்தார் பரந்தாமன்..

ச்சே. அம்மாவா, இப்படிப் பேசறது...?'' அவளோட பாசத்துக்குப் பின்னாடி, இத்தனை சந்தேக மிருக்கா?'' & அம்மாவை நினைத்துக் குமுறினாள் கலா.

0 comments: