Wednesday, July 16, 2008

பேச்சுலர்ஸ் ரவைகிச்சடி

தேவையானப் பொருட்கள்
ரவை- இரண்டு கோப்பை
ஃபுரோஜன் காய்கறி-ஒரு கோப்பை/விருப்பமானவை
நறுக்கிய வெங்காயம்-ஒன்று
நறுக்கிய தக்காளி-ஒன்று
இஞ்சி- ஒரு சிறிய துண்டு
சாம்பார் பொடி-ஒரு தேக்கரண்டி
கொத்தமல்லி- ஒரு பிடி
டால்டா-ஒரு தேக்கரண்டி
எண்ணெய்- இரண்டு மேசைக்கரண்டி
கடுகு சீரகம்-ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை-ஒரு கொத்து
காய்ந்தமிளகாய்-ஒன்று
உப்புத்தூள்-ஒரு தேக்கரண்டி
எலுமிச்சைசாறு-ஒரு தேக்கரண்டி

செய்முறை
ரவையை இரண்டு தேக்கரண்டி எண்ணெயில் நன்கு வறுத்து வைக்கவும்.
வாயகன்ற பாத்திரத்தில் டால்டாவையும் எண்ணெயையும் கலந்து ஊற்றி சூடானதும் கடுகுசீரகம் பின்பு காய்ந்தமிளகாய் கறிவேப்பிலையைப் போட்டு வறுக்கவும்.
அதன் பிறகு வெங்காயம்,இஞ்சியைப் போட்டு சிவக்க வறுத்து அதில் தக்காளி,சாம்பார்பொடி,உப்புத்தூள்,ஆகியவற்றைப் சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்கு வதங்கியவுடன் காய்கறி மற்றும் கொத்தமல்லியை போட்டு கிளறிவிட்டு மூன்றரைக் கோப்பை தண்ணீரைச் சேர்த்து கொதிக்கவிடவும்.
கலவை கொதித்தவுடன் அனலைக் குறைத்து ரவையை சிறிது சிறிதாகத் தூவி பின்பு எலுமிச்சை சாற்றை சேர்த்து நன்கு கிளறிவிட்டு ஒரு ஐந்து நிமிடம் சிம்மில் வைத்திருந்து இறக்கிவிடவும்.

0 comments: