இது பள்ளிக்கும் கொடுத்து அனுப்பலாம். காலை மாலை டிபனாகவும் சாப்பிடலாம்.டூருக்கும் எடுத்து செல்லலாம்
தேவையானப் பொருட்கள்
பிரெட் சிலைஸ் - 12
காய் வேக வைக்க
-----------------
உருளை கிழங்கு -ஒன்று (பொடியாக அரிந்து கொள்ளவும்)
கேரட் - ஒன்று (பொடியாக அரிந்து கொள்ளவும்)
பீன்ஸ் - நாலு (பொடியாக அரிந்து கொள்ளவும்)
புரோஸன் பட்டாணி - ஒரு டேபுள் ஸ்பூன்
புரோஸன் கார்ன் - ஒரு டேபுள் ஸ்பூன்
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு தூள் - ஒரு தேக்கரண்டி
வதக்கி கொள்ள
--------------
வெங்காயம் - இரு நூரு கிராம் (பொடியாக அரிந்தது)
கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி
கொத்து மல்லி தழை - கால் கட்டு (பொடியாக அரிந்தது)
பச்ச மிளகாய் - இரண்டு (பொடியாக அரிந்தது)
எண்ணை - இரண்டு தேக்கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - அரை தேக்கரண்டி
செய்முறை
காய்களை பொடியாக அரிந்து உப்பு,மஞ்சள் பொடி,மிளகாய் தூள் சேர்த்து கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி தீயை சிம்மில் வைத்து ஏழு நிமிடம் வேகவைக்கவும். அதற்குள் தண்ணீர் சுருண்டு விடும் இல்லை என்றால் தண்ணீரை வற்றவிட்டு கொள்ள வேண்டியது.
ஒரு வானலியில் எண்ணை ஊற்றி அதில் வெங்காயம், பச்ச மிளகாய் இஞ்சி பூண்டு போட்டு நல்ல வதக்கி , மஞ்சள் தூள்,மீதி உப்பு, கரம்மசாலா போட்டு நல்ல கிளறி,கொத்து மல்லி தழை,வெந்து சுருண்ட காய்கறிகள் சேர்த்து கிளறி ஆறவைக்கவும்.
//இது பிரெட் டோஸ்டரில் செய்வது//
இரண்டு பிரெட்டை எடுத்து அதில் காய் கறி கலவையை பரவலாக வைத்து டோஸ்டரில் மேலும் கீழும் பட்டர் தடவி டோஸ்டரை மூடவும்.இரண்டு நிமிடத்தில் வெந்து நல்ல கிரிஸ்பியாக வரும்.
குறிப்பு:
டோஸ்டர் இல்லாதவர்கள் தோசை தவ்வாவில் பட்டர் போட்டு இரணு பிரெட்டையும் தனித்தனியாக லேசக பொரித்தெடுத்து வெஜ் கலவையை பரவலாக வைத்து நல்ல அழுத்தி விட்டு மறுபடியும் இரண்டு பக்கம் மட்டும் பொன்முருகலாக பொரித்தெடுத்து சாப்பிடவும்.
Wednesday, July 16, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment