Wednesday, July 16, 2008

கச்சேரி

பக்கத்து வீட்டு பார்வதி வீட்டிற்குள் நுழைந்ததும், பயந்துபோனான் பரமேஷ்.

``எனக்குத்தான் சர்க்கரைவியாதி இருக்குன்னு உனக்குத் தெரியுமில்ல. அப்புறம் எதற்கு சர்க்கரைப் பொங்கல் வைச்சே?'' எரித்துவிடும் பார்வையோடு கேட்டாள் பரமேஷின் அம்மா.

``பண்டிகை நாளில் கூட எங்களுக்குப் பிடிச்சதை செஞ்சி சாப்பிடக் கூடாதா?'' மனைவி மல்லிகா ஆதங்கத்தோடு கூறினாள்.

இருவரும் நடத்திய சண்டைக் கச்சேரியை ரசித்த வாறே வந்த வேகத்தில் வெளி யேறினாள் பார்வதி.

கோபத்தின் உச்சியிலிருந்த பரமேஷ் ``ஏம்மா... இதுவரைக் கும் பசுவும், கன்றும் போல நல்லாதானே இருந்தீங்க. இப்ப என்ன வந்தது? திடீர்னு எலியும், பூனையுமா மாறிட்டீங்க?''

``அது ஒண்ணுமில்லை பரமேசு... நம்ம பக்கத்து வீட்டு பார்வதி இருக்கிறாளே! அவளுக்கு மாமியாரும், மருமகளும் சேர்ந்திருந்தா பிடிக்காதாம். எதையாவது இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி சண்டை மூட்டி அவர்களைப் பிரிச்சி வேடிக்கை பார்ப்பாளாம். அதனால்தான் அவள் வரும்போது மட்டும் சண்டை போடற மாதிரி நடிக்கிறோம்'' அம்மா கூறியதைக் கேட்டு ஆச்சரியப்பட்டான் பரமேஷ்..

0 comments: