Wednesday, July 16, 2008

குழிப் பணியாரம்/கார வகை

தேவையானப் பொருட்கள்
புளித்த இட்லி மாவு- நான்கு கோப்பை
சோடா உப்பு- ஒரு சிட்டிகை
வெங்காயம் நறுக்கியது- அரைக்கோப்பை
பச்சைமிளகாய் நறுக்கியது-இரண்டு
இஞ்சி நறுக்கியது- ஒரு தேக்கரண்டி
கடுகு சீரகம் கலந்தது- ஒரு தேக்கரண்டி
உ.பருப்பு- ஒரு தேக்கரண்டி
கொத்தமல்லி நறுக்கியது- ஒரு மேசைக்கரண்டி
எண்ணெய்-கால்க்கோப்பை

செய்முறை

இட்லிமாவில் ஒரு சிட்டிகை சோடாவைச் சேர்த்து கலந்துவைக்கவும்.
ஒரு சிறிய சட்டியில் இரண்டு தேக்கரண்டி எண்ணெயை காயவைத்து கடுகுசீரகத்தை போட்டு வெடிக்கவிட்டு உளுத்தப்பருப்பைப் போட்டு சிவக்க வறுக்கவும்.
பிறகு வெங்காயம், பச்சைமிளகாய்,இஞ்சியைச் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வெந்தவுடன் கலவையை மாவில் கொட்டவும், அதனுடன் கொத்தமல்லியையும் போட்டு நன்கு கலக்கிக் கொள்ளவும்.
பிறகு குழிபணியார சட்டியின் குழிகளில் ஒரு தேக்கரண்டி எண்ணெயை ஊற்றவும், எண்ணெய் காய்ந்ததும் மாவு கலவையை குழிகளில் முக்கால் வரையில் ஊற்றி வேகவிடவும்.
கூர்மையான கத்தி அல்லது கம்பியைக் கொண்டு பணியாரத்தை திருப்பிவிட்டு வேகவிடவும்.
இரண்டு புறமும் இளஞ்சிவப்பாக வெந்தவுடன் எடுத்து தேங்காய் சட்னி அல்லது கோழி குருமாவுடன் சூடாக பரிமாறவும்.


குறிப்பு:
இட்லி மாவு கைவசம் இல்லாவிடில் இரண்டு கோப்பை இட்லி அரிசி, அரைக்கோப்பை உளுந்து, ஒரு தேக்கரண்டி வெந்தயம், ஒருதேக்கரண்டி கடலைப்பருப்பு ஆகியவற்றை ஊறவைத்து கெட்டியாக அரைத்து, ஒரு இரவு முழுவதும் அதை ஊறவைத்து ஒரு தேக்கரண்டி உப்பும், ஒரு சிட்டிக்கை சோடாவையும் கலந்து மாவை தயாரித்துக் கொள்ளலாம்.

0 comments: